தமிழீழ விடுதலையின் சாட்சியங்களாக தமிழீழ மாவீரர் துயிலும் இல்லங்கள்
தமிழீழம்

உலகத் தமிழினத்திற்கு தமிழீழ தனியரசு அமைக்கும் இலட்சிய உறுதியுடன் தமிழர்களுக்கு நேர்த்தியான அரசியல் திட்டம் என்பவை கொண்ட தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு 1976 கள் தொடக்கம் வரலாற்றுப் படிமுறை வளர்ச்சி நியதிக்கமைவாக எழுச்சி பெற்று தமது நிகரற்ற வலிமை காரணமாக உலகின் கவனத்தைத் தம்பால் ஈர்த்துள்ளனர். இந்த அற்புதங்கள் அனைத்தும் தமிழர்களின் நெஞ்சங்களில் நிறைந்தவர்களான மாவீரர்களின் தியாகத்தால் நடந்தேறியது
இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடுசெய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சிதருகின்றன.
என்று எமது தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் கூறியதை இவ்விடத்தில் நினைவு கூருவோமாக..
கண்ணீர் சிந்தி
கல்லறையை
களங்கப்படுத்தாதீர்கள்
விழிகளைத் துடையுங்கள்
விரைவாய்
அவன் வழி தொடருங்கள்
கல்லறைகள்
கண்ணீர் விடுவதற்கல்ல !
தாயக விடுதலை வேண்டி தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த கல்லறையில் உறங்கும் புனிதங்களான மாவீரர்கள் விதைக்கப்பட்டுள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் மாவட்ட வாரியாக இணைக்கப்பட்டுள்ளது
யாழ்ப்பாணம்
1.தென்மராட்சி – கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம்
2.வடமராட்சி-எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்
3.வலிகாமம்-கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம்
4.வடமராட்சி கிழக்கு- உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லம்
5.தீவகம்-சாட்டி மாவீரர் துயிலும் இல்லம்
முல்லைத்தீவு
6.ஆலங்குளம் – மாவீரர் துயிலும் இல்லம்
7.வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்
8.முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம்
9.தேராவில் மாவீரர் துயிலும் இல்லம்
10.தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லம்
11.இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லம்
12,இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லம்
13.முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லம்
14.அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம்
15.களிக்காடு மாவீரர் துயிலும் இல்லம்
16.மணலாறு மாவீரர் துயிலும் இல்லம்
17.பச்சைப்புல்மோட்டை மாவீரர் துயிலும் இல்லம்
கிளிநொச்சி
18.முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம்
19.கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்
மன்னார்
20.ஆண்டான்குளம் மாவீரர் துயிலும் இல்லம்
21.பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லம்
வவுனியா
22.ஈச்சம்குளம் மாவீரர் துயிலும் இல்லம்
மட்டக்களப்பு
23.தரவை மாவீரர் துயிலும் இல்லம்
24.தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லம்
25.வாகரை மாவீரர் துயிலும் இல்லம்
26.மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லம்
திருகோணமலை
27ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்
28.தியாகவனம் மாவீரர் துயிலும் இல்லம்
29. வெள்ளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்
அம்பாறை
30. கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம்