
இன்று | கந்த சஷ்டி விழா துவக்கம் |
22 அக்டோபர் 2025 புதன் | |
தேதி | 05 – ஐப்பசி – விசுவாவசு புதன் |
நல்ல நேரம் | 09:15 – 10:15 கா / AM 04:45 – 05:45 மா / PM |
கௌரி நல்ல நேரம் | 10:45 – 11:45 கா / AM 06:30 – 07:30 மா / PM |
இராகு காலம் | 12.00 – 01.30 |
எமகண்டம் | 07.30 – 09.00 |
குளிகை | 10.30 – 12.00 |
சூலம் | வடக்கு |
பரிகாரம் | பால் |
சந்திராஷ்டமம் | உத்திரட்டாதி ரேவதி |
நாள் | சம நோக்கு நாள் |
லக்னம் | துலா லக்னம் இருப்பு நாழிகை 04 வினாடி 20 |
சூரிய உதயம் | 06:02 கா / AM |
ஸ்ரார்த திதி | பிரதமை |
திதி | இன்று இரவு 07:40 PM வரை பிரதமை பின்பு துவிதியை |
நட்சத்திரம் | இன்று நாள் முழுவதும் சுவாதி |
சுபகாரியம் | கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள். |
இன்றைய ராசி பலன் | 22 அக்டோபர் 2025 புதன்

மேஷ ராசி நேயர்களே, குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். எதிர்பார்த்த காரியங்கள் தாமதமின்றி முடியும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

ரிஷப ராசி நேயர்களே, குடும்ப சவால்களை எதிர்கொள்ள முடியும். வெளிநாட்டு பயணங்களால் ஆதாயம் உண்டு. வீடு மாற்றலாகி செல்லக்கூடும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

மிதுன ராசி நேயர்களே, குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். வரும் எதிர்ப்புகள் சமாளித்து வெற்றி பெற முடியும். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

கடக ராசி நேயர்களே, குடும்ப செல்வாக்கு உயரும். பெற்றோர்கள் ஆதரவு பெருகும். உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

சிம்ம ராசி நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். சொந்த பந்தங்கள் வருகை தருவர். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

கன்னி ராசி நேயர்களே, குடும்பத்தில் ஒற்றுமை நிலைத்திருக்கும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.

துலாம் ராசி நேயர்களே, நிதானமான செயல்களால் நன்மைகள் பல உண்டு. தேக ஆரோக்கியம் பலம் பெரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

விருச்சிக ராசி நேயர்களே, குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். மற்றவர்களுடன் பணிவோடு பேசினால் காரியம் வெற்றி பெரும். கரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும்.

தனுசு ராசி நேயர்களே, குடும்பத்திற்கு தேவையான வசதிகளை மேம்படுத்த முடியும். தெய்வ வழிபாடு சிறப்பாக அமையும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மகர ராசி நேயர்களே, பிடிவாதப் போக்கை கைவிடவும். நண்பர்கள் சாதகமாக செயல்படுவர். கடன் தொந்தரவு அவ்வப்போது இருக்கும். புதுத் தொழில் யோகம் அமையும்.

கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தில் பொறுப்புகள் அதிகமாகும். மனதில் உள்ளதை ஒளிவு மறைவின்றி பேசவும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மீன ராசி நேயர்களே, அடுத்தவர் விமர்சனத்திற்கு செவி சாய்க்க வேண்டாம். நண்பர்களின் உதவி மனதிற்கு உற்சாகம் தரும். கணவன் மனைவிடையே பனிப்போர் வரும். உத்யோகத்தில் கவனம் தேவை.
தமிழ் ராசி பலன் வாரந்தோறும் | 20-10-2025 To 26-10-2025

மேஷ ராசி அன்பர்களே
மேஷ ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, குடும்பத்தில் தடைபட்ட வேலைகள் சீக்கிரத்தில் நடந்தேறும். உங்கள் முயற்சிக்கு ஏற்ற பலன்களும் உழைப்பிற்கு ஏற்ற வருமானமும் இருக்கும். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். புதிய ஆபரண பொருள் சேர்க்கை உண்டு. கொடுக்கல், வாங்கல் ஆதாயம் தரும். உடன்பிறந்தவர்களால் நன்மை உண்டு. குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்பட கூடும். புது வாகனம் வாங்குவது குறித்த யோசனை வரும். அடுத்தவர்களிடம் உதவி கேட்க தயக்கம் ஏற்படும். மனதில் தேவையில்லாத விஷயங்களை போட்டு குழப்பி கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரிப்பர். தொழில், வியாபாரத்தில் சுமாரான வருமானம் இருக்கும்.
பரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும்

ரிஷப ராசி அன்பர்களே
ரிஷப ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, நிதானமான செயல்பாடுகளால் காரிய வெற்றி உண்டாகும். பண வரவு திருப்தி தரும். வார்த்தைகளை அளந்து பேசவும்.குடும்பத்திலும் பொது இடங்களிலும் அனுசரித்து போவது நல்லது. மனம் யோக தியானத்தில் ஈடுபாடு கொள்ளும். முன்பு தடைபட்ட காரியங்களை மீண்டும் தொடர முடியும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உடல் நிலையில் சிறு சிறு உபாதைகள் வந்து போகும், வீட்டு செலவுகள் அனைத்தும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். நண்பர்கள் எப்போதும் உறுதுணையாக இருப்பர். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். குடும்பத்தில் தவிர்க்க முடியாத செலவுகள் வரும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
பரிகாரம் : தினமும் கிருஷ்ண கவசம் படிக்கவும்

மிதுன ராசி அன்பர்களே
மிதுன ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, குடும்பத்தில் எதிர்பாராத விஷயங்கள் நடக்கும். புது வீடு மாற்றம் ஏற்படும். உறவினர்களால் சந்தோஷம் அதிகரிக்கும். நண்பர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பயணங்களால் ஆதாயம் உண்டு. உடன்பிறப்பு வகையில் பண விரையம் ஏற்படும். மனதில் பட்டதை தைரியமாக பேசுவீர்கள். சொத்து பிரச்னைகள் சாதகமாக முடியும். கணவன் மனைவி உறவு திருப்தி தரும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். குடும்ப பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது. வீண் செலவுகள் அதிகம் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளவும். எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதமாகும். பெற்றோர் உடல் நலத்தில் கவனம் தேவை. புதிய முயற்சிகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில் மேன்மையடையும்.
பரிகாரம் : லக்ஷ்மி நரசிம்மரை வழிபடவும்

கடக ராசி அன்பர்களே
கடக ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன் படி, குடும்பத்தில் இதமான சூழல் நிலவும். குடும்பத்தில் மதிப்பு மரியாதை உயரும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். நீங்கள் எதிலும் தீவிரமாக யோசித்து நிதானமாக செயல்படக்கூடியவர். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை ஏற்படும். கடன் வாங்குவதை தவிர்க்க வீண் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. ருக்கும். உடன் பிறந்தோரால் அனுகூலம் உண்டு. கணவன் மனைவி உறவில் விட்டுகொடுத்து செல்வது அவசியம். கொடுக்கல் வாங்கலில் திருப்திகரமான நிலை இருக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். மறைமுக எதிரிகள் பலம் குறையும். மனதில் புது தெம்பும் உற்சாகமும் தோன்றும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். உத்தியோகத்தில் முன்னேற்றம் இருக்கும். தொழில் வியாபாரம் விருத்தியடையும்.
பரிகாரம் : அங்காள பரமேஸ்வரியை வழிபடவும்

சிம்ம ராசி அன்பர்களே
சிம்ம ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, குடும்பத்தில் பல முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள். உணவு பழக்கங்களில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். தன வரவு நன்றாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்க திட்டமிடலாம். நண்பர்களால் உதவி கிடைக்கும். உங்கள் எதிர்பார்ப்புக்கு தகுந்தோர் போல் ஒருவர் அறிமுகமாவார். உறவினர்கள் உதவுவார்கள். குடும்பத்தில் செலவுகள் தற்சமயம் அதிகரித்து காணப்படும். குடியிருக்கும் வீட்டை மாற்ற ஏற்படும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். திருமண முயற்சிகள் நல்ல பலனை தரும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வீட்டில் குதூகலம் அதிகரிக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
பரிகாரம் :தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்

கன்னி ராசி அன்பர்களே
கன்னி ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, குடும்பத்தில் வளைந்து போக வனத்துன் செயல்பட்டால் ஆதாயங்கள் கூடும். யோசிக்காமல் எடுக்கும் ஒரு சில முடிவுகளால் வீண் பிரச்சனைகள் வரக்கூடும். உங்கள் பெருந்தன்மையை மற்றவர்கள் பாராட்டுவர். உடல் உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு ஏற்படலாம். பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. பிரிந்து சென்ற திருமண முயற்சியில் சாதகமான பலன் கிடைக்கும். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவதால் பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவி மீண்டும் ஒன்று சேருவர். குடும்பத்தில் எல்லோரிடமும் அனுசரித்து செல்வது பல வகையில் நன்மையை தரும். வாகன பயணத்தின் போது மிகுந்த கவனம் தேவை. உத்யோக பணிகளை விரைந்து முடிக்கவும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
பரிகாரம் : பைரவரை வணங்கி வழிபடவும்

துலாம் ராசி அன்பர்களே
துலாம் ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, குடும்பத்தில் ஒரு சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். நெருங்கிய உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். முடிந்தவரை அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பொருளாதார நிலை எப்போதும் போல இருக்கும். உடல்பிறந்தவர்கள் நலனில் அக்கறைகொள்ளவும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். குடும்ப சூழ்நிலை திருப்திகரமாக இருக்கும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கடன் வாங்கும் சூழ்நிலையை முடிந்தவரை தவிர்த்து வருவது நல்லது. புது நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். பெற்றோர்களின் ஆலோசனை உதவியாக இருக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும்.
பரிகாரம் : சுக்கிர பகவானை வழிபடவும்

விருச்சிக ராசி அன்பர்களே
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, குடும்பத்தில் பொருளாதார பிரச்சனைகள் ஏதும் வர வாய்ப்பு இல்லை. பண வரவு நன்றாகவே உள்ளது. புதிய முயற்சிகள் எதையும் தற்சமயம் வேண்டாம். உங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் வரும். புதியவர்களின் நட்பு சந்தோஷத்தை கொடுக்கும். வருமானம் சீராக இருந்துவரும். அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் இருக்கும். வீட்டில் புதிய பொருட்கள் சேரும். கொடுக்கல் வாங்கலில் சுமூக நிலை காணப்படும். உடல் நலம் சீராக இருக்கும். மனதில் குழப்பங்கள் தோன்றி மறையும். பிரியமானவர்கள் மூலம் எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். குடும்பத்தினருடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. வாகனங்களால் செலவுகள் ஏற்படும். உறவினர்கள் சிலர் எதிராக செயல்பட வாய்ப்புண்டு. உத்யோகம் மாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.
பரிகாரம் : துர்கையை வழிபடவும்

தனுசு ராசி அன்பர்களே
தனுசு ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, புதிய முயற்சிகள் பலிதமாகும். ஆலய வழிபாடு மன அமைதியை தரும். சொந்த பந்தங்களால் ஒரு சில நன்மைகள் உண்டு. வீட்டில் நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். தன வரவு சுமாராக இருக்கும். பெற்றோரால் உதவிகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் வழியிலும் ஏற்றமான காலமாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மனதில் இருந்து வந்த இனம்புரியாத கவலை விலக ஆரம்பிக்கும். நட்பு வழியில் நல்ல செய்தி வரும். பயணங்களில் கவனமாக இருக்கவும்.குடும்பத்தில் விருந்தினர் வருகை அதிகரிக்கும். விருந்து மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரம் மந்த நிலையில் இருக்கும்.
பரிகாரம் : குருபகவானை வழிபடவும்

மகர ராசி அன்பர்களே
மகர ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வரும். குடும்பத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்படும். தூரத்து பயணங்கள் மேற்கொள்ளும் போது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த பொருளையும் சாப்பிட வேண்டாம். தாராள பணப்புழக்கம் இருக்கும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். உடல் நலம் பலம் பெரும். பண சம்பந்தமான விஷயங்களில் கண்டிப்புடன் இருக்கவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் ஏற்படும். குநண்பர்கள் வழியில் அனுகூலமான கிடைக்கும். உடன்பிறப்பு வகையில் சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. கடன் பிரச்சனை பாதியாக குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆன்மீக சுற்றுலா செல்ல விருப்பம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கம் நீங்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருந்து வரும்.
ரிகாரம் : ஸ்ரீ ராகவேந்திரரை வழிபடவும்

கும்ப ராசி அன்பர்களே
கும்ப ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, முன் பின் அறிமுகம் இல்லாதவர்களுடன் கவனமாக பழகவும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட்டாலும் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள், குடும்பத்துடன் செலவிடும் நேரத்தை அதிகரித்தால் மகிழ்ச்சி கூடும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். உடல் நிலை சீராக இருக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பர். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை கூடும். புது பொருள் வாங்க தாமதம் ஆகலாம். நீண்ட நாட்களாக நடக்காத காரியம் ஒன்று நடந்து முடியும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பர். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
பரிகாரம் : ஸ்ரீ சாய்பாபாவை வழிபடவும்

மீன ராசி அன்பர்களே
மீன ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, பொருளாதார நிலையில் லேசான பின்னடைவு ஏற்படலாம், இருப்பினும் சமாளிக் கூடிய திறமை உங்களிடம் இருக்கும். தன வரவு காரணமாக குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆன்மீக சிந்தனை உண்டாகும். பழைய இனிமையான சம்பவங்கள் நினைவுக்கு வரும். கடன் பிரச்சனையில் இருந்து ஓரளவு விடுபட முடியும். உடன்பிறந்தவர்களிடம் விட்டு கொடுத்து போவது நல்லது. வெளிநாடு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் நிறைய நன்மைகளும் ஏற்படும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும்.
பரிகாரம் : விநாயகரை வணங்கி வழிபடவும்
தமிழ் மாத ராசி பலன்கள் |
(01.10.2025 முதல் 31.10.2025) விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 15ம் தேதி முதல் ஐப்பசி மாதம் 14ம் தேதி வரை வாக்கிய பஞ்சாங்கப்படி 01-10-2025 முதல் 31-10-2025 வரை ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியே கிரக நிலைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட பொதுப்பலன்கள் ஆகும். இதில் அவரவர் ஜாதகத்தில் நடக்கும் நடப்பு திசை, புத்தி, அந்தரம் மற்றும் கோச்சாரம் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கும் பட்சத்தில் ஒரு சிலருக்கு பலன்கள் சற்று மாறுபடக்கூடும். இருப்பினும் ஒவ்வொருவரும் தெய்வ அனுகூலங்களை கூட்டுவதின் மூலமாக தனக்கு வரும் கெடுபலன்களை குறைத்து நல்ல பலன்களை அனுபவிக்க முடியும். (2025) அக்டோபர் மாதம் கிரக நிலை மாற்றம் : 03.10.2025 – துலாம் – புதன் 09.10.2025 – கன்னி – சுக்கிரன் 18.10.2025 – துலாம் – சூரியன் 27.10.2025 – விருச்சிக – செவ்வாய் ராசி பலன்களை கணித்து எழுதியவர் ஜோதிடர் ஆலந்தூர் A.வினோத் குமார் Ph.d (Astrology) (அலைபேசி: 09003019831) |
அக்டோபர் மாத ராசி பலன்கள் (2025)
மேஷ ராசி அன்பர்களே
இந்த மாதம் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும். மனதில் துணிச்சலும், தன்மைபிக்கையும் பிறக்கும். சின்ன சின்ன விஷயங்களுக்குக்கூட அதிகமாகப் பாடுபடவேண்டியிருக்கும். குடும்பத்தில் பல சவால்களை சந்திக்க வேண்டிவரும். எந்த ஒரு பிரச்சனையையும் சர்வ சாதாரணமாக எதிர்கொள்ள முடியும். சிக்கனமாக செலவழித்து சேமிக்க பழகவும். உடன்பிறப்புகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். பயணங்களின் போது உடமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும். வீடு வாகனம் வாங்குவது, விற்பது முயற்சிகள் கைகூடும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போகவும். எடுக்கும் முயற்சிகளில் தடைகள் தாமதங்கள் இருந்தாலும் எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் உங்கள் பேச்சிற்கு நல்ல மரியாதை இருக்கும். நெருக்கமானவர்களிடம் ஆலோசனை கேட்பது நன்மையை தரும். நீண்ட நாட்களாக தடைப்பட்டுக் கொண்டு இருந்த காரியம் கைகூடும். தொலைந்து போன பொருள் திரும்ப கிடைக்கும். உறவினர்கள் அனுசரணையாக நடந்து கொள்வர். மறைமுக எதிர்ப்புகள் தானாக விலகும். குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகள் ஒரு சில தடைகளுக்கு வெற்றி பெரும். கடன் பிரச்னைகளும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பிரியமானவர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இரவு நேரங்களில் பயணிக்க போது கவனம் தேவை. உடல் உபாதைகள் நீங்கும். வெளிநாடு தொடர்புடைய விஷயங்கள் சாதகமாக முடியும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புது தொழில் யோகம் அமையும்.
சந்திராஷ்டமம் : 23,24,25,26 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
ரிஷப ராசி அன்பர்களே
இந்த மாதம் குடும்ப வாழ்க்கை அமைதியான நிலையில் இருக்கும். நீண்ட கால முயற்சிகள் நல்ல பலனைத் தரும். இழுபறியில் இருந்த வேலைகள் சீக்கிரத்தில் முடிவடையும். மாதம் முதல் நாளிலிருந்து பண விவகாரங்களில் கணக்கு போட்டு நடந்தால் நெருக்கடி இல்லாமல் இருக்க முடியும். குடும்ப விஷயங்களில் பிறர் தலையிடுவதால் பிரச்னைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வீடு மற்றும் வாகனங்களால் ஆதாயம் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். வாழ்வில் எதிர்பாராத தடைகள், பிரச்னைகள் வந்து நீங்கும். திருமண முயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத பல திருப்பங்கள் மகிழ்ச்சியை கொடுக்கும். தேவையற்ற வாக்குவாதங்களால் மனநிம்மதி குறைய நேர்ந்தாலும் அது உடனடியாக சரியாகும். தொலைதூரப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். தேவையற்ற நட்பு வட்டாரங்களை தவிர்த்தால் வீண் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடித்து சேமிக்க பழகிக்கொள்ளவும். மருத்துவ செலவுகளை சமாளிக்க வேண்டிவரும். உங்களது செயல்பாடுகள் மற்றவர்கள் ஆச்சரியம் படுப்படியாக இருக்கும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிவரும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். வாகனங்களில் மெதுவாக செல்லவும். புது நண்பர்களிடம் மிகுந்த கவனத்தோடு பழகுவது அவசியம். குடும்பப் பிரச்னைகள் சில நேரங்களில் கவலையை ஏற்படுத்தும். பொது பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிவரும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
சந்திராஷ்டமம் : 26,27,28 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
மிதுன ராசி அன்பர்களே
இந்த மாதம் குடும்ப சூழ்நிலைகள் சாதகமாக மாறும். முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் உங்களை வந்தடையும். மனதில் எதையும் சாதிக்க முடியும் என்ற ஆற்றல் பிறக்கும். பல புதிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த இக்கட்டான நிலை நீங்கும். நெருங்கிய உறவினர்களால் சில பிரச்னைகள் வரும். நண்பர்களும் சில சமயங்களில் பகைவர்களாக மாறுவர். எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. புதிய வீடு வாகனம் வாங்குகிற முயற்சிகள் கைகூடும். பூர்வீக சொத்து விஷயங்களை கவனமாக கையாளுவும். யோகா, தியானம் மன அமைதிக்கு வழிவகுக்கும். திடீர் பணவரவுக்கு வாய்ப்புண்டு. உங்களுக்கு தொடர்பு இல்லாத விஷயங்களில் மற்றவர்களுக்காக தலையிட வேண்டாம். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. பெற்றோர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். சொந்த பந்தங்களின் ஆதரவு மகிழ்ச்சியினை உண்டாக்கும். மற்றவர்களிடம் அளவுக்கு அதிகமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. உங்கள் பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்ளவும். குடும்பத்தில் சிற்சில விவாதங்கள் வந்து போகும். சிக்கலான விஷயங்களை கூட சர்வ சாதாரணமாக முடிக்க முடியும். குடும்பத்தில் வரவை விட செலவுகள் ஒரு படி மேலே இருக்கும். உடல் நலம் மேம்படும். எதிலும் அவசரம் காட்டாமல் நிதானமாக செயல்படவும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. திட்டமிடாத பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். எல்லாவற்றிலும் நல்ல மாற்றம் முன்னேற்றம் உண்டாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
சந்திராஷ்டமம் : 1,2,3 & 28,29,30,31 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
கடக ராசி அன்பர்களே
இந்த மாதம் எல்லா விஷயத்திலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். பல நாட்களாக பட்ட கஷ்டங்களுக்கு நல்ல ஒரு விடிவு காலம் பிறக்கும். ஆன்மீக வழிபாடு மூலம் மன நிம்மதி கிடைக்கும். உங்களை சுற்றி இருப்பவர்களின் ஆதரவு பெருகும். எதிலும் அவசரபடாமல் பொறுமையாக இருந்து காரியம் சாதிக்கவும். குடும்ப வருமானம் போதிய அளவிற்கு இருப்பதால் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை. தேக நலனில் அக்கறைகொள்வது அவசியம். பிறருடன் வாக்குவாதம் செய்வதையும், தவிர்த்தல் வேண்டும். எத்தனை தடைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு ஜெயிக்க முடியும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டு. புது பொருள் சேர்க்கை உண்டாகும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. வீடு, வாகனத்தை சீர்படுத்த அதிகம் செலவழிக்க வேண்டிவரும். எதிரிகளால் பெரியளவில் தொல்லைகள் இருக்காது. கணவன்,மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் காலதாமதன்றி கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதில் சிக்கல் வரும். உறவினர்களிடையே இருந்த பகைமை பகைமை மாறும். முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. புது வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. திட்டமிட்ட பயணங்களை மேற்கொள்ள வேண்டிவரும். புதிய முயற்சிகள் சாதகமான பலனை தரும். உத்தியோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம் : 3,4,5,6 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
சிம்ம ராசி அன்பர்களே
இந்த மாதம் இனிய பேச்சால் மற்றவர்களை எளிதில் கவர முடியும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். ஆன்மிக பணிகளில் நாட்டம் கூடும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வீடு, வாகனம் சொத்து தொடர்பான விஷயங்களை கவனமாக கையாளுவும். குடும்ப வாழ்வில் தடைகள், பிரச்னைகள் வந்து நீங்கும். திருமணம் தொடர்பான பேச்சுக்கள் சாதமாக முடியும். தேவையில்லாமல் மற்றவர்கள் பிரச்னைகளை தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெகுதொலைவில் இருந்து வரும் செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். நீங்கள் தனியாளாக சென்று எல்லாம் வேலைகளையும் செய்ய வேண்டிவரும். விட்டுக்கொடுத்து போகும் மனப்பான்மை உங்களிடம் இருக்கும். வெளிநபர்களால் தேவையற்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது மிகவும் நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சலைக் குறைத்துக் கொள்ளமுடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று பின்னடைவு இருக்கும். எதிலும் சிந்தித்து செயல்படுவது, அனைவரையும் அனுசரித்து நடப்பது போன்றவற்றால் ஓரளவுக்கு சாதகமான பெற முடியும். அண்டை, மாநிலங்களுக்கு பயணங்கள் மேற்கொள்ளவேண்டிரும். வழக்கு விஷயங்கள் சாதகமாக அமையும். இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. ஆவலுடன் எதிர்பார்த்த காரியம் சீக்கிரத்தில் முடிவடையும். உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் மனநிறைவு உண்டாகும்.
சந்திராஷ்டமம் : 6,7,8 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
கன்னி ராசி அன்பர்களே
இந்த மாதம் குடும்ப வாழ்க்கை ஏற்றத்தாழ்வு நிறைந்ததக இருக்கும், இருப்பினும் சிறப்பாக சமாளிக்க முடியும். மன வலிமை கூடும். உங்களை திறமைகளை வெளிபடுத்துவதற்கான பல சந்தர்ப்பங்கள் அமையும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வு வந்து நீங்கும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். யாரிடத்திலும் அளவுக்கு அதிகமாக பேச வேண்டாம். வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. உடன்பிறப்பு களால் ஆதாயம் உண்டு. புதிய முயற்சிகளை தாராளமாக மேற்கொள்ளவும். வீடு, வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். மனதில் உள்ள குழப்பங்களை தவிர்க்க வேண்டியது அவசியம். எதிரிகளால் பிரச்னைகள் வந்து நீங்கும். குடும்ப அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும். தேவையற்ற விஷயங்களுக்காக மனவருத்தம் அடையாமல் இருப்பது நல்லது. உற்றார், உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். கொடுக்கல், வாங்கல் சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது மூலம் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். பயணங்களால் நற்பலன் உண்டு. சொத்து பிரச்சனையில் இழுபறி நிலை நீடிக்கும். குடும்பத்தில் திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும்.கணவன்,மனைவி ஒற்றுமை பலப்படும். திருமண முயற்சிகளில் சின்ன தடங்கல் ஏற்பட்டாலும் அதன் பிறகு நல்ல வரன் அமையும். இது வரை தடைப்பட்டு இருந்த காரியம் மீண்டும் புத்துணர்வு பெரும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். அண்டை, அயலாரிடம் நட்பு உறவு ஏற்படும். மற்றவர்களை நம்பி எந்த காரியத்தையும் செய்ய வேண்டாம். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
சந்திராஷ்டமம் : 8,9,10 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
துலாம் ராசி அன்பர்களே
இந்த மாதம் குடும்ப வாழ்க்கையில் பல சுவாரசியங்கள் இருக்கும். அக்கம் பக்கம் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் பல அனுகூலங்களை அடைய முடியும். எடுக்கும் முயற்சிகளில் ஒரு சில தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். எதையும் நிதானமாக கையாள்வது நல்லது. எதிர்மறை சிந்தனை தவிர்த்து நேர்மறை சிந்தனையை வளர்த்துக்கொள்ளவும். உஷ்ண சம்பந்தமான தொந்தரவு இருக்கும். குடும்ப சிக்கல்களால் மன நிம்மதி பாதிக்கப்படக்கூடும். உடன் பிறப்புகளிடம் சில மனஸ்தாபங்கள் வர வாய்ப்புள்ளது. விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுவும். பயணங்களின் போது உங்கள் உடமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும். வீடு, வாகனம் தொடர்பான செலவினங்கள் உண்டு. சொத்து விஷயங்கள் சாதகமாக அமையும். எதிரிகளால் பிரச்னை வந்து நீங்கும். குடும்பத் தேவைக்காக கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். எதிர்பாராத தடைகளும், பிரச்னைகளும் உண்டு. வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் கைகூடும். பல நாள் ஆசைகள், கனவுகள் நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். அண்டை, அயலாரின் உதவி கிடைக்கும். கணவன்,மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். திருமண காரியம் விரைவில் கைகூடும். அடுத்தவர்களிடம் வம்பு, சண்டைக்கு போகாமல் இருப்பது நல்லது. உறவினர்களால் சில மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். பொருள் விரயங்கள் ஏற்பட்டாலும் அது சுப விரயங்களாகவே இருக்கும். குடும்பத்தில் எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். யாரும் ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். உத்யோகத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும்.
