07 நவம்பர் 2025 வெள்ளி – இன்றைய ராசி பலன்
இன்றைய ராசி பலன்

| 07 நவம்பர் 2025 வெள்ளி | |
| தேதி | 21 – ஐப்பசி – விசுவாவசு வெள்ளி |
| நல்ல நேரம் | 09:15 – 10:15 கா / AM 04:45 – 05:45 மா / PM |
| கௌரி நல்ல நேரம் | 12:15 – 01:15 கா / AM 06:30 – 07:30 மா / PM |
| இராகு காலம் | 10.30 – 12.00 |
| எமகண்டம் | 03.00 – 04.30 |
| குளிகை | 07.30 – 09.00 |
| சூலம் | மேற்கு |
| பரிகாரம் | வெல்லம் |
| சந்திராஷ்டமம் | சுவாதி |
| நாள் | கீழ் நோக்கு நாள் |
| லக்னம் | துலா லக்னம் இருப்பு நாழிகை 01 வினாடி 40 |
| சூரிய உதயம் | 06:08 கா / AM |
| ஸ்ரார்த திதி | |
| திதி | இன்று பகல் 02:48 PM வரை துவிதியை பின்பு திரிதியை |
| நட்சத்திரம் | இன்று காலை 06:58 AM வரை கார்த்திகை பின்பு ரோகிணி |
| சுபகாரியம் | ஆபரணம் அணிய, தொழில் ஆரம்பம் செய்ய, சுபம் பேச சிறந்த நாள். |
| தமிழ் நாட்காட்டி நவம்பர் 2025 | |
| அமாவாசை | 19-நவம்பர்-2025 புதன்கிழமை |
| பௌர்ணமி | 05-நவம்பர்-2025 புதன் |
| கார்த்திகை | 06-நவம்பர்-2025 வியாழன் |
| சஷ்டி விரதம் | 26-நவம்பர்-2025 புதன் |
| சங்கடஹர சதுர்த்தி | 08-நவம்பர்-2025 சனி |
| சதுர்த்தி | 24-நவம்பர்-2025 திங்கள் |
| பிரதோஷம் | 03-நவம்பர்-2025 திங்கள் 17-நவம்பர்-2025 திங்கள் |
| திருவோணம் | 26-நவம்பர்-2025 புதன் |
| மாத சிவராத்திரி | 18-நவம்பர்-2025 செவ்வாய் |
| ஏகாதசி | 01-நவம்பர்-2025 சனி 16-நவம்பர்-2025 ஞாயிறு |
| அஷ்டமி | 12-நவம்பர்-2025 புதன் 28-நவம்பர்-2025 வெள்ளிக்கிழமை |
| நவமி | 13-நவம்பர்-2025 வியாழன் 29-நவம்பர்-2025 சனிக்கிழமை |
| அரசு விடுமுறை நாட்கள் | அரசு விடுமுறை இல்லை. |
| திருமண நாட்கள் | 03-நவம்பர்-2025 திங்கட்கிழமை வளர்பிறை 10-நவம்பர்-2025 திங்கட்கிழமை தேய்பிறை 16-நவம்பர்-2025 ஞாயிறு தேய்பிறை 23-நவம்பர்-2025 ஞாயிறு வளர்பிறை 27-நவம்பர்-2025 வியாழன் வளர்பிறை 30-நவம்பர்-2025 ஞாயிறு வளர்பிறை |
| திருவிழாக்கள் | பண்டிகை நாட்கள் இல்லை. |
இன்றைய ராசி பலன் | 07 நவம்பர் 2025 வெள்ளி

மேஷ ராசி நேயர்களே, பொது நலத்தில் ஆர்வம் ஏற்படும். மனதில் ஏற்பட்ட சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.

