பாலியல் தொழிலும் – விஜயின் அரசியலும் !
29-11-2025 | சென்னை –
(முழுமையாக படித்து விட்டு கோபப்படுங்கள்)
இப்போதெல்லாம் நகரங்களில் புறவழிச் சாலைகளின் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் இருவர் என்ற கணக்கில் ஜொலிக்கும் உடை உடுத்தி, செல்போனில் ஃப்ளாஷ் லைட் எரியவிட்டு பாலியல் தொழில் செய்யும் பெண்களை பார்க்க முடிகிறது.

அவர்களை கடந்து போகும் போதெல்லாம் பல்வேறு சிந்தனைகள் மனதில் தோன்றும். தமிழர் மாண்பு, தமிழர் பண்பாடு, தமிழர் கலாச்சாரம் இவற்றின் மீது எப்போது இடிவிழத் தொடங்கியது ? என்ற நினைவு மனதை இரணமாக்கும்.
அந்த தொழில் செய்யும் பெண்களை நினைத்து நமக்கு கோபம் வரவேண்டுமா ? பரிதாபப் படவேண்டுமா ? என்ற கேள்விக்கு என்னிடம் இன்றளவும் பதில் இல்லை.
அவர்கள்மீது கோபம் கொண்டால் அவர்களை இந்த நிலைக்கு தள்ளிய சூழல் மீது கோபம் வேண்டும். அவர்கள் மீது பரிதாபம் கொண்டால் அவர்களை போல் இருக்கும் பலர் வேறு வேலைகள் செய்து வாழ்கிறார்களே என்ற எண்ணம் வருகிறது. அவர்கள் மீது கோபப்படுவதை விட…! அவர்களை நுகர்வோர்களாக பயன்படுத்தும் சமுதாய கழிவுகளை என்ன சொல்வது ?,
திருமணம் ஆகி மனைவியின் மீது மோகம் குறைந்த நிலையில் ஒருவரோ, அல்லது திருமணம் ஆகாமல் இருக்கும் இளவயதில் இருக்கும் ஒருவரோ அல்லது இந்த இரண்டிலும் இல்லாமல் தன்னுடைய அந்த நேரத் தேவைக்காக எதையும் செய்யலாம், அல்லது எதையும் மீறலாம் என்று நினைக்கும் வக்கிர புத்தி உள்ளவர்களாக இப்படி ஏதோ ஒரு வகையினர்தான் அவர்களின் நுகர்வோர். இவர்களுக்கு அறம், பொருள், கற்பு என எந்தவித சமுதாய நோக்கும் இல்லாமல் அந்த நேரத்து சுகம் என்பதை தாண்டி வேறு எதுவும் இல்லை.
இவற்றை தடுத்து நிறுத்தவேடிய காவல்துறைகள் மற்றும் பொது புத்தி இவர்களை அனுமதிப்பதோடு மட்டுமின்றி நுகர்வு பொருளாக பயன்படுத்தவும் செய்கிறது…
நிற்க… !
அரசியலில் தவெக…!
அன்றைய தினத்தில் காங்கிரசின் அடாவெடியை தடுக்க இல்லாத ஒன்றை தத்துவமாக வைத்து 1949 திமுக உருவானது. அதன் பிறகு தமிழகத்தில் உருவான எந்த கட்சிக்கும் தனித்த சித்தாந்த வரையறை என எதுவும் கிடையாது நாம் தமிழர் கட்சியை தவிர. திமுகவில் இருந்து அதிமுக, மதிமுக, தனியாக தேமுதிக, மக்கள் நீதி. மையம், என எல்லாம் பெயரில் சிறிய மாற்றங்களோடு வந்தனவே தவிர வேறு எதுவும் அவர்களே பேசி தங்களை பிரகடன படுத்திக்கொள்ள வில்லை.
திமுக = காங்கிரஸ் எதிர்ப்பு
அதிமுக = திமுக எதிர்ப்பு
மதிமுக = திமுக எதிர்ப்பு
மையம் = எதை எதிர்த்தது என தெரியவில்லை
அமமுக = EPS எதிர்ப்பு
நாம் தமிழர்க்கட்சியை பொறுத்தவரை தனித்த கொள்கை வரையறை கோட்பாட்டு பாதை, தனித்த தலைமை என எல்லாவற்றிலும் உயிர்ப்பு நிலை தத்துவத்தோடு களத்தில் உள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் :
உண்மையில் இந்த கட்சியின் கொள்கை என்ன ?, சித்தாந்தம் என்ன ?, எதை எதிர்ப்பது ? எதை ஆதரிப்பது ? என எதுவும் புரியாமல், தன்னிடம் உள்ள திரைக்கவர்ச்சி என்ற ஒற்றை மூலதனம் எதுவும் இல்லை. அந்த சாலையோரத்தில் நிற்கும் பாலியல் தொழிலாளி போல்…! இந்த வார்த்தை உங்களுக்கு. மிகக் கடுமையாக தோன்றலாம். உற்றுப் பார்த்தால் உண்மை தெளிவு பெறலாம் !
கொள்கை தலைவர்கள் !
காமராஜர் = இந்திய தேசியம்
பெரியார் = இந்திய தேசியத்தை எதிர்த்த மாதிரி நடித்த திராவிட பேர்வழி
அம்பேத்கார் = சட்டம் ஒருக்கப்பட்டோர் விழிப்புணவு
வேலுநாச்சியார் = விடுதலை போராட்ட குறியீடு
அஞ்சலை அம்மாள் = தவெக வெளிபடுத்த வில்லை.
