யாழில் மாடியில் இருந்து விழுந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
17-12-2025 | யாழ்ப்பாணம்
யாழில் மாடியில் இருந்து விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (16-12-2025) மதியம் உயிரிழந்துள்ளார். அச்செழு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் தட்சணாமூர்த்தி (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் திங்கட்கிழமை (15-12-2025) தாவடி பகுதியில் 2வது மாடியில் வேலை செய்தபோது தவறி 1வது மாடியில் விழுந்துள்ளார். இதன்போது படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (16-12-2025) மதியம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.