02 நவம்பர் 2025 ஞாயிறு – இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன்

02 நவம்பர் 2025 ஞாயிறு
தேதி16 – ஐப்பசி – விசுவாவசு
ஞாயிறு
நல்ல நேரம்07:45 – 08:45 கா / AM
03:15 – 04:15 மா / PM
கௌரி நல்ல நேரம்10:45 – 11:45 கா / AM
01:30 – 02:30 மா / PM
இராகு காலம்04.30 – 06.00
எமகண்டம்12.00 – 01.30
குளிகை03.00 – 04.30
சூலம்மேற்கு
பரிகாரம்வெல்லம்
சந்திராஷ்டமம்மகம் பூரம்
நாள்கீழ் நோக்கு நாள்
லக்னம்துலா லக்னம் இருப்பு நாழிகை 02 வினாடி 30
சூரிய உதயம்06:03 கா / AM
ஸ்ரார்த திதிதுவாதசி
திதிஇன்று அதிகாலை 03:18 AM வரை ஏகாதசி பின்பு துவாதசி
நட்சத்திரம்இன்று பகல் 02:04 PM வரை பூரட்டாதி பின்பு உத்திரட்டாதி
சுபகாரியம்மருந்து உண்ண, பேட்டி காண, யாத்திரை செய்ய சிறந்த நாள்.

மேஷ ராசி நேயர்களே, குடும்பத்திற்கு தேவையானது கிடைக்கும். வேற்றுமதத்தவர் உதவுவர். உற்றார், உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். உத்யோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே, விருப்பமான பயணங்களை மேற்கொள்ள முடியும். எதிலும் பொறுமையை கடைப்பிடிப்பது முக்கியம். பிரியமானவர்கள் பக்கபலமாக இருப்பர். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மிதுன ராசி நேயர்களே, விருப்பமானவர்களுடன் மனம் விட்டு பேசவும். தன வரவுக்கு வாய்ப்பு உண்டு. பிரபல நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கடக ராசி அன்பர்களே, குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். தெய்வ அனுகூலம் உண்டு. உடல் நலனில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

சிம்ம ராசி நேயர்களே, சொந்த பந்தங்கள் உதவி கேட்டு வருவர். வரவு செலவு கணக்குகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்ப்புகள் தானாக அடங்கும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

கன்னி ராசி நேயர்களே, யதார்த்தமாகப் பேசுவதை கூட சிலர் தவறாக புரிந்துகொள்வர். பொது காரியங்களில் ஈடுபாடு வரும். கடன் நெருக்கடிகள் ஓரளவு குறையும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

துலாம் ராசி அன்பர்களே, உங்களால் சுற்றி இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். மனக்கவலைகள் குறையும். பெற்றோர் வழியில் நன்மைகள் உண்டாகும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

விருச்சிக ராசி அன்பர்களே, அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். உறவினர்களால் வீண் செலவுகள் வரும். பிறர் விஷயங்களில் தலையிட வேண்டாம். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

தனுசு ராசி நேயர்களே, குடும்ப கௌரவம் உயரும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

மகர ராசி நேயர்களே, குடும்பத்தில் அனுசரித்து போவது நல்லது. வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம். மகிழ்ச்சியான செய்தி ஒன்று காதில் விழும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

கும்ப ராசி நேயர்களே, எதையும் ஒளிவு மறைவின்றி பேசுவது நல்லது. பொழுதுபோக்கு அம்சங்களில் நாட்டம் உண்டாகும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

மீன ராசி அன்பர்களே, குடும்பத்தில் குதூகலம் நிறையும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். புது தொழில் யோகம் அமையும்.


மேஷ ராசி அன்பர்களே

மேஷ ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, மனதில் நினைத்த விஷயத்தை உடனே செய்து முடிக்க இயலும். புத்திசாதூரியத்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டாகும். மன குழப்பங்கள் நீங்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதமாகும். குடும்பத்தில் செலவுகள் படிப்படியாக குறையும். மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும். திருமணம் தொடர்பான விஷயங்கள் கைகூடும். கடன் பிரச்னையை ஓரளவு சமாளிக்க முடியும். உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். அடிக்கடி பயணங்களால் அலைச்சல் ஏற்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கிடைக்கும். உத்யோகத்தில் மனநிறைவு ஏற்படும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

பரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும்

ரிஷப ராசி அன்பர்களே

ரிஷப ராசி அன்பர்களே, இந்த வாரம் வேண்டியவர்களுக்கு உதவி செய்வதால் மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்ப விவகாரத்தில் அடுத்தவர் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். எப்போதும் பொறுமையை கடை பிடித்தல் மட்டுமே பல காரியங்களை சாதிக்க முடியும். பண நெருக்கடி இருந்தாலும் அதை சமாளிக்க கூடிய சாமர்த்தியமும் இருக்கும். உங்கள் செயலில் வேகம் இருந்தாலும் பிடிவாத போக்கை மாற்றிக்கொண்டால் மட்டுமே பல நனமை உண்டாகும். யாரும் ஜாமீன் கையெழுத்து போட்டு பிரச்சனையில் மாட்டிக்கொள்ள வேண்டாம். வாகனங்களில் செல்லும்போதும் போதும் மிகுந்த கவனம் தேவை. குடும்பத்திற்காக நிறைய தியாகம் செய்யவேண்டியிருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்து போவது நல்லது. தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

பரிகாரம் : மகாலட்சுமியை வழிபடவும்.

மிதுன ராசி அன்பர்களே

மிதுன ராசி அன்பர்களே, இந்த வாரம் குடும்பத்திற்கு நன்மை தர கூடிய விஷயங்கள் நடக்கும். உங்களுக்கு தேவையானதை நிறைவேற்றி கொள்ளும் சந்தர்ப்பம் அமையும், இருப்பினும் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. புதுமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். பல சிக்கலான விஷயங்களை கூட மிக சாதாரணமாக கையாளு முடியும். குடும்ப விஷயங்களை யாரிடத்திலும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். புதிய பாதையில் பயணிக்க விருப்பம் ஏற்படும். பண வரவு எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் தற்போதைய தேவை பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் இனிதே நடக்கும். திட்டமிட்ட செயல்களை சிறப்பாக செய்து முடிக்க முடியும். உத்யோகத்தில் இருப்பவர்கள் கையில் இருக்கும் வேலையை விட்டுவிட்டு புதிய வேலைக்கு முயற்சிக்க வேண்டாம். தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும்.

பரிகாரம் : தினமும் நவக்கிரகத்தை சுற்றி வரவும்.

கடக ராசி அன்பர்களே

கடக ராசி அன்பர்களே, இந்த வாரம் குடும்பத்தில் பல மாற்றங்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம், மனதில் பல நல்ல சிந்தனைகள் உதிக்கும். மன நிம்மதிக்காக தியானம் செய்வது நல்லது. ஆன்மிகத்தில் அதிக ஆர்வம் ஏற்படும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் உயரும். பல பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். நீங்கள் திட்டமிட்டு செயல்படுவதில் கெட்டிக்காரர். திட்டமிட்ட பயணத்தில் ஒரு சில தடைகள் ஏற்பட வாய்ப்புண்டு. அக்கம் பக்கம் இருப்பவர்களுடன் வீண் விவாதங்கள் ஏற்பட கூடும், முடிந்தவரை மௌனமாக சாதிப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற முடியும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். உத்தியோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் தொடர்பான பயணம் ஏற்படும். .

பரிகாரம் : பைரவரை வழிபடவும்.

சிம்ம ராசி அன்பர்களே

சிம்ம ராசி அன்பர்களே, இந்த வாரம் ஆரோக்கிய விஷயத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்ளவும். உடல் உஷ்ணம் சம்பந்தமாக தொந்தரவு ஏற்பட வாய்ப்புண்டு. கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். செலவுகள் அனைத்தும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். வீட்டில் தடைபட்ட சுப காரியம் இனிதே நடைபெறும். பிரியமானவர்களின் வருகை இருக்கும். நண்பர்கள் மூலம் தக்க சமையத்தில் உதவி கிடைக்கும். எதிர்பாலினத்தவருடன் பழகும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.புதிய வீடு, மனை வாங்கும் யோகம் அமையும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்க முடியும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் முற்றிலும் தீரும். உத்யோகத்தில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தொழில் வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

பரிகாரம் : சிவன் வழிபாடு சிறப்பை தரும்.