சந்திராஷ்டமம் : 10,11,12 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
விருச்சிக ராசி அன்பர்களே
இந்த மாதம் பெரியளவில் மாற்றத்தைக் எதிர்பார்க்கலாம். எதிர்பாராத வழிகளில் இருந்து பணம் தேடி வரும். குடும்பத்தில் திட்டமிட்டு செலவு செய்தால், சேமிப்பிற்கும் வாய்ப்புள்ளது, மேலும் ஆடம்பர செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சிக்கவும். உங்கள் முயற்சிக்கு உண்டான பலன் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும், சுபச் செலவுகளும் ஏற்படும். வெளியூர் பயணங்கள் நன்மை தரும். வீட்டு பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்ற முடியும். பிரபலங்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளும் தாமதங்களும் ஏற்படும். உங்கள் பலம், பலவீனத்தை உணர்ந்து அதற்கேற்ப நடந்துகொள்வது நல்லது. அடுத்தவரை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியம் வேண்டாம். சாதாரணமாக பேசுவதைக் கூட சிலர் தவறாக புரிந்துக் கொள்வர். பழைய வீட்டை விரிவுபடுத்தும் எண்ணம் வரும். யாருக்கும் வாக்கு கொடுக்காமல் இருப்பது நல்லது. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். சமூக அந்தஸ்து உள்ளவர்களின் தொடர்பு கிட்டும். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிலவும். மனதில் எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் உருவாகும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் ஏற்படும். பிரியமானவர்கள் வகையில் சில மனக்கஷ்டம் வரலாம். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். இரவு நேர பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. அடிக்கடி பயணங்களால் அலைச்சல் ஏற்படும். எதிலும் கவனமுடன் இருந்தால் அதிக சிரமங்களைத் தவிர்க்கலாம். உத்தியோகத்தில் இருந்த டென்ஷன் குறையும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.
சந்திராஷ்டமம் : 12,13,14 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
தனுசு ராசி அன்பர்களே
இந்த மாதம் நிறைய பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். குடும்பத்திற்கு வேண்டியதை செய்துகொள்ள முடியும். எந்த சூழ்நிலையையும் வெற்றி கொள்ளும் ஆற்றல் அதிகரிக்கும். குடும்ப நிதி நிலைமை சீரடையும். ஒரு சிலருக்கு, சொந்த வீடு அமையும் வாய்ப்பும் உள்ளது. எடுக்கும் முயற்சிகளில் ஒரு சில தடைகள் ஏற்படும். பயணங்களால் நன்மை உண்டு. வீடு வாகனம் சொத்து தொடர்பான செலவினங்கள் உண்டு. மன குழப்பத்தை தவிர்க்க யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபாடு கொள்ளவும். நீங்கள் எதிர்பார்த்ததை போலவே எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். தள்ளி போன காரியம் விரைவில் முடியும். கடினமான சூழ்நிலையிலிருந்து விடுபட முடியும். உறவினர்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் பிரச்னைகளை அதிகம் சந்திக்க நேரிடும். உங்களுக்கு தேவையானதை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றிக்கொள்ள முடியும். நண்பர்களிடம் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் ஏற்படும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும். கணவன் மனைவிக்குள் பனிப்போர் ஏற்படும். குடும்ப அடிப்படை வசதிகள் பெரும். புதுமையான விஷயங்களை பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் ஏற்படும். குடும்ப நபர்களின் யோசனை கைகொடுக்கும். வாகன பயணங்களில் கவனம் தேவை. இரவு நேரப் பயணங்கள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளை இப்போதைக்கு தள்ளி வைக்கவும். முக்கிய காரியங்களை நேரிடையாக சென்று செய்து முடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருந்த எதிர்ப்புகள் குறையும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
சந்திராஷ்டமம் : 14,15,16 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
மகர ராசி அன்பர்களே
