13 டிசம்பர் 2025 சனிக்கிழமை

13-12-2025 சனிக்கிழமை | இன்றைய ராசிபலன்

தமிழ் நாட்காட்டி டிசம்பர் 2025
அமாவாசை19-டிசம்பர்-2025 வெள்ளிக்கிழமை
பௌர்ணமி04-டிசம்-2025 வியாழன்
கார்த்திகை03-டிசம்பர்-2025 புதன்கிழமை
31-டிசம்பர்-2025 புதன்கிழமை
சஷ்டி விரதம்25-டிசம்பர்-2025 வியாழன்
சங்கடஹர சதுர்த்தி08-டிசம்பர்-2025 திங்கட்கிழமை
சதுர்த்தி24-டிசம்பர்-2025 புதன்கிழமை
பிரதோஷம்02-டிசம்பர்-2025 செவ்வாய்
17-டிசம்பர்-2025 புதன்கிழமை
  திருவோணம்23-டிசம்பர்-2025 வியாழன்
மாத சிவராத்திரி18-டிசம்பர்-2025 வியாழன்
ஏகாதசி01-டிசம்பர்-2025 திங்கட்கிழமை
15-டிசம்பர்-2025 திங்கட்கிழமை
30-டிசம்பர்-2025 செவ்வாய்
அஷ்டமி12-டிசம்பர்-2025 வெள்ளிக்கிழமை
27-டிசம்பர்-2025 ஞாயிறு
நவமி13-டிசம்-2025 சனிக்கிழமை
28-டிசம்பர்-2025 திங்கட்கிழமை
அரசு விடுமுறை நாட்கள்25-டிசம்பர்-2025 வியாழன்
கிறிஸ்துமஸ் பண்டிகை
திருமண நாட்கள்01-டிசம்பர்-2025 திங்கட்கிழமை
வளர்பிறை

08-டிசம்பர்-2025 திங்கட்கிழமை
தேய்பிறை

10-டிசம்பர்-2025 புதன்கிழமை
தேய்பிறை

14-டிசம்பர்-2025 ஞாயிறு
தேய்பிறை

15-டிசம்பர்-2025 திங்கட்கிழமை
தேய்பிறை
திருவிழாக்கள்03-டிசம்பர்-2025 புதன்கிழமை
திருக்கார்த்திகை

19-டிசம்பர்-2025 வெள்ளிக்கிழமை
அனுமன் ஜெயந்தி

25-டிசம்பர்-2025 வியாழன்
கிறிஸ்துமஸ் பண்டிகை

30-டிசம்பர்-2025 செவ்வாய்
வைகுண்ட ஏகாதசி

இன்றைய ராசி பலன் | 13 டிசம்பர் 2025 சனிக்கிழமை

மேஷ ராசி நேயர்களே, சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக அமையும். பயணங்களால் சில நன்மைகள் உண்டாகும். உறவினர்கள் உதவி கரம் நீட்டுவர். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.

ரிஷப ராசி நேயர்களே, திட்டமிட்ட காரியம் ஒன்று தாமதமின்றி நடக்கும். தெய்வ பலம் கூடும். வங்கிகளில் கடன் முயற்சிகள் எளிதில் கைகூடும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

மிதுன ராசி நேயர்களே, மனதில் தெளிவும், உற்சாகமும் பிறக்கும். நண்பர்களுடனான மனக்கசப்புகள் நீங்கும். வாகனப் பயணங்களில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

கடக ராசி நேயர்களே, எதிர்த்து நின்றவர்கள் விலகியே நிற்பர். சவாலான விஷயங்களை சாமர்த்தியமாகப் கையாள முடியும். சொத்து பிரச்னைக்கு தீர்வு உண்டு. உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

சிம்ம ராசி நேயர்களே, குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். தீர்க்க முடியாத பிரச்சனைக்கும் ஓர் தீர்வு கிடைக்கும். உத்யோகத்தில் பாராட்டு மழை உண்டு.

கன்னி ராசி நேயர்களே, நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். நண்பர்கள் ஆதரவு வழக்கம் போல் இருக்கும். திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

துலாம் ராசி நேயர்களே, குடும்ப செலவுகளை குறைக்க திட்டமிடவும். புது வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். வெளி உணவுகளை தவிர்க்கவும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பயணங்களால் புத்துணர்ச்சி ஏற்படும். எதிர்ப்புகள் தானாக அடங்கும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

தனுசு ராசி நேயர்களே, குடும்பத்தில் சுபகாரியங்கள் கை கூடி வரும். உடல் நலம் சீராகும். பணப் புழக்கம் கணிசமாக உயரும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும்.

மகர ராசி நேயர்களே, எதிர்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிரியமானவர்களால் மகிழ்ச்சி ஏற்படும். விசேஷங்களை கலந்து கொள்ள முடியும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

கும்ப ராசி அன்பர்களே, ஆக்கபூர்வமாகச் சிந்தித்து சிறப்பாகச் செயலாற்ற முடியும். ஆவலுடன் எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. தொழில், வியாபாரம் சிறக்கும்.