ரிஷப ராசி நேயர்களே, பொருளாதார சிக்கல் ஏற்பட்டு விலகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுக்கவும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மிதுன ராசி நேயர்களே, குடும்பத்தில் ஏற்பட்ட சலசலப்புகள் நீங்கும். மனதில் தெளிவு நிலை உண்டாகும். நண்பர்கள் வழியில் ஆதரவுப் பெருகும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

கடக ராசி நேயர்களே, யாரும் நம்பை புரிந்துகொள்ளவில்லையே என்ற ஆதங்கம் இருக்கும். சவால்கள், விவாதங்களை சந்திக்க நேரிடும். பயணங்களால் ஆதாயம் உண்டு. தொழில், வியாபாரம் சிறக்கும்.

சிம்ம ராசி நேயர்களே, குடும்பத்தில் எல்லோரையும் அனுசரித்துச் செல்லவும். சாதூர்யமான பேச்சால் எதையும் சாதிக்க முடியும். புது வீட்டிற்கு மாற வேண்டிய சூழல் வரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

கன்னி ராசி நேயர்களே, குடும்பத்தில் இருந்த பழைய சிக்கல்கள் தீரும். பல நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும். திருமண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

துலாம் ராசி நேயர்களே, எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். சுக சந்தோஷங்கள் அதிகரிக்கும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்தில் சகஜமான நிலை காணப்படும். கடந்த கால இனிமையான சம்பவங்கள் நினைவுக்கு வரும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

தனுசு ராசி நேயர்களே, குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கும். புதிய முயற்சிகள் கைகூடும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

மகர ராசி அன்பர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி தருணங்கள் அதிகமாகும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

கும்ப ராசி அன்பர்களே, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். தொலைந்து போன பொருள் திரும்ப கிடைக்கும். தேவையற்ற அலைச்சலால் உடல் சோர்வு ஏற்படும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மீன ராசி அன்பர்களே, தெய்வ வழிபாடு மூலம் மனக்குறைகள் தீரும். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பெற்றோர்களின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
தமிழ் ராசி பலன் வாரந்தோறும் | 03-11-2025 To 09-11-2025

மேஷ ராசி அன்பர்களே
மேஷ ராசி அன்பர்களே, இந்த வார பலன் படி, குடும்பத்தில் சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளவும். பொருளாதார வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்த பிரச்னையும் இருக்காது. தடைப்பட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமான பலன்தரும். குடும்பத்தில் திருப்திகரமான சூழ்நிலை காணப்படும். நீங்கள் திட்டமிட்ட காரியம் ஒவ்வொன்றாக நடக்க ஆரம்பிக்கும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். புது வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு மாற வேண்டிவரும். வாகனங்களைப் பயன்படுத்தும் போது அதிக கவனம் தேவை, தேவையற்ற வேகம் கூடாது. உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
பரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும்

ரிஷப ராசி அன்பர்களே
ரிஷப ராசி அன்பர்களே, இந்த வார பலன் படி, எங்கும், எதிலும் கவனமாக இருப்பது நல்லது. முக்கிய காரியங்களில் தடை வந்தாலும், இறுதியில் வெற்றிகரமாக முடிக்க முடியும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போகவும். குடும்பத்திற்காக நிறைய உழைக்க வேண்டியிருக்கும். மற்றவர்களின் பேச்சைக் கேட்டு எதிலும் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பண வரவு வெளியில் சொல்லும்படி இருக்கும். திடீர் மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. யாரிடத்திலும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். பயணத்தில் மிகுந்த கவனம் தேவை. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. உத்யோகத்தில் மனநிறைவு ஏற்படும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
பரிகாரம் : கிருஷ்ணரை வணங்கி வழிபடவும்

மிதுன ராசி அன்பர்களே
மிதுன ராசி அன்பர்களே, இந்த வார பலன் படி, அடுத்தவருக்கு கொடுத்த வாக்கைக் எப்படியும் காப்பாற்ற முடியும். நீங்கள் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் நலனில் கவனம் செலுத்துவது அவசியம். வெளி உணவுகளை கூடுமானவரை தவிர்க்கவும். சற்றும் எதிர்பார்க்காத விஷயங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே பனிப்போர் ஏற்படும். பெண்கள் வகையில் சில நன்மைகள் உண்டு. எதிரிகளின் பலம் மற்றும் பலவீனம் அறிந்து செயல்படவும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். உத்யோத்தில் உங்கள் கை ஓங்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
பரிகாரம் : மஹாவிஷ்ணுவை வணங்கி வழிபடவும்

கடக ராசி அன்பர்களே
கடக ராசி அன்பர்களே, இந்த வார பலன் படி, குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பதில் சிரமம் இருக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதமாகும். எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. வீடு, வாகனம் மூலம் செலவுகள் ஏற்படலாம். சமூக அந்தஸ்து வெகுவாக உயரும். உங்கள் விருப்பத்துக்கு மாறாக சில காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாகவே இருக்கும். குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை முற்றிலும் நீங்கிவிடும். உடல் நிலையில் கவனம் தேவை. கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். புதிய முயற்சிகள் எதையும் இப்போதைக்கு மேற்கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் ஆதரவு பெருகும். புது தொழில் யோகம் அமையும்.
பரிகாரம் : வராகியை வணங்கி வழிபடவும்

சிம்ம ராசி அன்பர்களே
சிம்ம ராசி அன்பர்களே, இந்த வார பலன் படி, குடும்பத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிவரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க ஒருவரை சந்திக்க நேரிடும். புது நண்பர்கள் அறிமுகமாவர். வீடு, வாகனம் தொடர்பான விஷயங்களில் செலவுகள் கூடும். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் டென்ஷன் உண்டாகலாம். உடல் ஆரோக்யத்தில் சிறு சிறு சங்கடங்கள் வரலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. ஆடம்பர செலவுகளை குறைத்துக சேமிக்க பழகவும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்தல் அவசியம். குடும்ப வருமானம் நல்லபடி இருக்கும். அடுத்தவரிடம் உதவி கேட்க தயக்கம் ஏற்படும். உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டை பெற்றுத்தரும். உத்யோகத்தில் அமைதி நிலவும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
பரிகாரம் : சூரிய பகவானை தினமும் வழிபடவும்

கன்னி ராசி அன்பர்களே
கன்னி ராசி அன்பர்களே, இந்த வார ராசி பலன் படி, குடும்பத்தில் இருந்த குழப்ப நிலை நீங்கும். பொருளாதாரத்தில் ஏற்றமான நிலை காணப்படும். நினைத்த காரியம் எதுவானாலும் கைகூடும். எந்த ஒரு வேலையைச் செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். வெளியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உங்களால் முடியாத விஷயங்களில் தலையிடாமல் ஒதுங்கியே இருப்பது நல்லது. கணவன், மனைவிடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்னையும் இருக்காது. மனம் வருந்துபடியான விஷயம் ஏதேனும் இருந்தால் மறந்துவிடுவது நல்லது. உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வெற்றியடையும்.
பரிகாரம் : லக்ஷ்மி நரசிம்மரை வழிபடவும்.

துலாம் ராசி அன்பர்களே
துலாம் ராசி அன்பர்களே, இந்த வாரம் பலன் படி, குடும்பத்தில் வரும் எதிர்ப்புகளை சமாளிக்க முடியும். பொருளாதாரம் பற்றிய கவலைகள் வேண்டாம் சிறப்பாக உள்ளது. உங்களை சுற்றி இருப்பவர்களிடம் ஏற்பட்ட மனவருத்தம் நீங்கும். குடும்பத்தில் சாதகமான சூழல் அமையும்உற்றார், உறவினர்கள் ஆதரவாக செயல்படுவர். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். குடும்ப பெரியோர்களின் அறிவுரை நடப்பது நல்லது. இக்கட்டான சூழ்நிலையிருந்து விடுபட முடியும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். முக்கிய திட்டங்களை பற்றி வெளியில் விவாதிப்பதை தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகை மாறும். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நற்செய்தி கிடைக்க தாமதம் ஆகலாம். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
பரிகாரம் : சுக்கிர பகவானை வழிபடவும்

விருச்சிக ராசி அன்பர்களே
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார ராசி பலன் படி, பல புதிய வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள முடியும். குடும்பத்தில் பல சௌபாக்கியங்கள் கிடைக்கும். புதிய முயற்சிகள் காலதாமதமாக பலன் கொடுக்கும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றவும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். தேவையற்ற விஷயங்களுக்காக கவலை பட வேண்டாம். மறைமுக எதிர்ப்புகள் விலகும்.குடும்பத்தில் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். அடுத்தவர்களுக்கு ஜாமீன் போடுவதால் வீண் பழி ஏற்படலாம். உத்யோகம் தொடர்பான பயணம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
பரிகாரம் : துர்கையை வழிபடவும்

தனுசு ராசி அன்பர்களே
தனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் திட்டமிடாத செலவுகள் வரும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். ஆன்மிக எண்ணம் மேலோங்கும். அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதிக் குறைவு உண்டாகலாம். உங்கள் கஷ்டங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். உடல் உபாதைகள் நீங்கும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் கை கூடும். கணவன் மனைவிடையே இணக்கமான போக்கு காணப்படும். குடும்ப வருமானத்திற்கு ஏற்ற செலவுகள் செய்தால் சிக்கல் இல்லாமல் இருக்கலாம். கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. இரவு நேர வாகன பயணங்களில் கவனமாக இருக்கவும். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும்.
பரிகாரம் : குரு பகவானை வழிபடவும்

மகர ராசி அன்பர்களே
மகர ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, முக்கிய பிரமுகர்களின் தொடர்பும், அவர்கள் மூலம் நிறைய உதவியும் கிடைக்கும். குடும்ப சிக்கல்கள் குறையும். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி நிம்மதி பெற முடியும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் பல வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பிரியமானவர்களின் வருகை இருக்கும். வீடு, வாகனம் ஆகியவற்றால் செலவுகள் ஏற்படும். கணவன் மனைவிடையே ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். முக்கிய பணிகளை செய்யும் போது ஒரு சில தடங்கல் வந்தாலும் இறுதியில் சுபமாக முடியும். அடிக்கடி பயணங்களால் நிறைய அலைச்சல் ஏற்படும். உத்யோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. தொழில், வியாபாரம் சிறக்கும்.
பரிகாரம் : நவக்கிரகத்தை தினமும் வழிபடவும்

கும்ப ராசி அன்பர்களே
கும்ப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் தேவை. ஆன்மீக பெரியோர்களின் ஆசி கிட்டும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் முற்றிலும் நீங்கும். அடுத்தவர் மூலம் மனசங்கடம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத பண வரவு ஏற்ப்பட வாய்ப்புள்ளது. வீண் செலவுகள் படிப்படியாக குறையும். வாங்கிய கடனை அடைத்துவிட முடியும். நெருங்கிய உறவினர்களின் உதவி கிடைக்கும். திருமணம் தொடர்பான விஷயங்கள் கைகூடும். குடும்ப விஷயத்துக்காக நிறைய அலைச்சல் இருக்கும், உடல் சோர்வு ஏற்படும், கவலை வேண்டாம். வாகனங்களைப் பயன்படுத்தும் போது கவனம் தேவை. உத்யோகத்தில் உங்கள் தனி திறமை வெளிப்படும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
பரிகாரம் : விநாயகரை வணங்கி வழிபடவும்

மீன ராசி அன்பர்களே
மீன ராசி அன்பர்களே, இந்த வார ராசி பலன்படி, குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். எதிர்ப்புகள் தானாக அடங்கும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். அடுத்தவருக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. வீண் மன சங்கடம் ஏற்படலாம். மனதில் பட்டதை எப்போதும் ஒளிவு மறைவின்றி பேசுவது நல்லது. முடிந்த வரை பழைய கடனை அடைத்துவிடுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தம் நீங்கும்.யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். குல தெய்வ பிராத்தனையை நிறைவேற்றவும். உடல் நலத்தில் கூடுதல் அக்கறை காட்டவும். கடன் தொல்லைகள் மனதை வாட்டும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் வேலைபளு கூடும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
பரிகாரம் : ஸ்ரீ ராகவேந்திரரை வழிபடவும்
| தமிழ் மாத ராசி பலன்கள் – நவம்பர் 2025 |
| (01.11.2025 முதல் 30.11.2025) விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 15ம் தேதி முதல் கார்த்திகை மாதம் 14ம் தேதி வரை வாக்கிய பஞ்சாங்கப்படி 01-11-2025 முதல் 30-11-2025 வரை ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியே கிரக நிலைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட பொதுப்பலன்கள் ஆகும். இங்கே பொதுவாக சொல்லப்பட்டுள்ள பலன்களில் ஒரு சில பிரச்சனைக்குரிய பலன்கள் சொல்லப்பட்டுருந்தால் அச்சப்பட தேவையில்லை. என்பதை தெரிவித்து கொள்கிறேன். ஏன் எனில் அவரவர் ராசிக்கேற்ற தெய்வங்களை வணங்குவதாலும், தினசரி தெய்வ வழிபாடு செய்வதாலும், அவரவர் சக்திக்கு ஏற்ற பரிகாரங்களை செய்வதன் மூலமாகவும் பிரச்சனைக்குரிய பலன்கள் மாற்றி நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த மாதம் கிரக நிலை மாற்றம் : 02.11.2025 – துலாம் – சுக்கிரன் 04.11.2025 – தனுசு – செவ்வாய் 10.11.2025 – புதன் (வ) 11.11.2025 – குரு (வ) 16.11.2025 – விருச்சிக – சூரியன் 26.11.2025 – விருச்சிக – சுக்கிரன் ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் ஜோதிடர் ஆலந்தூர் A.வினோத் குமார் Ph.d Astrology (அலைபேசி: 09003019831) |
நவம்பர் மாத ராசி பலன்கள் (2025)
மேஷ ராசி அன்பர்களே
மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் சாதகமான மாற்றங்களைக் காண முடியும். பொருளாதார நிலையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் பல முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியது வரும். பயணங்களின்போது உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். மனதில் தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். உங்கள் அனுபவ அறிவு வெளிப்படும். குடும்பத்தில் அனுசரித்து போவது நல்லது. வீடு வாகனம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். பூர்வீக சொத்து விஷயங்களை கவனமாக கையாளுவும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். குடும்பத்தில் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. தேவையற்ற வீண் செலவுகளை குறைக்க வேண்டியது அவசியம். மனதில் ஏற்படும் ஒரு சில குழப்பத்தினால் முக்கிய முடிவு எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும். பெற்றோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் பிரச்னைகள் ஏற்படும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உங்களை சுற்றி இருந்த தடைகள் யாவும் நீங்கும். எந்த ஒரு காரியத்தையம் செய்யும் முன் நன்கு யோசிக்கவும். இந்த மாதம் வரவுக்கு மீறிய செலவுகள் இருக்கும். உத்யோகத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
சந்திராஷ்டமம் : 20,21,22 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.
ரிஷப ராசி அன்பர்களே
ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்ப உறவுகளைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். பொருளாதாரத்தை பொறுத்த வரை நன்றாகவே இருக்கும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். இது வரை இருந்த தடைகள் சிக்கல்கள் எல்லாவற்றையும் உடைத்தெறிய முடியும். எந்தச் செலவையும் உங்களால் தவிர்க்க இயலாது. யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. எதிர்பாராத செலவினங்கள் உண்டு. உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டு. எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். கணவன், மனைவிடையே பனிப்போர் ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. அடிக்கடி பயணங்கள் செல்ல நேரிடும். குடியிருக்கும் வீட்டை சீர் செய்ய வேண்டிவரும். குடும்பப் பிரச்னைகள் அவ்வப்போது இருக்கும். திருமண முயற்சிகளில், தடங்கல்களும், தாமதமும் ஏற்படும். வண்டி, வாகன சேர்க்கை ஏற்படும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். உத்யோகத்தில் பல நல்ல பலன்கள் பெற முடியும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம் : 22,23,24,25 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
மிதுன ராசி அன்பர்களே
மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவ்வளது சாதகமாக இல்லை. குடும்ப வாழ்வில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். எதிர்பாராத பணவரவு உண்டு. நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும்.தேக நலனில் கூடுதல் அக்கறைகொள்ள வேண்டியவது அவசியம். வெளியிடங்களில் உங்களின் பேச்சு பல சிக்கல்களை சந்திக்க வைக்கும். இம்மாதம் முழுவதும் வருமானம் திருப்திகரமாக இருக்கும். உற்றார், உறவுகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். எவ்வளவுதான் சிக்கனமாக இருக்க முயற்சித்தாலும், எந்தச் செலவையும் தவிர்க்க இயலாது. எதிர்பாராத பயணங்களால் செலவுகள் அதிகரிக்கும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் தடை இருக்கும். உற்றார், உறவினர்கள் உதவி கேட்டு வருவர். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். வீடு வாகனம் சொத்து தொடர்பான பிரச்னைகள் உருவாகும். ஒரு சிலருக்கு பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு மாறு வேண்டிவரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வண்டி, வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. இது வரை தடைபட்டு வந்த காரியம் மெல்ல கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
சந்திராஷ்டமம் : 25,26,27 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
கடக ராசி அன்பர்களே
கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்பத்தினரின் ஆதரவை பெற முடியும். நீங்கள் சற்றும் எதிர்பாராத விஷயங்கள் நடக்கும். சுற்று வட்டாரத்தில் உங்கள் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படவும். குடும்பத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதார நிலையில் ஏற்றத் தாழ்வுகள் நீங்கும். பேச்சில் கவனம் தேவை. புதிய முயற்சிகள் வெற்றி பெறும். மனோபலம் அதிகரிக்கும். உடல் உபாதைகள் நீங்கும். வரவிற்குமீறிய செலவுகளையும் இம்மாதம் சமாளிக்க வேண்டியிருக்கும். திருமண முயற்சிகளில் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களிடம் பேசும் பொது மிகுந்த கவனம் தேவை. யாருக்கும் வாக்குறுதி தராமல் இருப்பது நல்லது. நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெறும். வர வேண்டிய பணம் சரியான நேரத்தில் கைக்கு வரும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பிரியமானவர்கள் வழியில் சுப விரயங்கள் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனை பல நேரங்களில் கைகொடுக்கும். புது வாகனம் வாங்குவது குறித்து யோசனை வரும். புது வேலை முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
சந்திராஷ்டமம் : 27,28,29 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
சிம்ம ராசி அன்பர்களே
சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்களை சுற்றி இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். பண விஷயத்தில் சற்று கவனமாக இருக்கவும். நீண்ட நாட்கள் தடைபட்ட விஷயங்கள் இந்த மாதம் சாதகமாக முடியும். எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைகளும், தாமதங்களும் ஏற்படும். பயணங்களில் கவனம் தேவை. இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத அதிர்ஷ்டமும், திடீர் பணவரவும் உண்டு. குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். வாக்கு சாதுரியம் உண்டாகும். உடல் உஷ்ண சம்பந்தமான தொந்தரவுகள் இருக்கும். பண சேமிப்பிற்கு வாய்ப்பு குறைவு. குடும்பத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவுகள் உங்களை பின் தொடரும். மனக்குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். புது மனை, வீடு வாங்கும் யோகம் உண்டு. புதுமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து இருந்து நல்ல செய்தி வரும். கணவன் மனைவிக்கிடையே சின்ன மனஸ்தாபம் வரும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். மாத இறுதியில் குடும்பத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் ஒரு சில இடையூறுகள் வரும். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் இருக்கும்.
சந்திராஷ்டமம் : 2,3,4 & 30 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
கன்னி ராசி அன்பர்களே
கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்பத்தில் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும். பல சவால்கள் நிறைந்ததாக இருக்கும். பொருளாதார நிலை நிலைமை சிறப்பாகவே இருக்கும். ஒவ்வொரு நாளும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எடுக்கும் முயற்சிகளில் தடை இருந்தாலும் விடா முயற்சியால் வெற்றி பெற முடியும். வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். எதிலும் பொறுமையாக இருந்து காரியம் சாதிக்கவும். பல அலைச்சலுக்கு பின் தான் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வாழ்க்கையில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். கணவன் மனைவியிடையே வாக்குவாதங்களை தவிர்ப்பது புதிய முயற்சிகள் எதுவானாலும் வெற்றியடைய வாய்ப்புண்டு. குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். எதிர்பார்ப்புகள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அது நிறைவேறும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் சில தாமதங்கள் உண்டாகும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில்
சந்திராஷ்டமம் : 4,5,6 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
துலாம் ராசி அன்பர்களே
துலாம் ராசி அன்பர்களே, இந்த மாதம் பொருளாதார நிலைமை சாதாரணமாக இருக்கும். மனதில் நினைத்த காரியத்தை உடனே செய்து முடிக்க முடியும். எதிர்காலம் பற்றிய கவலை இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். இம்மாதத்தில் உணர்ச்சிபூர்வமாக பல முடிவுகளை எடுக்க நேரிடும். விலகி நின்ற நபர்கள் விரும்பி வந்து இணைவர். உடல் நலம் சீராக இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த காரியங்கள் சீக்கிரத்தில் முடியும். குடும்பத்தில் திட்டமிட்டு செலவு செய்யாவிட்டால் புதிய கடன்களை வாங்க வேண்டிய அவசியம் வரும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற விஷயங்களால் கருத்துவேற்றுமையும் குடும்பத்தில் ஒற்றுமையை பாதிக்கும். முடிந்த வரை தூர பயணங்களை இம்மாதத்தில் தவிர்ப்பது நன்மை செய்யும். வீடு மாறுவது குறித்த யோசனை வரும். எதிர்பாராத பணம் கைக்கு வந்தவுடன் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும்.
சந்திராஷ்டமம் : 6,7,8 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
விருச்சிக ராசி அன்பர்களே
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் பல ஆதாயமான விஷயங்களை எதிர்பார்க்கலாம். குடும்ப வருமானம் சொல்லும்படி இருக்கும். வேண்டியவர்கள் யாருக்கும் பண உதவி செய்ய வேண்டாம். விடாமுயற்சியால் எதிலும் வெற்றி பெற முடியும். திட்டமிட்ட பயணங்கள் சிறப்பாகவே அமையும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. ஆன்மிகம் தொடர்பான செலவினங்கள் அதிகரிக்கும். ஆரோக்கிய விஷயத்தில் சின்ன சின்ன தொந்தரவுகள் இருந்தாலும் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு நல்ல ஒரு தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் பல சந்தோஷமான விஷயங்கள் நடக்கும். புதிய வண்டி, வாகன சேர்க்கை உண்டு. ஆன்மீக எண்ணம் மேலோங்கும். இந்த மாதம் செலவுகள் சற்று கூடுதலாகவே இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். முயற்சி செய்யும் காரியங்கள் முன்னேற்றமடையும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். பண வரவில் தாமதம் ஏற்படும். மருத்துவ செலவுகள் வந்து போகும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
சந்திராஷ்டமம் : 8,9,10 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
தனுசு ராசி அன்பர்களே
தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் பல வேலைகளை தனியாளாக நின்று முடிக்க வேண்டிவரும். எந்த ஒரு சிக்கல் வந்தாலும் அதை சமாளிக்கும் சாமர்த்தியம் இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்தி ஒன்று வரும். குடும்பத்தில் சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. புதிய முயற்சியிகளில் வெற்றிக்கான அதிக வாய்ப்புகள் உள்ளது. உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து போவது நல்லதும். பூர்வீக சொத்து விஷயங்களில் கவனமாக கையாளுவும். நண்பர்களால் சில பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை. பிறருக்குக் கடன் கொடுப்பதைக் கண்டிப்பாக தவிர்க்கவும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். வேண்டியவர்களுடன் சிறு சிறு கருத்துகள் வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும். குடும்பத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். சிலருக்கு வீடு மாற்றம் செய்ய வேண்டி வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகம் தொடர்பான பயணம் ஏற்படும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
சந்திராஷ்டமம் : 10,11,12 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
மகர ராசி அன்பர்களே
மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் எல்லா விஷயங்களிலும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமான ஒன்று. குடும்பத்தில் வரவுக்கு ஏற்ற செலவுகளும் காத்து கொண்டு இருக்கும். உங்களுக்கு துளியும் சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். எத்தனை தடைகள், பிரச்னைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு ஜெயிக்க முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். மனதில் புது உற்சாகம் பிறக்கும். எந்த சூழ்நிலையையும் திறமையாக கையாள முடியும். வீடு வாகனம் சொத்து தொடர்பான செலவினங்கள் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடன் பிரச்னைகள் வந்து நீங்கும். கணவன், மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். வெளிநாட்டு தொடர்பால் ஆதாயம் உண்டு. பயணங்களால் தேவையற்ற அலைச்சல்கள் வரும். குடும்ப சுமைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப விரயங்களும் வீண் விரயங்களும் உண்டு. இம்மாதத்தின் இறுதியில் மருத்துவச் செலவுகளால் பணம் விரயமாகும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றங்கள் வரும். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
சந்திராஷ்டமம் : 12,13,14,15 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
கும்ப ராசி அன்பர்களே
கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் நனவாகும். ஆரோக்கிய பிரச்சனைகளை சமாளிக்க சற்று போராட வேண்டியிருக்கும். குடும்பத்தில் வருமானத்திற்கு ஏற்ப செலவுகளை செய்தால் பிரச்சனைகள் இருக்காது. மேலும் புதிய முயற்சிகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம். குடும்ப விஷயங்களில் அடுத்தவர் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். உடம்பு தொந்தரவுகள் வராமல் இருக்க ஒரு முறை குடும்ப மருத்துவரை அணுகி முழு உடற் பரிசோதனையை செய்து கொள்ளவும். உங்களுடைய காரியங்களில் ஒரு சில தடை ஏற்பட வாய்ப்புண்டு, இருப்பினும் எல்லாம் தற்காலிகமானது தான் என்பதை நினைவில் கொள்ளக. வண்டி வாகனங்களுக்கு எதிர்பாராத செலவுகள் வந்து சேரும். இந்த மாதம் பல ஏற்றமான விஷயங்கள் நடக்கும். மாத தொடக்கத்திலிருந்தே அவசியமில்லாத செலவுகளைத் தவிர்க்க முயற்சி செய்யவும். பெண்கள் வழியில் ஆதாயம் உண்டு. பல நாட்களாக வராமல் இருந்த பணம் கைக்கு வரும். வரும் எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி நடை போட முடியும். தேவையில்லாத காரியங்களில் தலையிட்டு சிக்கலில் சிக்கி கொள்ள வேண்டாம். உத்யோக பணிகளில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
சந்திராஷ்டமம் : 15,16,17 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
மீன ராசி அன்பர்களே
மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்பத்தில் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க வேண்டியது வரும். பொருளாதார நிலையில் உயர்வு ஏற்படும். நீண்ட நாளாக வர வேண்டிய பணம் வந்து சேரும். மனதில் நேர்மறையான சிந்தனையை வளர்த்துக்கொள்ளவும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். தேக நலனில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும், ஒரு முறைக்கு பலமுறை யோசித்து எடுக்கவும். பண விவகாரத்தில் கறாராக இருக்கவும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய ஆதாயத்தை உறுதியாக எதிர்பார்க்கலாம். வீண் செலவுகளால் பணம் விரயமாகும். திருமண முயற்சிகள் கைகூடும். ஒரு சிலருக்கு, வீடுமாற்றம் ஏற்படக்கூடும். வீடு, மனை, வாங்கும் யோகங்களும் கூடி வரும். இதுவரை முடியாமல் இருந்த காரியங்கள் சீக்கிரத்தில் முடியும். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் தீர்ந்து மனம் நிம்மதியடையும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். பிரியமானவர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சொந்த பந்தங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்ப பெரியோர்களின் அரவணைப்பு கிட்டும். புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். புது தொழில் யோகம் அமையும்.
சந்திராஷ்டமம் : 17,18,19.20 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்