இலங்கையில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

05-12-2025 | கொழும்பு –

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு விமான நிலைய பிரிவினரால் நேற்று வியாழக்கிழமை (04-12-2025) இரவு இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரிடமிருந்து 12,000 சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் பரகடுவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு விமான நிலைய பிரிவினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply