மட்டக்களப்பில் இருந்து மாகோ நோக்கி பிரயாணித்த புகையிரதத்தின் மீது வெலிகந்தை பகுதிக்கும் அசேலபுர பகுதிக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் காட்டு யானை ஒன்று மோதி உயிரிழந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (21.10.2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் ராங்கிகள் மற்றும் சரக்குகளை கொண்டு செல்லும் சரக்கு புகையிரதம் சம்பவ தினமான நேற்று பகல் 2.15 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து மாகோ நோக்கி பிரயாணித்த போது புகையிரதத்தில்; யானை மோதி உயிரிழந்தது.
இவ்வாறு உயிரிழந்த யானையை மீட்டு புதைப்பதற்கான நடவடிக்கையை வெலிகந்தை வனவிலங்கு பரிபாலனசபையினர் முன்னெடுத்து வருகின்றனர்.