இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் சேதமடைந்த பிறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களை மீண்டும் வழங்குவதற்கு நடவடிக்கை!

17-12-2025 | இலங்கை

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் சேதமடைந்த பிறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களை மீண்டும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் திணைக்களத்தின் பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பதிவாளர் திணைக்களத்தின் பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பதிவாளர் திணைக்களத்தின் பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன் மேலும் தெரிவிக்கையில்,

அனர்த்தத்தினால் சேதமடைந்த பிறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் மக்களுக்கு மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய பிறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களை வழங்குவதற்கு நடமாடும் சேவை முறை ஆரம்பிக்கப்படவுள்ளது.

அத்துடன், அனர்த்தத்தால் இறந்தவர்களுக்கு விரைவாக இறப்பு சான்றிதழ்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply