தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.

22-12-2025 📍 சென்னை

சர்வதேச முதலீட்டாளர்களும், உலகின் பல்வேறு நாடுகளும், தங்கம் மற்றும் வெள்ளியில் அதிக முதலீடு செய்வதால் அவற்றின் விலை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு, 20 ரூபாய் உயர்ந்து, 12,400 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 160 ரூபாய் அதிகரித்து, 99,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 5 ரூபாய் உயர்ந்து, 226 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது.

நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் இன்று (டிசம்பர் 22) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ஒரு சவரன் ரூ.99,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,480க்கு விற்பனை ஆகிறது. மீண்டும் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை நெருங்கியதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.231க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்த நிலையில், ஒரு கிலோ வெள்ளிரூ.2.31 லட்சத்துக்கு விற்பனை ஆகிறது.

Leave a Reply