இந்த மாதம் பல புது திட்டங்களை உடனுக்குடன் செயல்படுத்த முடியும். குடும்பத்தில் மங்கள் நிகழ்வு உண்டாகும். தெய்வ அனுகூலம் உண்டு. எந்தவொரு காரியத்திலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். வேண்டியவர்களிடம் தேவையற்ற வாக்குவாதமும், ஒற்றுமைக் குறைவும் ஏற்பட வாய்ப்புண்டு. யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்து விஷயங்களில் ஆதாயம் உண்டு. வெளிநாட்டுத் தொடர்பால் ஆதாயம் உண்டு. சில நேரங்களில் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களில் வீண் பழியை சுமக்க நேரிடும். குடும்பத்தில் எதிர்பாராத விரயங்கள் ஏற்படும். தேக நலனில் கூடுதல் கவனம் தேவை. திட்டமிட்ட காரியங்களை சிறப்பான முறையில் முடிக்க முடியும். கொடுக்கல், வாங்கல் லாபகரமாக முடியும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிய சூழல் வரும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்னைகளால் மனநிம்மதி குறையும். மனக்கட்டுப்பாடு அவசியம். எதிரிகளின் தொல்லை வெகுவாக குறையும். கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். எனவே யாருக்கும் எந்த ஒரு வாக்குறுதியையும் தர வேண்டாம். கணவன் மனைவிக்குள் சண்டை, சச்சரவுகள் தவிர்க்கவும். மற்றவர்களுக்கு உதவி செய்வதாக சொல்லி பிரச்சனையில் மாட்டிக்கொள்ள வேண்டாம். குடும்பத்தில் உறவினர்கள் வருகை உங்களை உற்சாகத்தில் ஆழ்த்தும். வெளியிடங்களில் எப்போதும் கவனமாக இருக்கவும். உத்யோகத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
சந்திராஷ்டமம் : 16,17,18 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
கும்ப ராசி அன்பர்களே
இந்த மாதம் புதிதாக செய்ய விரும்பும் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். எதிர்க்கலாம் பற்றிய யோசனை அதிகம் இருக்கும். பொருளாதார உயர்வால் வாழ்க்கைத் தரம் உயரும். பல குடும்பத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். உற்றார், உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வரும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கவனமாக இருக்கவும். உணவுக் கட்டுப்பாடு அவசியம். புது பொருள் சேர்க்கை உண்டாகும். பொதுக் காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் இனிதே கைகூடும். பிராத்தனைகள் நிறைவேறும். வீட்டில் அவ்வப்போது தேவையற்ற செலவுகள் வரும். உடல் ஆரோக்கிய விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது. உற்றார், உறவினர்கள் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். தேவையற்ற அலைச்சல் அதிகரிப்பதால் உடல் சோர்வடையும். குடும்பத்தில் சுபிட்சமும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். கணவன் மனைவிடையே நெருக்கம் உண்டாகும். உங்கள சுற்றி இருப்பவர்களை அனுசரித்து போவது நல்லது. விஐபிகளின் அறிமுகமும் அவர்கள் மூலம் நன்மை உண்டாகும். இழுபறியிலிருந்த கோர்ட் வழக்கு ஓர் முடிவுக்கு வரும். அடுத்தவர் நலனுக்காக உழைக்க வேண்டிவரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
சந்திராஷ்டமம் : 18,19,20,21 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
மீன ராசி அன்பர்களே
இந்த மாதம் குடும்பத்தில் எத்தனை தடைகள் பிரச்னைகள் வந்தாலும் அதைத் தாண்டி வெற்றி பெறு முடியும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நன்மை தரும். பொருளாதார விஷயத்தில் கவனமுடன் செயல்படவும். மனதில் எதிர்மறை சிந்தனைகளை தவிர்க்கவும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும், சுபச் செலவுகளும் ஏற்படும். உறவினர்களால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். தவிர்க்க முடியாத செலவுகள் வரும். எதிரிகள் பலம் பாதியாக குறையும். திட்டமிட்டபடி பயணங்கள் மேற்கொள்ள முடியும். வெளிநாட்டு தொடர்பால் நன்மை உண்டு. குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. உற்றார், உறவினர்களும் வீண் பிரச்னைகளை ஏற்படுத்துவதால் மனநிம்மதி குறையும். தனவரவு ஓரளவு இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகளும் உண்டாகும். வதந்திகளை எப்போதும் பொருட்படுத்த வேண்டாம். பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிவரும். நட்பு வழியில் நன்மை வந்து சேரும். தொடர்ச்சியாக பல இடங்களுக்கு சென்று வருவதால் உடல் சோர்வு ஏற்படும். வழக்கு விவகாரங்களை தள்ளிப்போடவும். திருமண முயற்சிகளில் நல்ல வரன் அமையும். குடும்பத்தில் சொந்த பந்தங்களின் வருகை இருக்கும். கணவன்,மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய வாகனத்தை மாற்ற வேண்டிவரும். திட்டமிட்ட பயணங்கள் சிறப்பாக அமையும். கொடுக்கல், வாங்கலில் பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. உத்யோகத்தில் ஈகோ பிரச்சனை தலை தூக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
சந்திராஷ்டமம் : 21,22,23 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்