08.12.1999 அன்று தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு பலம் சேர்த்த கடற்கருவேங்கைகள்

முல்லைத்தீவு

கடற்கரும்புலி

சிவநேசன் சிவபாக்கியநாதன்
கெற்பலி, மிருசுவில், யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 07.04.1975
வீரச்சாவு: 08.12.1999

துயிலுமில்லம்: முழங்காவில்
துயிலும் நிலை: நினைவுக்கல்


கடற்கரும்புலி

கதிரவேல் ஜெயராம்
சடையாளி, காரைநகர், யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 19.06.1979
வீரச்சாவு: 08.12.1999

துயிலுமில்லம்: விசுவமடு
துயிலும் நிலை: நினைவுக்கல்


கடற்கரும்புலி

சிவசாமி சுகந்தன்
இன்பருட்டி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 08.05.1978
வீரச்சாவு: 08.12.1999

துயிலுமில்லம்: விசுவமடு
துயிலும் நிலை: நினைவுக்கல்


கடற்கரும்புலி

சிவஞானம் சிவகுமார்
முள்ளிவாய்க்கால் மேற்கு, முல்லைத்தீவு
வீரப்பிறப்பு: 25.03.1977
வீரச்சாவு: 08.12.1999


எமது போராட்டத்திற்க்கு பெரும் இக்கட்டான நிலை வரும்போது அதனை தலைவர் அவர்களின் திட்டத்திற்கேற்ப அத் தடைகளை உடைத்து தமிழீழப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்க்கு நகர்த்திய பெருமை கரும்புலிகளைச் சாரும் என்று கூறுவதில் மிகையாகாது. அந்தவகையில் 1999ம் ஆண்டு காலப்பகுதியில் முல்லைத்தீவு சாளையிலிருந்து படகில் சர்வதேசக் கடற்பரப்பிற்க்குச் சென்று அங்கு நிற்கின்ற எமது கப்பலில் இருந்து அமைப்பிற்க்குத் தேவையான பொருட்களை கொண்டு வந்து கொண்டிருந்தனர்.

மாதத்தில் பெரும்பாலான நாட்கள் இவ் விநியோக நடவடிக்கை இடம் பெறும்.இந் நடவடிக்கையில் சிறிலங்காக் கடற்படையினருடன் சண்டையிட்டுத்தான் பொருட்களை கொண்டுவர வேண்டியிருந்தது. இப்படி நடைபெற்றுக் கொண்டிருந்தவேளையில் .இந் நடவடிக்கைக்கு இன்னுமொரு பெரும் சிக்கல் ஏற்பட்டது .அதாவது சிறிலங்காக் கடற்படையினர். சிறலங்காக் கடற்படையினரின் ஆயுதக்குழுக்களுக்கு ரோலர்களையும் அதிநவீன

தெலைத்தொடர்பு சாதனங்களையும் அவரகளுக்குத் தேவையான ஏனைய பொருட்களையும் வழங்கி எமது இந்த விநியோகப் பாதைக்கு அண்மையாக மீன்பிடிப்பது போல எம்மைக் கண்காணித்து சிறிலங்காக் கடற்படைக்குத் தகவல்களை வழங்கி எமது இந்த விநியோக நடவடிக்கைக்கு பெரும் சிக்கலைத் தோற்றுவித்தனர்.

ஒரு கட்டத்தில் இவ் விநியோகச் செயற்பாடு நிறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.இச் சம்பவத்தை தலைவர் அவர்களிடம் தெரிவித்தார் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் அத்துடன் ஒரு திட்டத்தையும் முன்வைத்தார் அதாவது எமது சண்டைப் படகுகளை அனுப்பி அவ் ரோலர்களை துரத்துவதே அத் திட்டமாகும்.

ஆனால் தலைவர் அவர்களோ முள்ளை முள்ளாள் தான் எடுக்கவேண்டும் என எண்ணினார். .அதற்கமைவாக இவ் விநியோக நடவடிக்கையில் நீண்டநாள் சென்று வந்த அதுவும் கடற்கரும்புலிகளை உள்ளடக்கிய ஒரு திட்டத்தை விளங்கப்படுத்தினார்.

அத்திட்டத்திற்கமைவாக ஒரு ரோலரைக் கொள்வனவு செய்து அவ்ரோலரில் கடற்கரும்புலிகள் சென்று மற்றைய ரோலர் மாதிரி அக்கடலில் நிற்கும்போது கிட்டவரும் சிறிலங்காக் கடற்படையினர் மீது தாக்குதல் நடாத்துவதே அத் திட்டமாகும்.அத்தோடு அங்கு கண்காணிப்பில் நிற்கும் ரோலர்களும் இத்தாக்குதலோடு அவர்களும் இந்தப்பக்கம் வரமாட்டார்கள்.

இதற்காக கடற்கரும்புலிகளான லெப் கேணல் சிவருபன் மேஜர் ரங்கன் மேஜர் இசைக்கோன் கப்டன் கானகன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டு கடுமையான பயிற்சிகள் வழங்கப்பட்டு கடற் கண்காணிப்பிற்காகவும் நெருங்கவரும் சிறிலங்காக் கடற்படையினர் மீது தாக்குதல் நடாத்தி ஆழ்கடல் விநியோகத்தின் மீது இருந்த தடைகளை நீக்கவும் சென்றனர்.

அதற்கமைவாக இவர்கள் சிலநாட்கள் கடற்கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் அதாவது 08.12.1999 அன்று சிறிலங்காக் கடற்படையினரின் ஒரு தொடரணி ஆழ்கடலால் போய்க் கொண்டிருந்த வேளையில் ஒரு டோறாப்படகு இவர்களுக்கு மிக அண்மையாக வந்து தாக்குதல் நடாத்த முற்பட்டவேளையில் இவர்கள் அவ் டோறாப்படகு மீது தாக்குதல் நடாத்தி அவ் டோறாவைச் செயலிழக்கவைத்தும் பல கடற்படையினரைக் கொன்றும் கடலில் சங்கமமாகினர்.

இவர்கள் அன்று செய்த இவ் உயரிய அர்ப்பணிப்பு மிக்க தாக்குதலால் தமிழீழத்திற்க்கு பலம் சேர்க்கின்ற நடவடிக்கையான ஆழ்கடல் விநியோக நடவடிக்கைக்கு இருந்த தடைகள் அனைத்தும் நீங்கின.​

Leave a Reply