கன்னி ராசி அன்பர்களே

கன்னி ராசி அன்பர்களே, இந்த வாரம் நெருக்கடியான பிரச்சனைகள் சமாளித்து அதில் இருந்து வெளியே வர முடியும். குடும்பத்தில் மன மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் உங்களது பெரிய பலமாக இருக்கும். நீங்கள் மேற்கொள்ள இருக்கும் பயணங்களும் அதனால் நன்மைகளும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் எந்த ஒரு தொந்தரவும் இருக்காது. எதையும் சிந்தித்து செயல்படுவதால் பல காரியங்களில் வெற்றி பெற முடியும். பண வரவு திருப்தியளிக்க கூடிய வகையில் இருக்கும். மற்றவர்களை நம்பி எந்த ஒரு காரியத்திலும் இறங்க வேண்டாம். பெரியோர்களின் அறிவுரையை ஏற்றுக்கொள்ளவும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.

பரிகாரம் : விநாயக பெருமானை வழிபடவும்.

துலாம் ராசி அன்பர்களே

துலாம் ராசி அன்பர்களே, இந்த வாரம் மனதில் துணிச்சலும் தன்னம்பிக்கையும் கூடும். வரும் குடும்பத்தில் பல நல்ல காரியங்கள் நடக்கும். புது முயற்சிகள் எந்த வித தடையும் இன்றி நடக்கும். வாக்கு சாதுர்யத்தால் பல நன்மைகள் ஏற்படும். தெய்வ அனுகூலம் கூடும். உங்கள் காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கவும். நீண்ட நாள் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். நண்பர்கள் வகையில் விரோதம் உண்டாக வாய்ப்புணடு. உறவினர்களோடு சுமுக உறவு ஏற்படும். வாகன யோகம் உண்டாகும். சொத்து விஷயங்களில் முன் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வருங்காலம் பற்றிய சிந்தனைகள் மனதில் அதிகம் இருக்கும். உத்தியோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத திருப்பு முனை ஏற்படும்.

பரிகாரம் : விஷ்ணு கோயிலுக்கு சென்று வரவும்

விருச்சிக ராசி அன்பர்களே

விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வாரம் குடும்ப வாழ்வில் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் பேச்சு திறமை தான் முழுமையான பலம். மனதில் பட்டதை தைரியமாக பேசும் துணிச்சல் இருக்கும். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். அனாவசிய பேச்சுக்களை தவிர்ப்பது மூலம், வரும் பிரச்னைகளை தவிர்க்கலாம். நீங்கள் செய்யும் காரியம் சின்னதாக இருந்தாலும் அதை மன நிறைவு ஏற்படும். தடைப்பட்டு வந்த காரியங்கள் விரைவில் கைகூடும்.அடுத்தவர்களின் ஆலோசனைகளில் தேவையானதை மட்டும் எடுத்துக்கொள்ளவும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. புதிய வாகனம் ஒன்றை வாங்க முடியும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் விவாதங்கள் செய்ய வேண்டாம். உத்தியோக இடத்தில் கவனமாக இருக்கவும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும்.

பரிகாரம் : துர்கையை வணங்கி வழிபடவும்.

தனுசு ராசி அன்பர்களே

தனுசு ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்கள் கோப தாபங்களை குறைத்து கொண்டால் நன்மை அதிக நன்மை உண்டு. பொது காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். பேச்சில் பொறுமையும் செயல்களில் நிதானமும் காரிய வெற்றிக்கு உதவும். உங்களது செயல்பாடுகள் அனைத்தும் திருப்திகரமாக இருக்கும். குடும்ப நபர்களின் ஒத்துழைப்பு சிறப்பான முறையில் இருக்கும். உங்களை நம்பி பல பொறுப்புகள் ஒப்படைக்க படும். குடும்ப செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். ஆன்மிக எண்ணம் மேலோங்கும். பழைய கடனை திரும்ப அடைக்க வழி கிடைக்கும். பெண்கள் வகையில் ஒரு சில நன்மைகள் உண்டு. குடும்பத்தில் ஏதாவது ஒருவகையில் தொந்தரவு ஏற்படும். பயணங்கள் செல்லும் போதும் வாகனங்களிலும் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

பரிகாரம் : சாஸ்தா வழிபாடு சிறப்பை தரும்.

மகர ராசி அன்பர்களே

மகர ராசி அன்பர்களே, இந்த வாரம் எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யவும். உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள முடியும். குடும்பத்தில் ஆனந்தமும் குதூகலமும் நிலவும். பக்தி உணர்வு மேலோங்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெற்றோர்களின் ஆதரவு வழக்கம் போல் இருக்கும். இழுபறியில் இருந்த காரியம் சீக்கிரத்தில் முடியும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நெருங்கிய உறவினர்களுடன் சின்ன மனஸ்தாபம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்தல் அவசியம். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். எந்த ஒரு காரியத்தையும் சற்று சிரமப்பட்டே முடிக்க வேண்டியதிருக்கும். உத்யோகத்தில் வேலை சுமை குறையும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

பரிகாரம்: பைரவரை வணங்கி வழிபடவும்

கும்ப ராசி அன்பர்களே

கும்ப ராசி அன்பர்களே, இந்த வாரம் குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் வரலாம், இருப்பினும் சுதாரித்து கொண்டு சரியான முடிவை இப்போதே எடுக்க வேண்டியிருக்கும். மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக பேசவும். உங்கள் இனிமையான பேச்சின் மூலம் மற்றவர்களை எளிதில் கவர முடியும். மற்றவர்களின் செயல்கள் சில நேரங்களில் கோபத்தை உண்டாக்கலாம். எந்த இடத்திலும் உங்கள் கவனத்தை சிதற விட வேண்டாம். குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். எப்போதும் அறிவுபூர்வமாக சிந்தித்து பல வெற்றிகளை குவிக்க முடியும். பணியிடங்களில் தேவையில்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

பரிகாரம் : சனீஸ்வரரை வணங்கி வழிபடவும்.

மீன ராசி அன்பர்களே

மீன ராசி அன்பர்களே, இந்த வாரம் குடும்பத்துடன் விருந்து, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியும். தெய்விக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கையில் எடுத்த வேலையை காலம் தாழ்த்தாமல் உடனுக்குடன் செய்து முடிக்க முடியும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிவரும். பல ஆன்மீக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். உறவினர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொது பிரச்சனைகளில் அதிகம் தலையிடாமல் இருப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க பழகவும். சுற்றி இருப்பவர்கள் மத்தியில் உங்கள் அந்தஸ்து உயரும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஏற்பட்ட மனவருத்தம் நீங்கி சகஜ நிலைக்கு திரும்ப முடியும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

பரிகாரம் : தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

மேஷ ராசி அன்பர்களே

மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் சாதகமான மாற்றங்களைக் காண முடியும். பொருளாதார நிலையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் பல முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியது வரும். பயணங்களின்போது உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். மனதில் தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். உங்கள் அனுபவ அறிவு வெளிப்படும். குடும்பத்தில் அனுசரித்து போவது நல்லது. வீடு வாகனம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். பூர்வீக சொத்து விஷயங்களை கவனமாக கையாளுவும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். குடும்பத்தில் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. தேவையற்ற வீண் செலவுகளை குறைக்க வேண்டியது அவசியம். மனதில் ஏற்படும் ஒரு சில குழப்பத்தினால் முக்கிய முடிவு எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும். பெற்றோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் பிரச்னைகள் ஏற்படும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உங்களை சுற்றி இருந்த தடைகள் யாவும் நீங்கும். எந்த ஒரு காரியத்தையம் செய்யும் முன் நன்கு யோசிக்கவும். இந்த மாதம் வரவுக்கு மீறிய செலவுகள் இருக்கும். உத்யோகத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

சந்திராஷ்டமம் : 20,21,22 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.


ரிஷப ராசி அன்பர்களே

ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்ப உறவுகளைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். பொருளாதாரத்தை பொறுத்த வரை நன்றாகவே இருக்கும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். இது வரை இருந்த தடைகள் சிக்கல்கள் எல்லாவற்றையும் உடைத்தெறிய முடியும். எந்தச் செலவையும் உங்களால் தவிர்க்க இயலாது. யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. எதிர்பாராத செலவினங்கள் உண்டு. உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டு. எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். கணவன், மனைவிடையே பனிப்போர் ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. அடிக்கடி பயணங்கள் செல்ல நேரிடும். குடியிருக்கும் வீட்டை சீர் செய்ய வேண்டிவரும். குடும்பப் பிரச்னைகள் அவ்வப்போது இருக்கும். திருமண முயற்சிகளில், தடங்கல்களும், தாமதமும் ஏற்படும். வண்டி, வாகன சேர்க்கை ஏற்படும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். உத்யோகத்தில் பல நல்ல பலன்கள் பெற முடியும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

சந்திராஷ்டமம் : 22,23,24,25 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்


மிதுன ராசி அன்பர்களே

மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவ்வளது சாதகமாக இல்லை. குடும்ப வாழ்வில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். எதிர்பாராத பணவரவு உண்டு. நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும்.தேக நலனில் கூடுதல் அக்கறைகொள்ள வேண்டியவது அவசியம். வெளியிடங்களில் உங்களின் பேச்சு பல சிக்கல்களை சந்திக்க வைக்கும். இம்மாதம் முழுவதும் வருமானம் திருப்திகரமாக இருக்கும். உற்றார், உறவுகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். எவ்வளவுதான் சிக்கனமாக இருக்க முயற்சித்தாலும், எந்தச் செலவையும் தவிர்க்க இயலாது. எதிர்பாராத பயணங்களால் செலவுகள் அதிகரிக்கும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் தடை இருக்கும். உற்றார், உறவினர்கள் உதவி கேட்டு வருவர். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். வீடு வாகனம் சொத்து தொடர்பான பிரச்னைகள் உருவாகும். ஒரு சிலருக்கு பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு மாறு வேண்டிவரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வண்டி, வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. இது வரை தடைபட்டு வந்த காரியம் மெல்ல கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

சந்திராஷ்டமம் : 25,26,27 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்


கடக ராசி அன்பர்களே

கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்பத்தினரின் ஆதரவை பெற முடியும். நீங்கள் சற்றும் எதிர்பாராத விஷயங்கள் நடக்கும். சுற்று வட்டாரத்தில் உங்கள் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படவும். குடும்பத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதார நிலையில் ஏற்றத் தாழ்வுகள் நீங்கும். பேச்சில் கவனம் தேவை. புதிய முயற்சிகள் வெற்றி பெறும். மனோபலம் அதிகரிக்கும். உடல் உபாதைகள் நீங்கும். வரவிற்குமீறிய செலவுகளையும் இம்மாதம் சமாளிக்க வேண்டியிருக்கும். திருமண முயற்சிகளில் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களிடம் பேசும் பொது மிகுந்த கவனம் தேவை. யாருக்கும் வாக்குறுதி தராமல் இருப்பது நல்லது. நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெறும். வர வேண்டிய பணம் சரியான நேரத்தில் கைக்கு வரும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பிரியமானவர்கள் வழியில் சுப விரயங்கள் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனை பல நேரங்களில் கைகொடுக்கும். புது வாகனம் வாங்குவது குறித்து யோசனை வரும். புது வேலை முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

சந்திராஷ்டமம் : 27,28,29 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்



சிம்ம ராசி அன்பர்களே

சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்களை சுற்றி இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். பண விஷயத்தில் சற்று கவனமாக இருக்கவும். நீண்ட நாட்கள் தடைபட்ட விஷயங்கள் இந்த மாதம் சாதகமாக முடியும். எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைகளும், தாமதங்களும் ஏற்படும். பயணங்களில் கவனம் தேவை. இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத அதிர்ஷ்டமும், திடீர் பணவரவும் உண்டு. குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். வாக்கு சாதுரியம் உண்டாகும். உடல் உஷ்ண சம்பந்தமான தொந்தரவுகள் இருக்கும். பண சேமிப்பிற்கு வாய்ப்பு குறைவு. குடும்பத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவுகள் உங்களை பின் தொடரும். மனக்குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். புது மனை, வீடு வாங்கும் யோகம் உண்டு. புதுமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து இருந்து நல்ல செய்தி வரும். கணவன் மனைவிக்கிடையே சின்ன மனஸ்தாபம் வரும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். மாத இறுதியில் குடும்பத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் ஒரு சில இடையூறுகள் வரும். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் இருக்கும்.

சந்திராஷ்டமம் : 2,3,4 & 30 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்


கன்னி ராசி அன்பர்களே

கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்பத்தில் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும். பல சவால்கள் நிறைந்ததாக இருக்கும். பொருளாதார நிலை நிலைமை சிறப்பாகவே இருக்கும். ஒவ்வொரு நாளும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எடுக்கும் முயற்சிகளில் தடை இருந்தாலும் விடா முயற்சியால் வெற்றி பெற முடியும். வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். எதிலும் பொறுமையாக இருந்து காரியம் சாதிக்கவும். பல அலைச்சலுக்கு பின் தான் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வாழ்க்கையில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். கணவன் மனைவியிடையே வாக்குவாதங்களை தவிர்ப்பது புதிய முயற்சிகள் எதுவானாலும் வெற்றியடைய வாய்ப்புண்டு. குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். எதிர்பார்ப்புகள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அது நிறைவேறும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் சில தாமதங்கள் உண்டாகும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில்

சந்திராஷ்டமம் : 4,5,6 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்


துலாம் ராசி அன்பர்களே

துலாம் ராசி அன்பர்களே, இந்த மாதம் பொருளாதார நிலைமை சாதாரணமாக இருக்கும். மனதில் நினைத்த காரியத்தை உடனே செய்து முடிக்க முடியும். எதிர்காலம் பற்றிய கவலை இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். இம்மாதத்தில் உணர்ச்சிபூர்வமாக பல முடிவுகளை எடுக்க நேரிடும். விலகி நின்ற நபர்கள் விரும்பி வந்து இணைவர். உடல் நலம் சீராக இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த காரியங்கள் சீக்கிரத்தில் முடியும். குடும்பத்தில் திட்டமிட்டு செலவு செய்யாவிட்டால் புதிய கடன்களை வாங்க வேண்டிய அவசியம் வரும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற விஷயங்களால் கருத்துவேற்றுமையும் குடும்பத்தில் ஒற்றுமையை பாதிக்கும். முடிந்த வரை தூர பயணங்களை இம்மாதத்தில் தவிர்ப்பது நன்மை செய்யும். வீடு மாறுவது குறித்த யோசனை வரும். எதிர்பாராத பணம் கைக்கு வந்தவுடன் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும்.

சந்திராஷ்டமம் : 6,7,8 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்


விருச்சிக ராசி அன்பர்களே

விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் பல ஆதாயமான விஷயங்களை எதிர்பார்க்கலாம். குடும்ப வருமானம் சொல்லும்படி இருக்கும். வேண்டியவர்கள் யாருக்கும் பண உதவி செய்ய வேண்டாம். விடாமுயற்சியால் எதிலும் வெற்றி பெற முடியும். திட்டமிட்ட பயணங்கள் சிறப்பாகவே அமையும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. ஆன்மிகம் தொடர்பான செலவினங்கள் அதிகரிக்கும். ஆரோக்கிய விஷயத்தில் சின்ன சின்ன தொந்தரவுகள் இருந்தாலும் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு நல்ல ஒரு தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் பல சந்தோஷமான விஷயங்கள் நடக்கும். புதிய வண்டி, வாகன சேர்க்கை உண்டு. ஆன்மீக எண்ணம் மேலோங்கும். இந்த மாதம் செலவுகள் சற்று கூடுதலாகவே இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். முயற்சி செய்யும் காரியங்கள் முன்னேற்றமடையும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். பண வரவில் தாமதம் ஏற்படும். மருத்துவ செலவுகள் வந்து போகும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

சந்திராஷ்டமம் : 8,9,10 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்


தனுசு ராசி அன்பர்களே

தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் பல வேலைகளை தனியாளாக நின்று முடிக்க வேண்டிவரும். எந்த ஒரு சிக்கல் வந்தாலும் அதை சமாளிக்கும் சாமர்த்தியம் இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்தி ஒன்று வரும். குடும்பத்தில் சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. புதிய முயற்சியிகளில் வெற்றிக்கான அதிக வாய்ப்புகள் உள்ளது. உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து போவது நல்லதும். பூர்வீக சொத்து விஷயங்களில் கவனமாக கையாளுவும். நண்பர்களால் சில பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை. பிறருக்குக் கடன் கொடுப்பதைக் கண்டிப்பாக தவிர்க்கவும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். வேண்டியவர்களுடன் சிறு சிறு கருத்துகள் வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும். குடும்பத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். சிலருக்கு வீடு மாற்றம் செய்ய வேண்டி வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகம் தொடர்பான பயணம் ஏற்படும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

