கோவா ஹோட்டல் உரிமையாளர்கள் தாய்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.
17-12-2025 | பணஜி
கோவாவின் பாகா கடற்கரை அருகே உள்ள, ‘பிர்ச் பை ரோமியோ லேன்’ என்ற இரவு விடுதியில் டிசம்பர் 7ம் தேதி அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.
விபத்துக்குப் பொறுப்பான விடுதி உரிமையாளர்களான கவுரவ் லுாத்ரா மற்றும் சவுரவ் லுாத்ரா சகோதரர்கள், சம்பவத்துக்குப் பின் டில்லியில் இருந்து தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து தப்பிச் சென்றனர்.

மத்திய அரசு அவர்களின் பாஸ்போர்ட்டை முடக்கியதால், தாய்லாந்து போலீசார் டிசம்பர் 11ம் தேதி அவர்களை கைது செய்தனர்.
‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் உதவியுடன் கவுரவ் மற்றும் சவுரவ் லுாத்ரா நேற்று தாய்லாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். பயணியர் விமானத்தில் டில்லி அழைத்து வரப்பட்ட அவர்களை, விமான நிலையத்தில் தரையிறங்கிய உடன், டில்லி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
அப்போது கோவா போலீசாரும் உடன் இருந்தனர். அவர்கள் இருவரையும் கோவா அழைத்து சென்று விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.