பொலன்னறுவை-மட்டக்களப்பு சாலையில் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டன.
08-12-2025 | வாழைச்சேனை

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியில் 20 ஆவது மைல்கல் பகுதியில் உள்ள தொலைபேசி கம்பத்துக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் இன்று திங்கட்கிழமை (08-12-2025) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இத்தாலியில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்றும், அதற்குரிய 4 தோட்டாக்களும், பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்றுமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து துப்பாக்கிகளும் தோட்டாக்களும் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் வாழைச்சேனை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.