Tuesday, April 7, 2026

07.04.1978 அன்று பஸ்தியம்பிள்ளைக்கு புலிகளின் பதிலடி

0 comments

பொத்துவில் எம்.பி. மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையடுத்து யாழ்ப்பாணத்தில் உள்ள பொலிஸ் உளவுப்படையினர் விடுதலைப்புலிகளை வேட்டையாடுவதில் மும்முரமாக இறங்கினர். இந்தப் பொலிஸ் உளவுப் படைக்குத் தலைமை தாங்கிய இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை பொத்துவில் எம்.பி. மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பொறுப்பான விடுதலைப்புலிகளை அடையாளம் கண்டு விட்டதாகக் கூறப்பட்டது.

விடுதலைப்புலிகள் எனச் சந்தேகப்படுபவர்களைக் கைது செய்வதற்காக வடக்கில் பொலிஸ் படையினர் பல்வேறு இடங் களில் திடீர் சோதனைகளை அடிக்கடி மேற்கொண்டனர். இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை சித்திரவதை செய்வதில் கைதேர்ந்தவர். தீவிரவாதத் தமிழ் இளைஞர்களைக் கண்டபடி கைது செய்வதிலும், தடுப்புக்காவலில் வைப்பதிலும், அச்சுறுத்துவதிலும், ஈவிரக்கமின்றிச் சித்திரவதை செய்வ திலும் இவர் பேர் பெற்றிருந்தார்.

அரசியல் ரீதியில் விழிப்புணர்வுகொண்ட இளைஞர்களைக் காட்டுமிராண்டித்தனமாக நசுக்கி அழிக்கும் இனவாத அரசியல் ஏஜண்டாக பஸ்தியாம்பிள்ளை செயற்பட்டார். இதனால் தமிழ் மக்களின் வெறுப்பிற்கு இவர் இலக்கானார். எமது இயக்க நடவடிக்கைகள் பற்றிய பல முக்கிய தகவல்களை இவர் திரட்டி வைத்திருந்தமை விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தலாகவும் அமைந்தன.

விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாம் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொண்ட இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை பொலிஸ் அதிரடிப் படையுடன் 1978 ஏப்ரல் 7 ம் திகதி முருங்கன் -மடு வீதிக்கு உட்புறமான காட்டுப்பகுதிக்குள் திடீர் முற்றுகையை மேற்கொண்டார். பயிற்சி முகா மைச் சுற்றி வளைத்துக் கொண்ட பொலிஸ் படையினர் விடுதலைப்புலிகளைத் துப்பாக்கி முனையில் மடக்கினர். இந்தத் திடீர் நிகழ்ச்சியால் விடுதலைப் புலிகள் திகைப்புற்றனராயினும் கணநேரத்திற்குள் அபாயகரமான நிலைமை யிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ள உசாராயினர்.

விடுதலைப்புலிகளின் கமாண்டோத் தலைவர்களில் ஒருவரான லெப்டினன்ட் செல்லக்கிளி (செல்வநாயகம், அம்மான்) ஒரு பொலிஸ் அதிகாரியை மடக்கிப்பிடித்து அவரது கையிலிருந்த இயந்திரத் துப்பாக்கியைப் பறித்தெடுத்து பொலிஸ் படை யினரைச் சுட்டு வீழ்த்தினார். இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை, சப்-இன்ஸ் பெக்டர் பேரம்பலம், பொலிஸ் கான்ஸ்டபிள் பாலசிங்கம், பொலிஸ் டிரைவர் சிரிவர்த்தனா ஆகியோர் இச்சம்பவத்தின் போது சுட்டுக் கொல்லப் பட்டனர்.

இச்சம்பவம் அரசாங்கத்தைத் திகிலடையச் செய்தது. விடுதலைப் புலிகளை பொலிஸார் தேடிப் பிடிக்குமாறும் இத்தீவிர வேட்டைக்கு இராணுவத்தினரும் உதவி புரிய வேண்டுமென்றும் ஜனாதிபதி ஜயவர்த்தனா அழைப்பு விடுத்தார். மறுபுறத்தில் சித்திரவதைக்குப் பேர் போன ஒரு துரோகி ஒழிந்தது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் குதூகலத்தை ஏற்படுத்தியது.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00