யாழ். மணியந்தோட்டம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு இளைஞர்கள் கைது!

யாழ். மணியந்தோட்டம்

யாழ். மணியந்தோட்டம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு இளைஞர்கள் வியாழக்கிழமை (30.10.2025) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Ai Policy

யாழ். மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால், மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 2 கிராம் 540 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் 24 மற்றும் 25 வயதுடையவர்கள் ஆவர்.

கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களையும் , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply