மலேசிய கடற்படை போர்க்கப்பலான ‘KM BENDAHARA’ இலங்கையை விட்டுப் புறப்பட்டது.
கொழும்பு
மலேசிய கடற்படை போர்க்கப்பலான ‘KM BENDAHARA’ அதன் விநியோக மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்து நேற்று வியாழக்கிழமை (30.10.2025) நாட்டை விட்டுப் புறப்பட்டது.
அத்துடன், இலங்கை கடற்படை கொழும்பு துறைமுகத்தில் கப்பலுக்கு பாரம்பரிய முறையில் கடற்படையினர் பிரியாவிடையளித்தனர்.

மேலும், ‘KM BENDAHARA’ போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருந்த காலத்தில், அதன் குழுவினர் கொழும்பு பகுதியில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலா தளங்களைப் பார்வையிட்டனர்.