இரங்கல் செய்தி – ஜெயந்தன் இராமச்சந்திரன்

05-12-2025 | லண்டன் –

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீது ஆழமான பற்றுதலும், தளராத அர்ப்பணிப்பும் கொண்டவராக ஜெயந்தன் இராமச்சந்திரன் அவர்கள், பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பின் செயல்வீரராகப் பத்தாண்டுகளுக்கும் மேலாக அயராது உழைத்தவர். ஐக்கிய இராச்சிய வடமேற்குப் பிராந்தியப் பொறுப்பாளராகச் செயற்பட்டு, தமிழ் இளையோர் அமைப்பின் செயற்திட்டங்களை முழு நேர்மையுடனும் உறுதியுடனும் முன்னெடுத்தவர்.

சமூகத்தின் மீதும், தமிழ் மக்களின் விடுதலைக் கனவின் மீதும் கொண்ட ஆழ்ந்த விசுவாசம் அவருடனான ஒவ்வொரு செயற்பாட்டிலும் வெளிப்படைந்தது. அமைதி, ஒழுங்கு, அர்ப்பணிப்பு, தியாகம் ஆகிய பண்புகளின் சின்னமாக அவர் விளங்கினார்.

03/12/2025 அன்று நிகழ்ந்த அவரது அகாலப் பிரிவு, தமிழ் சமூகத்திற்கும், அவரது நண்பர்கள், உறவினர், போராட்டச் சகோதரர்கள் அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.


அவரை ஆழ்ந்த இரங்கலுடனும், மரியாதையுடனும் நினைவுகூருகின்றோம்.

அவரது ஆன்மா அமைதியடையட்டும்.

ஈழத்து நிலவன் | 05.12.2025


Leave a Reply