மீன ராசி நேயர்களே, குடும்ப பாரம் அதிகரிக்கும். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேச வேண்டாம். சுற்றி உள்ளவர்களின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.


ராசி பலன் வாரந்தோறும் | 08-12-2025 To 14-12-2025

மேஷ ராசி அன்பர்களே, இந்த வாரபலன்படி, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்பு உண்டு. சுற்றி இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வதும், பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பதும் நல்லது. உற்றார், உறவினரால் சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட்டாலும் அதை சமாளிக்க முடியும். உடல் நிலை சீராக இருக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கை நட்பு வட்டத்தை விரிவடையச் செய்யும். நிதானிக்க வேண்டிய நேரத்தில் நிதானமாகவும், விரைவாகச் செயல்பட வேண்டிய நேரத்தில் உடனடியாகவும் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். நீண்ட நாட்களாக நடக்காத காரியம் ஒன்று நடந்து முடியும். பழைய கடன் பிரச்சனை அவ்வப்போது வந்து மனதை வாட்டும். விருந்து, விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் கூடும்.

பரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும்.

ரிஷப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல்நலத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். குடும்பத்தாரால் மருத்துவச் செலவு ஏற்படும். உற்றார், உறவினரை அனுசரித்துச் செல்லவேண்டியிருக்கும், திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் ஏற்படும். ஒரு சில நேரங்களில் நெருங்கிய உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு மன அமைதி பாதிக்கலாம். கணவன் மனைவியிடையே நல் உறவு காணப்படும். பொருளாதார நிலை வளர்ச்சி காணும். கடன் வாங்கும் சூழ்நிலை வந்தாலும் அளவுக்கு மீறி கடன் வாங்காமல் பார்த்துக்கொள்ளவும். மற்றபடி வேறு ஏதும் பண பிரச்சனை வர வாய்ப்பு இல்லை. குடும்ப சூழ்நிலை திருப்திகரமாக இருக்கும். உத்யோகத்தில் உங்கள் ஆலோசனைக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முழு கவனம் செலுத்தவும்.

பரிகாரம் : சுக்கிர பகவானை வணங்கி வழிபடவும்

மிதுன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். புதிய முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். உற்றார், உறவினரை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் எதிர்பார்த்த மன அமைதி கிடைக்கும். பிறரை நம்பி பெரிய தொகையைக் கடனாக கொடுக்கும்போது சிந்தித்துச் செயல்பட வேண்டும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி, மனை வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று மேன்மை ஏற்படும். குடும்பத்தில் விருந்தினர் வருகை அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் உடல் நிலையை கண்காணிக்கவும். உத்யோகத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்ததை விட சிறப்பாகவே இருக்கும்.

பரிகாரம் : குல தெய்வத்தை வணங்கி வழிபடவும்

கடக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். சொந்த வீடு, வாகனம் வாங்கும் யோகமும் அதனால் கடன்களும் உண்டாகும். உற்றார், உறவினர் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவர். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பொதுநல காரியங்களில் ஈடுபாடு உணவும். பணம் எவ்வளவு வந்தாலும் அதற்கேற்றாற் போல செலவுகளும் இருந்து கொண்டே இருக்கும். குடும்பத்தில் எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்பட கூடும். பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு மாறு வேண்டிவரும். கணவன் மனைவியிடையே வீண் விவாதங்களை தவிர்க்கவும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாய் இருப்பது நல்லது. குடும்பத்திற்காக நிறைய பாடுபட வேண்டியது இருக்கும். நெருங்கிய உறவினர்களிடம் நல்லுறவு ஏற்படும். உத்யோக மாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மேன்மை நிலை உண்டாகும்.

பரிகாரம் : பைரவரை வணங்கி வழிபடவும்

சிம்ம ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப நபர்களிடம் கலந்து ஆலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். பணவரத்தில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத வகையில் உதவிகள் கிட்டும். குடும்பத்தில் சுப விரயங்கள் ஏற்படும் என்பதால் கடன் வாங்க வேண்டியிருக்கும். தேவையற்ற பிரச்னைகளில் தலையிடாதிருப்பது நல்லது. பிறர் விஷயங்களில் தலையிடாதிருந்தால் வீண் பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம். புது வாகனம் வாங்கும் யோகம் உண்டு. உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவியிடையே சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் வரும். திருமண முயற்சிக்கு சிறப்பான பலன் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வீட்டில் குதூகலம் அதிகரிக்கும். வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். உத்யோகத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

பரிகாரம் : சூரியனார் கோவிலுக்கு சென்று வழிபடவும்

கன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடக்கும். உங்கள் குடும்ப பெருமை உயர்த்த நிறைய வழி கிடைக்கும். மறைமுக எதிரிகளின் தொல்லை சுவடு தெரியாமல் மறையும். உடன்பிறப்புகளிடம் விட்டு கொடுத்து போவது நல்லது. வெளிநாடு தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவியிடையே இருந்த சண்டை சச்சரவுகள் நாளடைவில் குறையும். திடீர் பயணங்களும் அவற்றால் நன்மைகளும் உண்டாகும். எதிர்பாராத தன லாபம், வெற்றி, அதிர்ஷ்டம் ஆகியவற்றை அடையலாம். வழக்குகளில் சாதகமான நிலை உண்டாகும். உத்யோகத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும். தொழில், வியபார ரீதியாக நிறைய அலைச்சல் உண்டாகும்.

பரிகாரம் : நவக்கிரத்தை தினமும் வழிபடவும்

துலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, வேண்டிவர்களுக்கு உதவுவதாக கூறி எந்த ஒரு பிரச்னையிலும் சிக்கிக்கொள்ள வேண்டாம். மனதில் புது தெம்பும், தைரியம் அதிகரிக்கும். உங்கள் எதிர்கால கனவில் ஒன்று நிறைவேறும். உடல் நிலையை பொறுத்தவரை எந்த பிரச்சனையும் வர வாய்ப்பு இல்லை. மருத்துவரின் தகுந்த ஆலோசனையின்றி எந்த மருந்து மாத்திரையும் உட்கொள்ள வேண்டாம். உங்களது பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். குடும்ப வருமானம் பெரிய அளவில் எதிர்பார்க்க முடியாது. கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கடன் பிரச்சனைகளை ஓரளவு சமாளிக்க முடியும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

பரிகாரம் : கிருஷ்ணரை வணங்கி வழிபடவும்

விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். பொருளாதார உயர்வால் வாழ்க்கைத் தரம் உயரும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். முக்கியமான பணிகளில் நேரடியாக களத்தில் இறங்குவது நல்லது. உறவினர்களால் கலகம் உண்டாவதற்கான வாய்ப்பு உண்டு. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிப்பதால் உடல் சோர்வடையும். திட்டமிட்ட காரியங்கள் ஏதோ ஒரு வகையில் எப்படியோ நிறைவேறும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். குடும்பத்தில் வருமானத்திற்கு மீறிய செலவுகள் உண்டாகும். கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். உத்யோகத்தில் உங்கள் புகழ் ஓங்கும். தொழில், வியாபாரத்தில் வருமானம் உயரும்.

பரிகாரம் : வராகியை வணங்கி வழிபடவும்

தனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்களின் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் தொடர்ந்து கொண்டே இருக்கும். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். வாக்கு வன்மையால் எதையும் சாதிக்க முடியும். மனதில் இருந்த வீண் பயம் அகலும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் அனுகூலமாக நடக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பெரியோர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். பிரியமானவர்கள் வழியில் சில தொந்தரவுகளும் உண்டு. நேர்மையான செயல்களால் பலரது பாராட்டை பெற முடியும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய முற்சிகள் பலிதமாகும். பழைய கடனை முழுமையாக அடைக்க முடியும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மறு பேச்சு இருக்காது. உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

பரிகாரம் : குரு பகவானை வழிபடவும்

மகர ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் இருக்கும். மனதில் இனம் புரியாத கவலைகளும், பயமும் ஏற்படும். உங்கள் பிடிவாத குணத்தின் காரணமாக முக்கிய நபர்களின் நட்பை இழக்க நேரிடும். ஆன்மிக சிந்தனை மேலோங்கும். புதிய நண்பர்கள் அறிமுக மாவார்கள். உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. எதிரிகள் விலகிபோவர். குடும்பத்தில் இருந்த குழப்ப நிலை நீங்கும். தினசரி செலவுகள் கட்டுப்படுத்த புது யுக்திகளை கையாள வேண்டிவரும். பழைய கடன்களை அடைக்க புது வழி கிடைக்கும். உடல் உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு இருக்கும். குடும்பத்தினருடன் உல்லாசப் பயணம் செல்வதற்கான வாய்ப்பு உண்டு. திட்டமிடாத திடீர் பயணங்கள் உண்டு. உத்யோகத்தில் அமைதி நிலவும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும்.

பரிகாரம் : ஸ்ரீ சாய்பாபாவை வணங்கி வழிபடவும்

கும்ப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் செலவுகள் எதிர்பார்த்ததை விட சற்று அதிகமாகவே இருக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணையலாம். சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. பண வரவு திருப்திகரமாக இருக்கும். பல நல்ல செய்திகள் உங்களை வந்து சேரும். திருமண காரியம் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்லவும். பொறுப்பாக செய்யும் காரியங்களால் உங்களின் மதிப்பு உயரும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். பயணங்களால் செலவுகளும் அலைச்சல்களும் ஏற்படும். தேவையில்லாத காரியங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். புது தொழில் யோகம் அமையும்.

பரிகாரம் : விநாயகரை வணங்கி வழிபடவும்

மீன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எதிர்பாராத சில அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வரும். மறைமுக எதிர்ப்புகள் மறையும்.வழக்குகள் முடிவிற்கு வரும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றிகிட்டும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் அனுகூலம் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வெளிவட்டார பழக்கவழக்கங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த பொருளையும் சாப்பிட வேண்டாம். பழைய கடன் பிரச்சனை ஓரளவு குறையும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர்களோடு வீண் கருத்துவேறுபாடு தோன்றும். பெற்றோரின் அன்பும், ஆசியும் கிட்டும். உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டு. தொழில், வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றி பெரும்.

பரிகாரம் : லக்ஷ்மி நரசிம்மரை வணங்கி வழிபடவும்.


தமிழ் மாத ராசி பலன்கள் – டிசம்பர் 2025
(2025) – டிசம்பர் மாத ராசி பலன்கள் – (01-12-2025 – 31-12-2025)

விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 15ம் தேதி முதல் மார்கழி மாதம் 16ம் தேதி வரை. வாக்கிய பஞ்சாங்கப்படி 01-12-2025 முதல் 31-12-2025 வரை ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியே கிரக நிலைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட பொதுப்பலன்கள் ஆகும். இதில் அவரவர் ஜாதகத்தில் நடக்கும் நடப்பு திசை, புத்தி சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கும் பட்சத்தில் ஒரு சிலருக்கு பலன்கள் சற்று மாறுபடக்கூடும். இருப்பினும் ஒவ்வொருவரும் தெய்வ அனுகூலங்களை கூட்டுவதின் மூலமாக தனக்கு வரும் கெடுபலன்களை குறைத்து நல்ல பலன்களை அனுபவிக்க முடியும் என்பதே உண்மை.

2025 டிசம்பர் மாத கிரக நிலை மாற்றம் பின்வருமாறு :

07/12/2025 தனுசு – செவ்வாய்
16/12/2025 தனுசு – சூரியன்
24/12/2025 மகர – சுக்கிரன்
29/12/2025 தனுசு – புதன்



ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் “ஆலந்தூர்” A.வினோத் குமார், Ph.d (Astrology)

டிசம்பர் மாத ராசி பலன்கள் (2025)

மேஷ ராசி அன்பர்களே

மேஷ ராசி நேயர்களே, இந்த மாதம் நீண்ட நாள் எண்ணங்களும், திட்டங்களும் செயல்வடிவம் பெரும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். புத்தி சாதூரியதால் எதிலும் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் இருக்கும். பாலிய நண்பர்களின் சந்திப்பு நிகழும். சுற்று வட்டாரத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். எதிர்கால கனவுகள் நிறைவேறும். தேவையற்ற எதிர்மறை சிந்தனைகளையும் மன குழப்பங்களையும் தவிர்ப்பது அவசியம். எதைச் செய்வது எதை விடுவது என்ற மன தடுமாற்றம் ஏற்படும். அடுத்தவரிடம் உங்களது குறைகளை சொல்வதை தவிர்க்கவும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். எங்கும் எதிலும் கவனம் தேவை. பண விஷயங்களில் எச்சரிக்கை இருக்கவும். உடன்பிறப்புகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். பயணங்களில் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதம் ஏற்படும். வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். அடுத்தவர் பிரச்னையில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம். குடும்பத்தில் வீண் விரயங்களை தவிர்க்கவும். வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்தால் சிக்கல் இல்லாமல் இருக்கலாம். கடன் தொல்லை அவ்வப்போது இருக்கும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். உடல் நலம் சீராகும். உறவினர்களின் அன்பு தொல்லை இருக்கும். நல்லவர்களின் நட்பு உற்சாகம் தரும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். புதிய முயற்சிகளை சற்று தள்ளி வைக்கவும். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள நல்ல வாய்ப்புகள் வரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

சந்திராஷ்டமம் : 17,18,19 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்


ரிஷப ராசி அன்பர்களே

ரிஷப ராசி நேயர்களே, இந்த மாதம் எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் ஒன்று வரும். பல இக்கட்டான சூழ்நிலைகளில் கூட தெளிவான முடிவினை எடுக்க முடியும். எந்த ஒரு செயலையும் நன்கு யோசித்து செய்வது நல்லது. உங்கள் விருப்பத்திற்கு மாறாக சில வேலைகள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். பொருளாதார சிக்கல் வந்தாலும் பெரிதாக பாதிக்காது. இஷ்ட தெய்வ வழிபாட்டால் அனுகூலம் உண்டு. குடும்ப அந்தஸ்தை உயர்த்த முடியும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். குடும்ப விஷயங்களில் எப்போதும் கவனத்துடன் இருக்கவும். யாரிடத்திலும் வாக்கு வாதம் செய்ய வேண்டாம். வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். எந்த விஷயத்தையும் நாசுக்காக கையாளுவும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வதால் பிரச்னைகளை தவிர்க்கலாம். வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். எதிர்காலம் பற்றிய பயம் குழப்பம் வந்து நீங்கும். பூர்விக சொத்து வழியில் சில வில்லங்கம் இருக்கும். உற்றார், உறவினர்கள் அனுசரணையாக இருப்பர். குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் இருக்கும். விரும்பிய பொருட்களை வாங்க முடியும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். உடல் உபாதைகள் நீங்கும். தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் வரும். குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தடைப்பட்ட திருமணம் விரைவில் கைகூடி வரும். பழைய கடனை அடைக்க முடியும். அனாவசிய செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்கவும். வாகன பயணங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. விட்டுப்போன உறவுகளின் ஆதரவு மீண்டும் வந்து சேரும். வெளிநாட்டு தொடர்பான விஷயங்களில் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் திட்டமிடல் அவசியம்.

சந்திராஷ்டமம் : 19,20,21,22 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்


மிதுன ராசி அன்பர்களே

மிதுன ராசி நேயர்களே, இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த காரியத்தை கன கச்சிதமாக முடிக்க முடியும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகள் வந்து நீங்கும். பொருளாதார நிலையில் சில பின்னடைவுகள் ஏற்பட்டு பின் சரியாகும். பயணங்களில் உடைமைகளை கவனமாக வைத்துக் கொள்ளவும். உடல்நலனில் கவனம் தேவை. வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு சில சங்கடங்கள் உண்டாகும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம். தேக ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதில் சிரமம் ஏற்படும். நண்பர்களின் வருகையும் அவர்கள் மூலம் சந்தோஷமும் இருக்கும். குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். சுற்று வட்டாரத்தில் பேச்சுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பயணங்களின் போது உங்களுடைய உடமைகளை கவனமாக வைத்துக்கொள்ளவும். தாயால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உற்றார், உறவுகளால் மகிழ்ச்சி உண்டு. வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளும் தாமதமும் ஏற்படும். வாகன பயணங்களில் கவனம் தேவை. எதிலும் காலதாமதத்தை தவிர்க்கவும். சில நேரங்களில் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலைகள் உருவாகும், ஆகையால் ஆடம்பர செலவுகளை குறைத்துகொண்டால் பிரச்சனை ஏதும் இல்லை. கணவன், மனைவிக்குள் இருந்த மனசங்கடம் நீங்கும். உறவினர்கள் வழியில் சில பிரச்சனைகள் வரும். பெற்றோர்கள் நலனில் அக்கறைகொள்ளவும். சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். குடும்பத்தில் பல சாதகமான விஷயங்கள் நடக்கும். எதிலும் சரியான முடிவுக்கு வரமுடியாமல் தடுமாற்ற நிலை ஏற்படும். உத்யோக மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரம் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

சந்திராஷ்டமம் : 22,23,24 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்


கடக ராசி அன்பர்களே

கடக ராசி நேயர்களே, இந்த மாதம் எடுக்கும் போகும் புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனதில் எண்ணிய காரியங்கள் யாவும் இனிதே நிறைவேறும். எதிலும் நிதானமும், கவனமும் தேவை. குடும்பத்தில் அனுசரித்து செல்வதால் மட்டும் பிரச்னைகளை தவிர்க்கலாம். பொருளாதாரத்தில் மந்த நிலை காணப்படும். எதிர்மறை சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். உறவினர்களிடம் சின்ன மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். குடும்பத்திற்கு தேவையானதை செய்து கொடுத்து நன்மதிப்பை பெற முடியும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பிறருக்கு வாக்கு கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தெய்வ பிராத்தனையால் வேண்டியது நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். திருமண காரியம் கைகூடும். எத்தனை தடைகள் பிரச்னைகள் வந்தாலும் எதிர்கொண்டு வெற்றி பெற முடியும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பேச்சில் கவனம் தேவை. மனதில் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சலும் ஆதாயமும் உண்டு. வீடு வாகனம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். உங்கள் அனுபவ அறிவை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்கள் அமையும். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடினமான காரியங்கள் கூட எளிதில் முடியும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம். குடும்ப பிரச்சனைகளை பேசி சரி செய்து கொள்ளவும். திட்டமிடாத பயணங்கள் நிறைய உண்டு. சின்ன சின்ன விஷயங்களுக்கு கோபப்பட வேண்டாம். வம்பு வழக்குகளை தவிர்க்கவும். குடும்பத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு செலவுகள் வரும். புதிதாக செய்ய விரும்பும் காரியங்களை சற்று தள்ளிப்போடவும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

சந்திராஷ்டமம் : 25,26,27 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்



சிம்ம ராசி அன்பர்களே

சிம்ம ராசி நேயர்களே, இந்த மாதம் பல புதுமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்ற முடியும். மனதில் உள்ளதை ஒளிவு மறைவின்றி பேசுவது பல வகையிலும் நல்லது. பொருளாதார நிலை உயர்வடையும். எல்லா வகையிலும் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். தெளிவான மனநிலை இருக்கும். எதிர்பார்க்காத நேரத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். மன சஞ்சலங்களை தவிர்த்து உறுதியுடன் செயல்படுவது நல்லது. திட்டமிட்ட பயணங்கள் நன்மை தரும். உடல் நலனில் கவனம் தேவை. குடும்பத்தில் சிக்கனமாக இருந்து சேமிக்க பழகவும். வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சொந்த பந்தங்களுடன் வேண்டாத விவாதம் செய்ய வேண்டியிருக்கும் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து விலகும். நண்பர்களிடத்தில் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும். கணவன்,மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பெண்கள் வழியில் சில நன்மைகள் உண்டு. இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. உத்யோகத்தில் அமைதி நிலவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும்.

சந்திராஷ்டமம் : 27,28,29 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்


கன்னி ராசி அன்பர்களே

கன்னி ராசி நேயர்களே, இந்த மாதம் குடும்பத்தினரிடம் வளைந்து கொடுத்து போக வேண்டியது முக்கியம். மனதில் இருந்த கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும். புதிய முயற்சிகள் சாதகமான பலனை தரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னைகள் அகலும். கையில் எடுத்துக் கொண்ட வேலையை சிறப்பான முறையில் செய்து முடிக்க முடியும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் குறையும். நெருங்கின உறவினர்களிடையே ஒற்றுமை குறையும். சொன்ன சொல்லை காப்பாற்றுவதில் சிரமம் இருக்கும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வர். மனதில் நினைத்த காரியத்தை சீக்கிரத்தில் முடிக்க முடியும். விலகி சென்ற நபர்கள் மீண்டும் உங்களை நாடி வருவர். குடும்பத்தில் சுப நிகழ்வுகளும், சுபவிரங்களும் உண்டு. நண்பர்களுக்கு கேட்ட உதவியை செய்து தர இயலும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இனிய பேச்சால் மற்றவரை எளிதில் கவர முடியும். வீடு வாகன பராமரிப்பு செலவுகள் அதிகமாகும். தேவையற்ற வீண் மனக்குழப்பத்தை தவிர்ப்பது நல்லது. வெளிநாட்டு தொடர்பான ஆதாயம் உண்டு. குடும்பத்திற்கு தேவையானதை செய்து தர முடியும். புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். கணவன், மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தெய்வ காரியங்களில் சிந்தனை செல்லும். உடல் நலனில் கவனம் தேவை. உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டு அவசியம். வாகனங்களில் மெதுவாக செல்லவும். பொது பிரச்சனையில் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருந்த எதிர்ப்புகள் குறையும். புதிய தொழில், வியாபாரம் முயற்சிகளை தவிர்க்க வேண்டியது அவசியம்.

சந்திராஷ்டமம் : 1,2,3 & 29,30,31 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்


துலாம் ராசி அன்பர்களே

துலாம் ராசி நேயர்களே, இந்த மாதம் எல்லா விஷயங்களிலும் தனி கவனம் செலுத்த வேண்டி வரும். மன வலிமை அதிகரிக்கும். சாதுரியமான பேச்சால் அனைவரையும் கவர முடியும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை உருவாகும். எதிலும் நிதானமாக சிந்தித்து செயல்படுவது நல்லது. பொருளாதாரநிலை சீராக இருக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும். பெரியோர்களின் அறிவுரை கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளும், தாமதங்களும் ஏற்படும். உறவுகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். எதிரிகளின் பலம் குறைந்து காணப்படுவர். உடன்பிறப்புகளால் மனஸ்தாபங்கள் வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வெளிநாட்டு தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். நீண்ட நாளாக தடைபட்ட காரியங்கள் நிறைவேறும். உற்றார், உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகும். சில நேரங்களில் மன குழப்பங்களும், மன சஞ்சலங்களும் ஏற்படும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். உடல் நிலையில் சிறு பிரச்னைகள் வந்து நீங்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். வெளிநாடு சென்று வரும் பாக்கியம் உண்டு. உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்ப பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். நட்பு வழியில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். கடன் பிரச்னைகள் குறையும். திருமணம் தொடர்பான பேச்சுக்கள் தொடங்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். பிறர் பாராட்டும் செயல்களை செய்ய முடியும். புதிய பொறுப்புகளும் பொருள் சேர்க்கையும் உண்டாகும். உத்யோகத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

சந்திராஷ்டமம் : 3,4,5 & 31 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்


