இறுதி அஞ்சலி அறிவித்தல்
மலர்வு 28.04.1954 | உதிர்வு 12.10.2025
அமரர் யோகராசா சிறிஸ்கந்தராசா

தாயகத்தில் திருகோணமலையிலும், புலம்பெயர்ந்து 1981ஆம் ஆண்டிலிருந்து பேர்லினில் வசித்து வந்தவருமாகிய திரு. யோகராசா சிறிஸ்கந்தராசா அவர்கள் கடந்த 12.10.2025 அன்று இயற்கை எய்தினார்.
இவர் காலஞ்சென்றவர்களான யோகராசா கெங்காம்பிகை தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவரான ரதி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான கந்தையா தில்லைநாயகி தம்பதியினரின் மருமகனுமாவார்.
இவர் வாழ்நாளில் பெரும்பகுதியை இனத்தின் விடுதலைக்காகவும், தமிழ் மொழிப் பற்றுடனும், பிறருக்கு முன்வந்து உதவுபவராகவும் தனது மனைவியையும் இணைத்து வாழ்ந்துவந்தார் என்பது பேர்லின் வாழ் தமிழர்கள் கண்முன்னே கண்டனர்.
ஈழத் தமிழர்கள் அகதிகளாக வந்த ஆரம்பக் காலங்களில் அரச அலுவலகங்களில் பல நாள்கள் படுத்துறங்க வேண்டிய நிலை ஏற்பட்டபோது அவர்களையும் இணைத்து உண்ணாவிரதப் போராட்டத்தை முன்நின்று நடாத்தி வெற்றிபெற்று அவர்களுக்கான தங்குமிட வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்ததனை பேர்லின் தமிழர்களால் மறந்திட முடியாது.
தொடர்ந்தும் ஈழத்தமிழர் நலன்புரிச் சங்கத்தில் இணைந்து பணியாற்றி உதவியதோடு சிறிது காலம் அதன் தலைவராகவும் செயற்பட்டிருந்தார்.
பேர்லின் தமிழாலயத்தில் நிர்வாகியாகவும், உதவிநிரவாகியாகவும் பணியாற்றியிருந்ததோடு. அதன்பின்னர் பணிபுரிந்த அனைத்து நிர்வாகிகளோடும் தோழமையுடன் அனுபவப் பகிர்வுகளையும்,
ஆலோசனைகளையும் வழங்கி காரியாலயச் செயற்பாட்டாளராகவும் இறுதிவரை பணியாற்றியிருந்தார். இவர் மாணவர்களுடன் மிகவும் அன்பாகப் பழகியமையால் சிறிமாமா என்று மாணவர்களின் மனங்களில் ஆழமாக இடம் பிடித்தார்.
அன்னாரின் இறுதி அஞ்சலி நிகழ்வு எதிர்வரும் 23.10.2025 வியாழக்கிழமை அன்று 11:00 மணிக்கு
Krematorium Ruhleben Am Hain1, 13597 Berlin
எனும் முகவரியில் நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம்
தொடர்புகளுக்கு:
கமலேஸ்: 0044 7762205703
சங்கர: 017621751446
செந்தில்: 01774806180
நந்தபாலன்: 01722956430
குமணன்: 015231036871
கஜன் : 017620229761