உண்மையில் அம்பேத்கார் அவர்களை மதித்தால் விஜய் கட்சி தலைவனாக இருக்க முடியாது. சட்டத்தை இயற்றியவர் கொள்கை தலைவராக கொண்டு, பிளாக் டிக்கெட் வருமானம், இலாட்டறி டிக்கெட் வருமானம் ஒருபுறம் என இவர்களின் தகுதி என்னவென்று பாருங்கள்.
கொள்கைத் தலைவர்களை வரிசை படுத்தி இவர்களால் கொள்கையை சொல்லவும் முடியாது, கொள்கையை வரிசைப்படுத்தி இவர்களால் கொள்கை தலைவர்களையும் சொல்ல முடியாது. ஏனென்றால் இவர்களிடம் கொள்கை என்ற ஒன்று கிடையாது.
காமராஜர் : இவர்களை பொறுத்தவரை தன்னை நேர்மையானவராக கட்டிக்கொள்ள, அவரை ஒரு சமுதாயத்தினராக பார்ப்பவர்களின் வாக்கினை பெற !
பெரியார் : தெலுங்கர்கள் மற்றும் நாயக்கர்களின் மற்றும் பிறமொழியாளர்களின் வாக்கினை பெற !
அம்பேத்கார் : ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்கினை பெற !
வேலு நாட்சியார் : தென் மாவட்டங்களில் மறவர்களின் வாக்கினை பெற !
அஞ்சலை அம்மாள் : வட மாவட்டங்களில் வன்னியர்களின் வாக்கினை பெற !
அண்ணா : காஞ்சிபுரத்தில் மக்களை ஏமாற்ற !
செங்கோட்டையன் : மேற்கு மாவட்டங்களில் கவுண்டர்களின் வாக்கினை பெற !
கஸ்டமர்களின் பார்வையை ஈர்க்கும் வகையில் விதவிதமாக ஆடையணிந்து நிற்கும் சாலையோர பாலியல் தொழில்களுக்கும் இந்த அணுகுமுறைக்கும் என்ன வேறுபாடு உங்களால் காணமுடிகிறது ?
தேர்தல் வாக்குறுதியாக வீட்டுக்கு ஒரு கார் இலட்சியம், பைக் நிச்சயம் என்பதெல்லாம் ஒரு கோமாளி கூட சொல்ல மாட்டான். விஜயின் சமீபத்திய அறிக்கையின் படு வீட்டுக்கு 39 இலட்சம் தேவை படும். ஏற்கனவே ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 இலட்சம் டெபாசிட் செய்கிறேன் என்ற மோடியையே கோமாளியாக பார்த்த நாம், இந்த நாகரீக கோமாளியை எப்படி பார்ப்பது ?
எப்படியாவது அரியணை ஏறிவிட வேண்டும் என்ற வெறியை தவிர வேறு எதுவும் இல்லை. தன்னை பார்க்க வந்து 41 பேர் இறந்து போனார்கள் என்ற பெருந்துயரை ஒருவனால் எளிதாக கடந்துவிட முடியும் என்றால் அவன் எதற்கு சங்கடப் பட போகிறான் சொல்லுங்கள் ?
வயிற்று பிழைப்புக்காக பாலியல் தொழில் செய்யும் ஒருவரால் அவருக்கும் அவரை நுகர்வு செய்யும் பயனாளருக்கும் மட்டுமே பாதிப்பு.
ஆனால் என்ன நடந்தாலும், எத்தனை பேர் செத்தாலும், கொள்கை, கோட்பாடு என எது இல்லாவிட்டாலும், பிளாக் டிக்கெட், இலட்டரி டிக்கெட் பணம் என்றாலும், சாதிக்கு ஒரு ஆள்களாக பிடித்தேனும் அதிகாரத்தை அடையவேண்டும் என்ற அரசியல் விபச்சாரம் நாட்டுக்கே, நாட்டு மக்களுக்கே ஆபத்தானது.
சாலையில் தன்னுடைய வயிற்று பிழைப்பிற்காக நிற்கும் பாலியல் தொழிலாளி போல…
எந்தவித தனித்த கொள்கை கோட்பாடு என எதுவும் இல்லாவிட்டாலும் அதிகாரத்தை அடைந்தே தீருவேன் என்ற வெறியோடு விஜய் நிற்கிறார் !
பாலியல் தொழிலாளியை நோக்கி சொல்லும் நுகர்வோர் போல, 50 வருட அரசியல் அனுபவம் கொண்டுள்ள செங்கோட்டையன் சென்றுள்ளார். இந்த பட்டியல் இனி நீளும் என்றே நினைக்கிறேன் !
அரசியலை ஒரு கவர்சி தொழிலாக மாற்றுகின்ற வேலையை துளிகூட அரசியல் அறிவற்ற விஜய் செய்கிறார் !
தேர்தல் களம் 2026 இவர்களுக்கு சரியான பதிலைச் சொல்லும் !
வேறு வழியில்லை என்ற நிலையில் அந்த வேலையை செய்யும் பாலியல் தொழிலாளிகளை கூட மன்னித்து அவர்களை நல்வழி படுத்தி விடலாம். ஆனால் விஜய் போன்றோர்கள் மன்னிக்க கூடாது !
நன்றி
தமிழம் செந்தில்நாதன்
29-11-2025