விருச்சிக ராசி அன்பர்களே

விருச்சிக ராசி நேயர்களே, இந்த மாதம் உங்கள் எதிர்பார்ப்புக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவர். குடும்பத்தில் சாதகமான நிலைகள் நிலவும். கொடுக்கல், வாங்கலில் விழிப்புணர்வு தேவை. பொருளாதார நிலையில் சிறுசிறு ஏற்றத்தாழ்வுகள் வந்து நீங்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நிலை நீங்கும். அடுத்தவரின் கருத்துக்கு செவி சாய்க்க வேண்டாம். தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். எந்த ஒரு பிரச்சனைகள் வந்தாலும், அதை சமாளிக்க முடியும். உங்கள் விருப்பங்களில் ஒரு சில விஷயங்கள் நிறைவேறும். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிர்ஷ்டம் கிடைக்கும். உடல் ரீதியாக ஒரு சில தொந்தரவுகள் வரும். குடும்பத்தில் சுப காரியங்கள் இனிதே நடைபெறும். கணவன், மனைவிக்கிடையே ஈகோ பிரச்சனையே தவிர்க்கவும். நண்பர்களிடம் மனம் கோணாமல் நடந்துகொள்ளவும். வாகன சேர்க்கை ஏற்படும். திருமணம் சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக முடியும். ஆன்மீகம் தொடர்பான விஷயங்களுக்கு நிறைய செலவு செய்யவேண்டிவரும். அடிக்கடி பயணங்கள் செல்வதன் மூலம் ஆதாயங்கள் உண்டு. வழக்குகளில் இருந்து வந்த தொய்வு நிலை நிலை மாறும். பல புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். உத்யோகத்தில் இருந்த எதிர்ப்புகள் அடங்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

சந்திராஷ்டமம் : 5,6,7 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்


தனுசு ராசி அன்பர்களே

தனுசு ராசி நேயர்களே, இந்த மாதம் குடும்பத்தில் நல்ல பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். மனதில் புது உற்சாகம் பிறக்கும். நீண்ட நாளாக வரவேண்டிய பணம் வந்து சேரும். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். கடந்த கால பிரச்னைகளை நினைத்து வருந்த வேண்டாம். பொருளாதார நிலை படிப்படியாக உயரும். குடும்ப விஷயங்களில் ஒரு சில சிக்கல்கள் இருந்தாலும் அதை சீர் செய்ய முடியும். எடுக்கும் முயற்சிகளில் தடைகள் இருந்தாலும் விடா முயற்சியால் மட்டுமே வெற்றி கிடைக்கும். தேவையற்ற வீண் விரயங்கள் இருப்பதால் சேமிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிரிகளால் ஏற்பட்ட இடைறுகள் நீங்கும். முக்கிய காரியங்கள் முடிவதில் தாமதம் இருக்கும். தேவையற்ற மன சஞ்சலம் உண்டாகலாம். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கடன் தொல்லைகள் குறையும். நீங்கள் திட்டமிட்டது ஒன்றாகவும். நடப்பது ஒன்றாகவும் இருக்கும். தற்போது குடியிருக்கும் வீட்டை சீரமைக்க வேண்டிவரும். வாகனத்தால் ஏற்பட்ட அலைச்சல் வெகுவாக குறையும். வீட்டிற்கு தேவையான பொருள் சேர்க்கைக்கு வாய்ப்புண்டு. கணவன் மனைவிக்குள் மனக் கசப்புகள் உண்டாகும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். திருமணம் தொடார்பான பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். குடும்பத்தில் திட்டமிடாத செலவுகள் வரும். பிரியமானவர்களிடம் இருந்த மனக்கசப்பு விலகும். உடனிருப்பவர்களிடம் இருந்த மனஸ்தாபம் நீங்கும். உத்யோகத்தில் அலைச்சல் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.

சந்திராஷ்டமம் : 10,11,12 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்


மகர ராசி அன்பர்களே

மகர ராசி நேயர்களே, இந்த மாதம் புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். மனதில் நினைத்ததை சாதித்து கொள்ள முடியும். குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். பண வரவை பொறுத்தவரை ஓரளவு திருப்திகரமாக இருக்கும், இருப்பினும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு பின் சீராகும். சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். கோபத்தை கட்டுப்படுத்தவன் மூலம் நன்மை உண்டாகும். சோம்பேறித்தனத்தை விட்டு சுறுசுறுப்புடன் செயல்படவும். எதிர்மறை சிந்தனையை தவிர்க்கவும். எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ள முடியும். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். எதிரிகளால் தொல்லை இருப்பினும் ஆதாயமும் உண்டு. எதையும் வெல்லும் ஆற்றல் உருவாகும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும் வீடு, வாகனத்தை சீர் செய்ய வேண்டிவரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். குடும்பத்தில் ஏற்படும் செலவுகளை கட்டுப்படுத்த முடியாது. கணவன், மனைவி ஒற்றுமை பலப்படும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கவனமாக இருக்கவும். குடும்பத்தில் சுப நிகழிச்சிகள் நடக்கும். உடனிருப்போர் ஆதரவாக இருப்பர். சொந்த பந்தங்களால் நன்மைகள் வந்து சேரும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர். வம்பு, வழக்குகளில் ஈடுபட வேண்டாம். அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் ஒரு மந்தமான சூழ்நிலை நிலவும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.

சந்திராஷ்டமம் : கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்


கும்ப ராசி அன்பர்களே

கும்ப ராசி நேயர்களே, இந்த மாதம் மனதில் புது தெம்பும் உற்சாகமும் தோன்றும். எத்தனை பெரிய சிக்கல்கள் வந்தாலும் அவையெல்லாம் எதிர்கொண்டு ஜெயிக்க முடியும். தெய்வ அனுகூலம் உண்டு. மன பயத்தை நீக்கவும். வெளிநாட்டு தொடர்பான ஆதாயம் உண்டு. தியானத்தால் மன நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். புதிதாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனை தரும். தேக நலனில் அக்கறைகொள்ளவும். பிதுர் வழி சொத்தால் ஆதாயம் உண்டு. குடும்பத்தை பற்றிய உயர்வான எண்ணம் இருக்கும். எந்த ஒரு நல்ல காரியத்தையும் தாமதிக்காமல் செய்து முடிக்கவும். இழுபறியாக இருந்த ஒரு காரியத்தில் சீக்கிரத்தில் நல்ல பலன் கிடைக்கும். மற்றவர்களிடம் பேசும் வார்த்தைகளின் அதிக கவனம் தேவை. பண சேமிப்பில் கூடுதலாக கவனம் செலுத்தவும். வீடு மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த வேலைகள் சீக்கிரத்தில் முடியும். எதிரிகள் விலகிச் செல்வர். வழக்கு விவகாரங்களில் சாதகமாக முடியும். பிரியமானவர்களிடம் ஏற்பட்ட சண்டை, சச்சரவுகள் நீங்கும். பழைமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். வீட்டிற்கு தேவையானதை வாங்க முடியும். எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். ஒரு சில காரிய தடைகள் ஏற்பட்டாலும், முடிவில் சுபமாக முடியும். கடன் பிரச்சனை தலைதூக்கும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். குடும்பத்தில் வரவை விட செலவுகள் தான் அதிகம் இருக்கும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிறகு சீராகும். குலதெய்வ வழிபாடு நன்மையை தரும். சில கசப்பான விஷயங்களை அனுசரித்து போக வேண்டியுள்ளது. சமுக அந்தஸ்து உள்ளவர்களின் தொடர்பு கிட்டும். உத்யோகத்தில் உங்கள் புகழ் ஓங்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

சந்திராஷ்டமம் : 12,13,14 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்


மீன ராசி அன்பர்களே

மீன ராசி நேயர்களே, இந்த மாதம் குடும்ப பொருளாதார நிலை தேவையான அளவு உயர்ந்தாலும், ஆடம்பர செலவினங்கள் உண்டு. உங்களது செயல்கள் ஒவ்வொன்றும் அனைத்தும் வேகமாக இருக்கும். தர்ம காரியங்கள் செய்வதால் நன்மைகள் ஏற்படும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். குடும்ப வாழ்வில் சில தடைகள் பிரச்னைகள் வந்து நீங்கும். செவ்வாய் பலம் பெறுவதால் தந்தையால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. உங்களை சுற்றி இருப்பவர்களிடம் பழகும்போது கவனம் தேவை. எதிலும் தீர யோசித்து பின் முடிவு எடுக்கவும். எடுக்கும் முயற்சிகளில் சில நேரங்களில் தடை இருந்தாலும் விடாமுயற்சியால் வெற்றி பெற முடியும். உற்றார், உறவினர்களிடம் மனகசப்புகள் உண்டாகும். பண தேவைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத ஒரு சூழ்நிலை வரும். யாரிடத்திலும் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். திட்டமிட்ட பயணங்கள் தள்ளி கொண்டே போகும். தொடர் அலைச்சல் காரணமாக உடல் நலம் பாதிக்கலாம். சொந்த பந்தங்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர வாய்ப்புள்ளது. வீண் விவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. மருத்துவச் செலவுகள் அவ்வப்போது வரும். பிரியமானவர்களால் நன்மை உண்டாகும். முன் பின் தெரியாத நபர்களிடம் அதிக எச்சரிக்கை தேவை. கணவன் மனைவிடையே சுமுகமான உறவு இருக்கும். குடும்பத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டும். கொடுக்கல், வாங்கலை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது அவர்களின் தரம் அறிந்து உதவுவது நல்லது. உத்யோகத்தில் நிதானம் அவசியம். தொழில், வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும்.

சந்திராஷ்டமம் : 14,15,16,17 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.


Leave a Reply