28 நவம்பர் 2025 வெள்ளி – இன்றைய ராசி பலன்
28-11-2025 | இன்றைய ராசி பலன்

| இன்று | அஷ்டமி |
| 28 நவம்பர் 2025 வெள்ளி | |
| தேதி | 12 கார்த்திகை – விசுவாவசு வெள்ளி |
| நல்ல நேரம் | 09:30 – 10:30 கா / AM 04:45 – 05:45 மா / PM |
| கௌரி நல்ல நேரம் | 12:15 – 01:15 கா / AM 06:30 – 07:30 மா / PM |
| இராகு காலம் | 10.30 – 12.00 |
| எமகண்டம் | 03.00 – 04.30 |
| குளிகை | 07.30 – 09.00 |
| சூலம் | மேற்கு |
| பரிகாரம் | வெல்லம் |
| சந்திராஷ்டமம் | பூசம் ஆயில்யம் |
| நாள் | மேல் நோக்கு நாள் |
| லக்னம் | விருச்சிக லக்னம் இருப்பு நாழிகை 03 வினாடி 15 |
| சூரிய உதயம் | 06:15 கா / AM |
| ஸ்ரார்த திதி | அஷ்டமி |
| திதி | இன்று மாலை 07:16 PM வரை அஷ்டமி பின்பு நவமி |
| நட்சத்திரம் | இன்று இரவு 10:45 PM வரை சதயம் பின்பு பூரட்டாதி |
| சுபகாரியம் | ஆபரணம் அணிய, தொழில் ஆரம்பம் செய்ய, சுபம் பேச சிறந்த நாள். |
| தமிழ் நாட்காட்டி நவம்பர் 2025 | |
| அமாவாசை | 19-நவம்பர்-2025 புதன்கிழமை |
| பௌர்ணமி | 05-நவம்பர்-2025 புதன் |
| கார்த்திகை | 06-நவம்பர்-2025 வியாழன் |
| சஷ்டி விரதம் | 26-நவம்பர்-2025 புதன் |
| சங்கடஹர சதுர்த்தி | 08-நவம்பர்-2025 சனி |
| சதுர்த்தி | 24-நவம்பர்-2025 திங்கள் |
| பிரதோஷம் | 03-நவம்பர்-2025 திங்கள் 17-நவம்பர்-2025 திங்கள் |
| திருவோணம் | 26-நவம்பர்-2025 புதன் |
| மாத சிவராத்திரி | 18-நவம்பர்-2025 செவ்வாய் |
| ஏகாதசி | 01-நவம்பர்-2025 சனி 16-நவம்பர்-2025 ஞாயிறு |
| அஷ்டமி | 12-நவம்பர்-2025 புதன் 28-நவம்பர்-2025 வெள்ளிக்கிழமை |
| நவமி | 13-நவம்பர்-2025 வியாழன் 29-நவம்பர்-2025 சனிக்கிழமை |
| அரசு விடுமுறை நாட்கள் | அரசு விடுமுறை இல்லை. |
| திருமண நாட்கள் | 03-நவம்பர்-2025 திங்கட்கிழமை வளர்பிறை 10-நவம்பர்-2025 திங்கட்கிழமை தேய்பிறை 16-நவம்பர்-2025 ஞாயிறு தேய்பிறை 23-நவம்பர்-2025 ஞாயிறு வளர்பிறை 27-நவம்பர்-2025 வியாழன் வளர்பிறை 30-நவம்பர்-2025 ஞாயிறு வளர்பிறை |
| திருவிழாக்கள் | பண்டிகை நாட்கள் இல்லை. |
இன்றைய ராசி பலன் | 28 நவம்பர் 2025 வெள்ளி

மேஷ ராசி நேயர்களே, எதிர்பார்க்காத அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு அவசியம். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெரும்.

ரிஷப ராசி நேயர்களே, மன அமைதிக்காக தியானம் செய்வது நல்லது. எதிர்பார்ப்புக்கு தகுந்தாற்போல் ஒருவர் அறிமுகமாவர். தேக நலனில் அக்கறைகொள்ளவும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

மிதுன ராசி நேயர்களே, குடும்ப செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். எப்போதும் இல்லாத மன சந்தோஷம் ஏற்படும். சொந்த விஷயங்களை வெளியில் பகிர வேண்டாம். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

கடக ராசி நேயர்களே, குடும்பத்தில் இருந்து வந்து குழப்ப நிலை நீங்கும். புது வீடு, மனை வாங்க வேண்டும் என்ற எண்ணம் வரும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

சிம்ம ராசி நேயர்களே, குடும்பத்தில் ஆதரவு பெருகும். முடிந்து போன விஷயங்களை பற்றி பேச வேண்டாம். வெளியில் கொடுத்த பணம் கைக்கு திரும்ப வரும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

கன்னி ராசி நேயர்களே, குடும்ப நபர்கள் சாதகமாக நடந்துகொள்வர். சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்யோகத்தில் வேலை பளு குறையும்.

துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பெற்றோர்களின் பரிபூர்ண அன்பு கிடைக்கும். பெண்களால் சில நன்மைகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

விருச்சிக ராசி நேயர்களே, மனதில் துணிச்சலும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உற்றார், உறவினர்கள் ஆதரவாக செயல்படுவர். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியும். தொழில், வியாபாரம் சீராகும்

தனுசு ராசி நேயர்களே, குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். மனக்கவலைகள் நாளடைவில் மறையும். நண்பர்கள் எப்போதும் உறுதுணையாக இருப்பர். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

மகர ராசி நேயர்களே, புத்தி சாதூரியமும் அறிவு திறனும் அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் மத்தியில் இருந்த பகைமை மாறும். உத்யோக மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.

கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

மீன ராசி நேயர்களே, குடும்ப எதிர்பார்ப்புகள் அதிகமாகும். புது நண்பர்களின் அறிமுகம் உற்சாகம் தரும். இரவு நேர வாகன பயணங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.
தமிழ் ராசி பலன் வாரந்தோறும் | 24-11-2025 To 30-11-2025

மேஷ ராசி அன்பர்களே
மேஷ ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் நல்லதும் கேட்டதும் கலந்தே நடக்கும். பொருளாதார நிலை எப்போதும் போல இருக்கும். உங்கள் காரியத்தில் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருக்கவும். எதிர்பார்த்த செலவுகளை விட எதிர்பாராத செலவுகள் தான் அதிகம் இருக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் பல காரியங்களை சாதிக்க முடியும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனமாக இருப்பது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் வீடு மாற்றலாகி செல்லகூடும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து செல்லவும். எதையும் ஒரு காரியத்தையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நன்மை தரும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும்.
பரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும்.

ரிஷப ராசி அன்பர்களே
ரிஷப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள முடியும். குடும்ப செல்வாக்கு அதிகரிக்கும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். புதிய நண்பர்களின் அறிமுகம் உற்சாகம் தரும். குடும்பத்தில் ஏதாவது ஒரு விஷயம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்படும். நெருங்கிய உறவினர்களுடன் மனஸ்தாபம் உண்டாகலாம். மனசங்கடம் வராமல் இருக்க குல தெய்வத்தை வழிபடவும். காரியத்தடை விலகும். பயணங்களில் கவனம் தேவை. பணத்தை சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்கவும். கணவன், மனைவி அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். எந்த ஒரு காரியத்தையும் சற்று சிரமப்பட்டே முடிக்க வேண்டியதிருக்கும். உத்யோகத்தில் தனி திறமைகள் வெளிப்படும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
பரிகாரம் : தினமும் கிருஷ்ண கவசம் படிக்கவும்.

மிதுன ராசி அன்பர்களே
மிதுன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் வரும் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து வெற்ற முடியும். மனதில் நினைத்திருந்த விஷயம் எளிதில் முடியும். பயணங்களால் நன்மை உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கூடும். எதையும் சிந்தித்து செயல்படுவதால் பல காரியங்களில் வெற்றி பெற முடியும். புதிய மனிதர்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். விருந்து, விழா நிகழ்சிகளில் கலந்துகொள்ள முடியும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் குறையும். கொடுக்கல் வாங்கல் திருப்தியாக இருக்கும். மற்றவர்களை நம்பி எந்த ஒரு காரியத்திலும் இறங்க வேண்டாம். பெரியோர்களின் அறிவுரையை ஏற்றுக்கொள்ளவும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். புது தொழில் யோகம் அமையும்.
பரிகாரம் : மஹாவிஷ்ணுவை வணங்கி வழிபடவும்

கடக ராசி அன்பர்களே
கடக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் சந்தோஷ தருணங்கள் ஏற்படும். வீடு, மனை சார்ந்த விஷயங்களில் தொய்வு நீங்கும். குடும்ப நபர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உங்களிடம் அபரிதமான திறமை இருக்கும். குடும்பத்தில் செலவுகள் எதிர்பார்த்ததை விட சற்று அதிகமாகவே இருக்கும். பண வரவு சுமாராக இருக்கும். மனதில் தெளிவு நிலை உண்டாகும். பொறுப்பாக செய்யும் காரியங்களால் உங்களின் மரியாதை அதிகரிக்கும். கணவன் மனைவிடையே ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். பயணங்களால் செலவுகளும், அலைச்சல்களும் ஏற்படும். தேவையில்லாத விஷயங்களில் ஆர்வம் காட்டாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் வெகுவாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பர். தொழில், வியபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
பரிகாரம் : விநாயகரை வழிபடவும்

சிம்ம ராசி அன்பர்களே
சிம்ம ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மனதில் அதிகம் இருக்கும். புதிய முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பண விஷயங்களில் யாரையும் நம்ப வேண்டாம். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிவரும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை. உங்களுடைய நல்ல செயல்களால் பெயர், புகழ் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பிரியமானவர்கள் வழியில் சில நன்மைகள் உண்டு. வாகன பராமரிப்பு செலவு கூடும். எதிர்பார்த்த பணம் சில தடங்கலுக்கு பின் கைக்கு வரும். பெண்கள் வகையில் சில அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய நபர்களுடன் பழகும் போது எச்சரிக்கையாக இருக்கவும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமை இருக்கும்.
பரிகாரம் : தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.

கன்னி ராசி அன்பர்களே
கன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் சுமூகமான சூழ்நிலை நிலவும். எந்த காரியங்களில் ஈடுபட்டாலும் மன தடுமாற்றம் இல்லாமல் இருப்பது நல்லது. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். பல எதிர்பாராத நன்மைகள் வந்து சேரும். பணப்புழக்கம் நன்றாக உள்ளது. மேலும், வரவேண்டிய நிலுவை பணம் கைக்கு வந்து சேரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள், தகவல்கள் வந்து சேரும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு பல விதத்திலும் உதவியாக இருப்பர். குடும்பத்துடன் ஆன்மிக பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். பெற்றோர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் இருந்த சிக்கல் தீரும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
பரிகாரம் : திருப்பதி பெருமாளை வணங்கி வழிபடவும்

துலாம் ராசி அன்பர்களே
துலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, நீங்கள் எதிர்பார்த்த நன்மைகள் அனைத்தும் கிடைக்கும். இது நாள் வரை இருந்த பிரச்சனைகள் தானாக விலகும். எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். சொந்த காரியங்களில் தாமதம் ஏற்படலாம். சின்ன விஷயங்களால் மன நிறைவை அடைவீர்கள். நண்பர்களிடம் கவனம் தேவை. திருமணம் மற்றும் சுப காரியங்கள் இனிதே நடைபெறும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். பெண்கள் வகையில் சில தொந்தரவுகள் வரும். கணவன் மனைவிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். குடும்பத்தில் திடீர் செலவுகள் வரும். மனதில் பல புதிய எண்ணங்கள் தோன்றும். ககுடும்ப விஷயங்களை யாரிடமும் பேசாமல் இருப்பது நல்லது. உத்யோக மாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் இருக்கும்.
பரிகாரம் : சுக்கிர பகவானை வணங்கி வழிபடவும்

விருச்சிக ராசி அன்பர்களே
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் பல புதிய திட்டங்களை தீட்டி அதை சரியான விதத்தில் பயன்படுத்த முடியும். கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிக்கும் ஆற்றல் இருக்கும். குடும்பத்தில் இருந்த மனஸ்தாபம் நீங்கும். இக்கட்டான சூழலில் உறவினர்கள் நண்பர்கள் உதவ முன்வருவார்கள். உறவினர்களிடம் சற்று கவனமாக இருக்கவும். குடும்ப பெரியோர்களிடம் உங்கள் குறைகளை சொல்லவும். எதிர்பாராத பல செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். முடிந்த வரை வெளியில் கடன் வாங்காமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பெண்கள் மூலம் சில நன்மைகளை எதிர்பார்க்கலாம். உத்யோகத்தில் வேலை பளு குறையும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.
பரிகாரம் : துர்கையை வணங்கி வழிபடவும்

தனுசு ராசி அன்பர்களே
தனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எந்த ஒரு விஷயத்தையும் தீர யோசித்த பின் முடிவு எடுக்கவும். சுற்றி இருப்பவர்களிடம் அனுசரித்து போவதால் மட்டுமே பிரச்சனைகளை சரி செய்து கொள்ள முடியும். திட்டமிட்டு செய்யும் பயணங்கள் வெற்றி பெறும். வீட்டில் ஆடை, ஆபரண பொருள் சேர்க்கை உண்டாகும். நெருங்கிய உறவினர்களால் தேவையில்லாத மனஸ்தாபங்கள் ஏற்படலாம். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். திருமணம் காரியம் கைகூடும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.வாகனம் ஓட்டும் போது மிகுந்த கவனம் தேவை. தேவையில்லாத மனக்கவலையால் மன சஞ்சலம் ஏற்படும். மன அமைதியை பெற தினமும் தியானம் செய்யவும். உத்தியோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
பரிகாரம் : வராகியை வணங்கி வழிபடவும்

மகர ராசி அன்பர்களே
மகர ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த காரியங்கள் கூட நல்ல முடிவுக்கு வரும். உறவினர்கள் எப்போதும் பக்கபலமாக இருப்பர். நட்பு வழியில் நல்லது நடக்கும். வீட்டில் ஆடம்பர செலவு ஏற்படும். குடும்பத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைக்கும், உங்களின் பேச்சு திறன் அதிகமாகும். எந்த முயற்சி மேற்கொண்டாலும், ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. உடன்பிறப்பு வகையில் உதவி கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே சுமூகமான நிலை காணப்படும். உடல் உபாதைகள் படி படியாக குறையும். முக்கிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். தூரத்து பயணங்கள் இருக்கும். எடுத்த காரியங்கள் வெற்றியும், லாபமும் தரும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
பரிகாரம் : சாஸ்தாவை வணங்கி வழிபடவும்

கும்ப ராசி அன்பர்களே
கும்ப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டு செய்வது சிறப்பு. பண வரவில் ஏற்றம் இறக்கம் இருக்கும். மனதில் துணிச்சலும் தன்னம்பிக்கையும் கூடும். வரும் எதிர்ப்புகள் தானே விலகும். குடும்பத்தில் பல நல்ல காரியங்கள் நடக்கும். நண்பர்கள் வகையில் விரோதம் உண்டாக வாய்ப்புணடு. உறவினர்களோடு சுமுக உறவு ஏற்படும். குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைதுணையுடன் அனுசரித்து செல்வது நல்லது. கடன் பிரச்சனையில் மாட்டி கொள்ளாமல் இருப்பது உத்தமம். விருந்தினர்கள் வருகை இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாட்கள் முடியாமல் இருந்த காரியம் சீக்கிரத்தில் முடியும். உத்யோகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
பரிகாரம் : நவக்கிரத்தை வணங்கி வழிப்படவும்

மீன ராசி அன்பர்களே
மீன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, நீங்கள் திட்டமிட்ட செயல்களை சிறப்பாக செய்து முடிக்க முடியும். உங்கள் ஆற்றலையும், திறமையும் பார்த்து, மற்றவர்கள் வியப்பார்கள். எல்லாவிதத்திலும் நன்மை உண்டாகும்.மனோ தைரியம் அதிகரிக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். அந்நிய நபர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். புது வீடு கட்டுவது தொடர்பான முயற்சிகள் சீக்கிரத்தில் முடியும். பிரியமானவர்கள் வழியில் மனக்கசப்புகள் உண்டாகும். எதிர்பாராத வகையில் பொருள் விரயம் ஏற்பட வாய்ப்புண்டு. நண்பர்கள் சில நேரங்களில் விரோதமாக செயல்படலாம். பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை. மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். உத்யோகத்தில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
பரிகாரம் : குரு பகவானை வணங்கி வழிபடவும்.
| தமிழ் மாத ராசி பலன்கள் – நவம்பர் 2025 |
| (01.11.2025 முதல் 30.11.2025) விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 15ம் தேதி முதல் கார்த்திகை மாதம் 14ம் தேதி வரை வாக்கிய பஞ்சாங்கப்படி 01-11-2025 முதல் 30-11-2025 வரை ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியே கிரக நிலைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட பொதுப்பலன்கள் ஆகும். இங்கே பொதுவாக சொல்லப்பட்டுள்ள பலன்களில் ஒரு சில பிரச்சனைக்குரிய பலன்கள் சொல்லப்பட்டுருந்தால் அச்சப்பட தேவையில்லை. என்பதை தெரிவித்து கொள்கிறேன். ஏன் எனில் அவரவர் ராசிக்கேற்ற தெய்வங்களை வணங்குவதாலும், தினசரி தெய்வ வழிபாடு செய்வதாலும், அவரவர் சக்திக்கு ஏற்ற பரிகாரங்களை செய்வதன் மூலமாகவும் பிரச்சனைக்குரிய பலன்கள் மாற்றி நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த மாதம் கிரக நிலை மாற்றம் : 02.11.2025 – துலாம் – சுக்கிரன் 04.11.2025 – தனுசு – செவ்வாய் 10.11.2025 – புதன் (வ) 11.11.2025 – குரு (வ) 16.11.2025 – விருச்சிக – சூரியன் 26.11.2025 – விருச்சிக – சுக்கிரன் ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் ஜோதிடர் ஆலந்தூர் A.வினோத் குமார் Ph.d Astrology (அலைபேசி: 09003019831) |
நவம்பர் மாத ராசி பலன்கள் (2025)
மேஷ ராசி அன்பர்களே
மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் சாதகமான மாற்றங்களைக் காண முடியும். பொருளாதார நிலையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் பல முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியது வரும். பயணங்களின்போது உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். மனதில் தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். உங்கள் அனுபவ அறிவு வெளிப்படும். குடும்பத்தில் அனுசரித்து போவது நல்லது. வீடு வாகனம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். பூர்வீக சொத்து விஷயங்களை கவனமாக கையாளுவும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். குடும்பத்தில் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. தேவையற்ற வீண் செலவுகளை குறைக்க வேண்டியது அவசியம். மனதில் ஏற்படும் ஒரு சில குழப்பத்தினால் முக்கிய முடிவு எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும். பெற்றோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் பிரச்னைகள் ஏற்படும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உங்களை சுற்றி இருந்த தடைகள் யாவும் நீங்கும். எந்த ஒரு காரியத்தையம் செய்யும் முன் நன்கு யோசிக்கவும். இந்த மாதம் வரவுக்கு மீறிய செலவுகள் இருக்கும். உத்யோகத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
சந்திராஷ்டமம் : 20,21,22 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.
ரிஷப ராசி அன்பர்களே
ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்ப உறவுகளைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். பொருளாதாரத்தை பொறுத்த வரை நன்றாகவே இருக்கும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். இது வரை இருந்த தடைகள் சிக்கல்கள் எல்லாவற்றையும் உடைத்தெறிய முடியும். எந்தச் செலவையும் உங்களால் தவிர்க்க இயலாது. யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. எதிர்பாராத செலவினங்கள் உண்டு. உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டு. எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். கணவன், மனைவிடையே பனிப்போர் ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. அடிக்கடி பயணங்கள் செல்ல நேரிடும். குடியிருக்கும் வீட்டை சீர் செய்ய வேண்டிவரும். குடும்பப் பிரச்னைகள் அவ்வப்போது இருக்கும். திருமண முயற்சிகளில், தடங்கல்களும், தாமதமும் ஏற்படும். வண்டி, வாகன சேர்க்கை ஏற்படும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். உத்யோகத்தில் பல நல்ல பலன்கள் பெற முடியும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம் : 22,23,24,25 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
மிதுன ராசி அன்பர்களே
மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவ்வளது சாதகமாக இல்லை. குடும்ப வாழ்வில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். எதிர்பாராத பணவரவு உண்டு. நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும்.தேக நலனில் கூடுதல் அக்கறைகொள்ள வேண்டியவது அவசியம். வெளியிடங்களில் உங்களின் பேச்சு பல சிக்கல்களை சந்திக்க வைக்கும். இம்மாதம் முழுவதும் வருமானம் திருப்திகரமாக இருக்கும். உற்றார், உறவுகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். எவ்வளவுதான் சிக்கனமாக இருக்க முயற்சித்தாலும், எந்தச் செலவையும் தவிர்க்க இயலாது. எதிர்பாராத பயணங்களால் செலவுகள் அதிகரிக்கும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் தடை இருக்கும். உற்றார், உறவினர்கள் உதவி கேட்டு வருவர். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். வீடு வாகனம் சொத்து தொடர்பான பிரச்னைகள் உருவாகும். ஒரு சிலருக்கு பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு மாறு வேண்டிவரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வண்டி, வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. இது வரை தடைபட்டு வந்த காரியம் மெல்ல கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
சந்திராஷ்டமம் : 25,26,27 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
கடக ராசி அன்பர்களே
கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்பத்தினரின் ஆதரவை பெற முடியும். நீங்கள் சற்றும் எதிர்பாராத விஷயங்கள் நடக்கும். சுற்று வட்டாரத்தில் உங்கள் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படவும். குடும்பத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதார நிலையில் ஏற்றத் தாழ்வுகள் நீங்கும். பேச்சில் கவனம் தேவை. புதிய முயற்சிகள் வெற்றி பெறும். மனோபலம் அதிகரிக்கும். உடல் உபாதைகள் நீங்கும். வரவிற்குமீறிய செலவுகளையும் இம்மாதம் சமாளிக்க வேண்டியிருக்கும். திருமண முயற்சிகளில் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களிடம் பேசும் பொது மிகுந்த கவனம் தேவை. யாருக்கும் வாக்குறுதி தராமல் இருப்பது நல்லது. நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெறும். வர வேண்டிய பணம் சரியான நேரத்தில் கைக்கு வரும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பிரியமானவர்கள் வழியில் சுப விரயங்கள் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனை பல நேரங்களில் கைகொடுக்கும். புது வாகனம் வாங்குவது குறித்து யோசனை வரும். புது வேலை முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
சந்திராஷ்டமம் : 27,28,29 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
சிம்ம ராசி அன்பர்களே
சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்களை சுற்றி இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். பண விஷயத்தில் சற்று கவனமாக இருக்கவும். நீண்ட நாட்கள் தடைபட்ட விஷயங்கள் இந்த மாதம் சாதகமாக முடியும். எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைகளும், தாமதங்களும் ஏற்படும். பயணங்களில் கவனம் தேவை. இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத அதிர்ஷ்டமும், திடீர் பணவரவும் உண்டு. குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். வாக்கு சாதுரியம் உண்டாகும். உடல் உஷ்ண சம்பந்தமான தொந்தரவுகள் இருக்கும். பண சேமிப்பிற்கு வாய்ப்பு குறைவு. குடும்பத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவுகள் உங்களை பின் தொடரும். மனக்குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். புது மனை, வீடு வாங்கும் யோகம் உண்டு. புதுமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து இருந்து நல்ல செய்தி வரும். கணவன் மனைவிக்கிடையே சின்ன மனஸ்தாபம் வரும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். மாத இறுதியில் குடும்பத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் ஒரு சில இடையூறுகள் வரும். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் இருக்கும்.
சந்திராஷ்டமம் : 2,3,4 & 30 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
கன்னி ராசி அன்பர்களே
கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்பத்தில் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும். பல சவால்கள் நிறைந்ததாக இருக்கும். பொருளாதார நிலை நிலைமை சிறப்பாகவே இருக்கும். ஒவ்வொரு நாளும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எடுக்கும் முயற்சிகளில் தடை இருந்தாலும் விடா முயற்சியால் வெற்றி பெற முடியும். வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். எதிலும் பொறுமையாக இருந்து காரியம் சாதிக்கவும். பல அலைச்சலுக்கு பின் தான் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வாழ்க்கையில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். கணவன் மனைவியிடையே வாக்குவாதங்களை தவிர்ப்பது புதிய முயற்சிகள் எதுவானாலும் வெற்றியடைய வாய்ப்புண்டு. குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். எதிர்பார்ப்புகள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அது நிறைவேறும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் சில தாமதங்கள் உண்டாகும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில்
சந்திராஷ்டமம் : 4,5,6 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
துலாம் ராசி அன்பர்களே
துலாம் ராசி அன்பர்களே, இந்த மாதம் பொருளாதார நிலைமை சாதாரணமாக இருக்கும். மனதில் நினைத்த காரியத்தை உடனே செய்து முடிக்க முடியும். எதிர்காலம் பற்றிய கவலை இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். இம்மாதத்தில் உணர்ச்சிபூர்வமாக பல முடிவுகளை எடுக்க நேரிடும். விலகி நின்ற நபர்கள் விரும்பி வந்து இணைவர். உடல் நலம் சீராக இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த காரியங்கள் சீக்கிரத்தில் முடியும். குடும்பத்தில் திட்டமிட்டு செலவு செய்யாவிட்டால் புதிய கடன்களை வாங்க வேண்டிய அவசியம் வரும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற விஷயங்களால் கருத்துவேற்றுமையும் குடும்பத்தில் ஒற்றுமையை பாதிக்கும். முடிந்த வரை தூர பயணங்களை இம்மாதத்தில் தவிர்ப்பது நன்மை செய்யும். வீடு மாறுவது குறித்த யோசனை வரும். எதிர்பாராத பணம் கைக்கு வந்தவுடன் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும்.
சந்திராஷ்டமம் : 6,7,8 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
விருச்சிக ராசி அன்பர்களே
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் பல ஆதாயமான விஷயங்களை எதிர்பார்க்கலாம். குடும்ப வருமானம் சொல்லும்படி இருக்கும். வேண்டியவர்கள் யாருக்கும் பண உதவி செய்ய வேண்டாம். விடாமுயற்சியால் எதிலும் வெற்றி பெற முடியும். திட்டமிட்ட பயணங்கள் சிறப்பாகவே அமையும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. ஆன்மிகம் தொடர்பான செலவினங்கள் அதிகரிக்கும். ஆரோக்கிய விஷயத்தில் சின்ன சின்ன தொந்தரவுகள் இருந்தாலும் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு நல்ல ஒரு தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் பல சந்தோஷமான விஷயங்கள் நடக்கும். புதிய வண்டி, வாகன சேர்க்கை உண்டு. ஆன்மீக எண்ணம் மேலோங்கும். இந்த மாதம் செலவுகள் சற்று கூடுதலாகவே இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். முயற்சி செய்யும் காரியங்கள் முன்னேற்றமடையும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். பண வரவில் தாமதம் ஏற்படும். மருத்துவ செலவுகள் வந்து போகும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
சந்திராஷ்டமம் : 8,9,10 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
தனுசு ராசி அன்பர்களே
தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் பல வேலைகளை தனியாளாக நின்று முடிக்க வேண்டிவரும். எந்த ஒரு சிக்கல் வந்தாலும் அதை சமாளிக்கும் சாமர்த்தியம் இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்தி ஒன்று வரும். குடும்பத்தில் சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. புதிய முயற்சியிகளில் வெற்றிக்கான அதிக வாய்ப்புகள் உள்ளது. உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து போவது நல்லதும். பூர்வீக சொத்து விஷயங்களில் கவனமாக கையாளுவும். நண்பர்களால் சில பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை. பிறருக்குக் கடன் கொடுப்பதைக் கண்டிப்பாக தவிர்க்கவும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். வேண்டியவர்களுடன் சிறு சிறு கருத்துகள் வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும். குடும்பத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். சிலருக்கு வீடு மாற்றம் செய்ய வேண்டி வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகம் தொடர்பான பயணம் ஏற்படும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
சந்திராஷ்டமம் : 10,11,12 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
மகர ராசி அன்பர்களே
மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் எல்லா விஷயங்களிலும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமான ஒன்று. குடும்பத்தில் வரவுக்கு ஏற்ற செலவுகளும் காத்து கொண்டு இருக்கும். உங்களுக்கு துளியும் சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். எத்தனை தடைகள், பிரச்னைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு ஜெயிக்க முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். மனதில் புது உற்சாகம் பிறக்கும். எந்த சூழ்நிலையையும் திறமையாக கையாள முடியும். வீடு வாகனம் சொத்து தொடர்பான செலவினங்கள் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடன் பிரச்னைகள் வந்து நீங்கும். கணவன், மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். வெளிநாட்டு தொடர்பால் ஆதாயம் உண்டு. பயணங்களால் தேவையற்ற அலைச்சல்கள் வரும். குடும்ப சுமைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப விரயங்களும் வீண் விரயங்களும் உண்டு. இம்மாதத்தின் இறுதியில் மருத்துவச் செலவுகளால் பணம் விரயமாகும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றங்கள் வரும். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
சந்திராஷ்டமம் : 12,13,14,15 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
கும்ப ராசி அன்பர்களே
கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் நனவாகும். ஆரோக்கிய பிரச்சனைகளை சமாளிக்க சற்று போராட வேண்டியிருக்கும். குடும்பத்தில் வருமானத்திற்கு ஏற்ப செலவுகளை செய்தால் பிரச்சனைகள் இருக்காது. மேலும் புதிய முயற்சிகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம். குடும்ப விஷயங்களில் அடுத்தவர் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். உடம்பு தொந்தரவுகள் வராமல் இருக்க ஒரு முறை குடும்ப மருத்துவரை அணுகி முழு உடற் பரிசோதனையை செய்து கொள்ளவும். உங்களுடைய காரியங்களில் ஒரு சில தடை ஏற்பட வாய்ப்புண்டு, இருப்பினும் எல்லாம் தற்காலிகமானது தான் என்பதை நினைவில் கொள்ளக. வண்டி வாகனங்களுக்கு எதிர்பாராத செலவுகள் வந்து சேரும். இந்த மாதம் பல ஏற்றமான விஷயங்கள் நடக்கும். மாத தொடக்கத்திலிருந்தே அவசியமில்லாத செலவுகளைத் தவிர்க்க முயற்சி செய்யவும். பெண்கள் வழியில் ஆதாயம் உண்டு. பல நாட்களாக வராமல் இருந்த பணம் கைக்கு வரும். வரும் எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி நடை போட முடியும். தேவையில்லாத காரியங்களில் தலையிட்டு சிக்கலில் சிக்கி கொள்ள வேண்டாம். உத்யோக பணிகளில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
சந்திராஷ்டமம் : 15,16,17 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
மீன ராசி அன்பர்களே
மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்பத்தில் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க வேண்டியது வரும். பொருளாதார நிலையில் உயர்வு ஏற்படும். நீண்ட நாளாக வர வேண்டிய பணம் வந்து சேரும். மனதில் நேர்மறையான சிந்தனையை வளர்த்துக்கொள்ளவும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். தேக நலனில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும், ஒரு முறைக்கு பலமுறை யோசித்து எடுக்கவும். பண விவகாரத்தில் கறாராக இருக்கவும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய ஆதாயத்தை உறுதியாக எதிர்பார்க்கலாம். வீண் செலவுகளால் பணம் விரயமாகும். திருமண முயற்சிகள் கைகூடும். ஒரு சிலருக்கு, வீடுமாற்றம் ஏற்படக்கூடும். வீடு, மனை, வாங்கும் யோகங்களும் கூடி வரும். இதுவரை முடியாமல் இருந்த காரியங்கள் சீக்கிரத்தில் முடியும். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் தீர்ந்து மனம் நிம்மதியடையும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். பிரியமானவர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சொந்த பந்தங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்ப பெரியோர்களின் அரவணைப்பு கிட்டும். புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். புது தொழில் யோகம் அமையும்.
சந்திராஷ்டமம் : 17,18,19.20 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்