05.12.1995 அன்று தென் தமிழீழத்தில் நடைபெற்ற முதல் கரும்புலித் தாக்குதல்.
05.12.1995 | புதுக்குடியிருப்பு

கரும்புலி
மேஜர் ரங்கன் (தினேஸ்குமார்)
ஜெஸ்டின் யூட்நெவின்
மாங்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
ரப்பிறப்பு: 03.05.1973
வீரச்சாவு: 05.12.1995
05.12.2025 அன்று புதுக்குடியிருப்பு சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படை முகாம் மீதான கரும்புலித் தாக்குதலின்போது வீரச்சாவு.
புத்தூர், நவக்கிரி பகுதியிலிருந்து சூரியக்கதிர் என்ற மிகப் பெரும் எடுப்பிலான படையெடுப்பை வலிகாமத்தில் மேற்கொண்ட சிங்கள படையினர் 50 நாட்கள் நடத்திய உக்கிர சமரின் முடிவில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியது சிங்கள பேரினவாத அரசு .
ஏறக்குறைய 5 . 5 லட்சம் பேரைக் கொண்ட வலிகாமத்தில் ஒட்டுமொத்தமான சனத்தொகையும் முற்றுமுழுதாக வெளியேறிய நிலையில் பெரும் கட்டிடங்களுக்கு மத்தியில் 5. 12. 1995 அன்று சிங்களப்படை அமைச்சர் அனுருத்த ரத்வத்த சிங்கக் கொடியை ஏற்றிய ஒரு சில மணி நேரத்தில் தென் தமிழீழம் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் சிங்களச் சிறப்பு அதிரடிப் படையின் முகாம் மீது கரும்புலி மேஜர் ரங்கன் கரும்புலித் தாக்குதலை நிகழ்த்தி சிங்களத்தின் ஆக்கிரமிப்பிற்கு பதிலடி கொடுத்தார்.

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”