சந்திராஷ்டமம் : 10,11,12 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்


மகர ராசி அன்பர்களே

மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் எல்லா விஷயங்களிலும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமான ஒன்று. குடும்பத்தில் வரவுக்கு ஏற்ற செலவுகளும் காத்து கொண்டு இருக்கும். உங்களுக்கு துளியும் சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். எத்தனை தடைகள், பிரச்னைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு ஜெயிக்க முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். மனதில் புது உற்சாகம் பிறக்கும். எந்த சூழ்நிலையையும் திறமையாக கையாள முடியும். வீடு வாகனம் சொத்து தொடர்பான செலவினங்கள் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடன் பிரச்னைகள் வந்து நீங்கும். கணவன், மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். வெளிநாட்டு தொடர்பால் ஆதாயம் உண்டு. பயணங்களால் தேவையற்ற அலைச்சல்கள் வரும். குடும்ப சுமைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப விரயங்களும் வீண் விரயங்களும் உண்டு. இம்மாதத்தின் இறுதியில் மருத்துவச் செலவுகளால் பணம் விரயமாகும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றங்கள் வரும். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

சந்திராஷ்டமம் : 12,13,14,15 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்


கும்ப ராசி அன்பர்களே

கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் நனவாகும். ஆரோக்கிய பிரச்சனைகளை சமாளிக்க சற்று போராட வேண்டியிருக்கும். குடும்பத்தில் வருமானத்திற்கு ஏற்ப செலவுகளை செய்தால் பிரச்சனைகள் இருக்காது. மேலும் புதிய முயற்சிகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம். குடும்ப விஷயங்களில் அடுத்தவர் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். உடம்பு தொந்தரவுகள் வராமல் இருக்க ஒரு முறை குடும்ப மருத்துவரை அணுகி முழு உடற் பரிசோதனையை செய்து கொள்ளவும். உங்களுடைய காரியங்களில் ஒரு சில தடை ஏற்பட வாய்ப்புண்டு, இருப்பினும் எல்லாம் தற்காலிகமானது தான் என்பதை நினைவில் கொள்ளக. வண்டி வாகனங்களுக்கு எதிர்பாராத செலவுகள் வந்து சேரும். இந்த மாதம் பல ஏற்றமான விஷயங்கள் நடக்கும். மாத தொடக்கத்திலிருந்தே அவசியமில்லாத செலவுகளைத் தவிர்க்க முயற்சி செய்யவும். பெண்கள் வழியில் ஆதாயம் உண்டு. பல நாட்களாக வராமல் இருந்த பணம் கைக்கு வரும். வரும் எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி நடை போட முடியும். தேவையில்லாத காரியங்களில் தலையிட்டு சிக்கலில் சிக்கி கொள்ள வேண்டாம். உத்யோக பணிகளில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

சந்திராஷ்டமம் : 15,16,17 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்


மீன ராசி அன்பர்களே

மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்பத்தில் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க வேண்டியது வரும். பொருளாதார நிலையில் உயர்வு ஏற்படும். நீண்ட நாளாக வர வேண்டிய பணம் வந்து சேரும். மனதில் நேர்மறையான சிந்தனையை வளர்த்துக்கொள்ளவும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். தேக நலனில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும், ஒரு முறைக்கு பலமுறை யோசித்து எடுக்கவும். பண விவகாரத்தில் கறாராக இருக்கவும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய ஆதாயத்தை உறுதியாக எதிர்பார்க்கலாம். வீண் செலவுகளால் பணம் விரயமாகும். திருமண முயற்சிகள் கைகூடும். ஒரு சிலருக்கு, வீடுமாற்றம் ஏற்படக்கூடும். வீடு, மனை, வாங்கும் யோகங்களும் கூடி வரும். இதுவரை முடியாமல் இருந்த காரியங்கள் சீக்கிரத்தில் முடியும். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் தீர்ந்து மனம் நிம்மதியடையும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். பிரியமானவர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சொந்த பந்தங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்ப பெரியோர்களின் அரவணைப்பு கிட்டும். புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். புது தொழில் யோகம் அமையும்.

சந்திராஷ்டமம் : 17,18,19.20 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்


Leave a Reply