தமிழீழம் கட்டியெழுப்பப் படுவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை – தேசியத் தலைவர்

தமிழீழம் –

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்  அவர்களின்  2003 – ஆம் ஆண்டு  மாவீரர் நாள் உரையிலிருந்து

சிங்களப் பேரினவாதத்தின் சிலந்தி வலைக்குள் சிக்கித் தமிழரின் வாழ்வும் வளமும் சிதைந்து போவதை நாம் இனியும் அனுமதிக்க முடியாது.

வன்முறையைத் துறந்து, மென்முறைப் பாதையைத் தழுவி சமரசத்திற்கும் சமாதான முன்னெடுப்புகளுக்கும் எம்மால் முடிந்தளவு நாம் முயற்சித்து வருகின்றோம்.

இதனை உலக நாடுகளனைத்தும் நன்கறியும்.

ஆனால், சிங்கள இனவாத ஆளும் வர்க்கம் தொடர்ந்தும் எமது மக்களின் உரிமைகளை மறுத்து, சமரசத் தீர்வுகளை எதிர்த்து, ஒடுக்குமுறையைத் தொடருமானால் எமது மக்களுக்கு உரித்தான சுயநிர்ணய உரிமையின் கீழ் நாம் பிரிந்து சென்று தனியரசைக் கட்டி எழுப்புவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை.

தமிழீழத் தேசியத் தலைவர்

Leave a Reply