அளவெட்டி ஆச்சிரமப் படுகொலை | 26.10.1987
அளவெட்டி
26.10.1987 அன்று இந்திய ராணுவம் நடத்திய அளவெட்டி ஆச்சிரம படுகொலை

அளவெட்டிக் கிராமம் யாழ். மாவட்டத்தில் வலிகாமத்தின் வடக்குப் பகுதியில் தெல்லிப்பளைப் பிரதேசசெயலகப் பிரிவினுள் அமைந்துள்ளது. அளவெட்டி அம்பனைப் பகுதியில் அளவெட்டி-மல்லாகம் ப.நோ.கூ.சங்கம் அமைந்துள்ள கட்டடத்திற்கு முன்பாக அளவெட்டி இந்து ஆச்சிரமம் அமைந்துள்ளது.
அளவெட்டிப் பிரதேசத்திலுள்ள இந்த இந்து ஆச்சிரமம் இந்து மக்களின் வயோதிபர் மடமாகவும், கடந்த கால வன்செயல்களால் கடும் பாதிப்புற்ற இளஞ்சிறார்கள் கல்வி கற்கும் இடமாகவும் செயற்பட்டுக்கொண்டிருந்தது.
1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் இருபத்தாறாம் நாள் இந்திய இராணுவத்தினரின் தாக்குதல்கள் ஆரம்பித்ததன் பின்னர் அளவெட்டியில் அமைந்துள்ள இந்து ஆச்சிரமத்தின் மீது இந்திய இராணுவத்தினரின் “முதலை” என்னும் எம்.ஐ.24 ரக உலங்குவானூர்தியால் நடத்திய றொக்கேட் தாக்குதலில் ஆச்சிரமத்திலுள்ள வயோதிபர்கள், சிறார்கள் உட்பட பதினைந்து பேர் உயிரிழந்தனர். பன்னிரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
26.10.1987 அன்று அளவெட்டி ஆச்சிரமப் படுகொலை படுகொலையில் கொல்லப்பட்டடோர் விபரம்:
இராசரத்தினம் கோமதி (வயது 15 – மாணவி)
இராசரத்தினம் ஞானகணேசன் (வயது 21)
குணசீலன் கோணேஸ்வரி (வயது 38 – மின்சார அத்தியட்சகர்)
பத்மநாதன் செல்வச்சந்திரன் (வயது 12 – மாணவன்)
தர்மலிங்கம் சிறீஸ்கந்தரா (வயது 25 – சாரதி)
துரைசிங்கம் மதி (வயது 01 – குழந்தை)
தம்பிராசா சிறீபவன் (வயது 12 – மாணவன்)
அமிர்தநாதர் நேசம்மா (வயது 50)
சின்னத்துரை தாங்கலிங்கம் (வயது 47 – வியாபாரம்)
சின்னத்தம்பி தம்பிராசா (வயது 56 – தொலைபேசி இயக்குனர்)
சின்னத்தம்பி இரத்தினம் (வயது 47 – வியாபாரம்)
சின்னையா இராசரத்தினம் (வயது 62 – வியாபாரம்)
சிவகுருநாதன் சிவபாக்கியநாதன் (வயது 41 – வியாபாரம்)
விஜயரத்தினம் பத்மராணி (வயது 33 – குடும்பப்பெண்)
வினாசித்தம்பி ஐயாத்துரை (வயது 80 – கமம்)
குறிப்பு: இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.