கரும்புலி மேஜர் அருளன் / கரும்புலி மேஜர் சசி ஆகிய கரும்புலி மாவீரர்களின் நினைவுகளுடன் | 05.11.1999
நெடுங்கேணி
05.11.1999 அன்று “ஓயாத அலைகள் 03″ தொடர் நடவடிக்கையில் மணலாற்றில் அமைந்திருந்த சிறிலங்கா இராணுவத்தின் பராக்கிரமபுர இராணுவ தளத்தினை தாக்கியழிப்பதற்காக நகர்ந்து கொண்டிருந்தவேளை முல்லை மாவட்டம் நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் எதிர் பாராதவிதமாக ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலி மேஜர் அருளன் | கரும்புலி மேஜர் சசி ஆகிய கரும்புலி மாவீரர்களின் நினைவுகளுடன்..

கரும்புலி மேஜர் அருளன்
நந்தகோபாலன் துஸ்யந்தன்
ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 06.10.1977
வீரச்சாவு: 05.11.1999
05.11.1999 அன்று நெடுங்கேணி பகுதியில் “ஓயாத அலைகள் – 03” நடவடிக்கையின்போது வீரச்சாவு.
துயிலுமில்லம்: ஆலங்குளம்
துயிலும் நிலை: நினைவுக்கல்

கரும்புலி மேஜர் சசி
இராசரத்தினம் சுகந்தினி
சித்தன்கேணி, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 08.04.1978
வீரச்சாவு: 05.11.1999
05.11.1999 அன்று நெடுங்கேணி பகுதியில் “ஓயாத அலைகள் – 03” நடவடிக்கையின்போது வீரச்சாவு.
துயிலுமில்லம்: முள்ளியவளை
துயிலும் நிலை: வித்துடல்
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
