09.03.2009 அன்று சிறிலங்காப்படையினரின் ஆட்லெறி பீரங்கி தளத்தை தாக்கியழித்த கரும்புலிகள்.
கரும்புலி
லெப். கேணல் மாறன்
கரும்புலி
மேஜர் தமிழ்மாறன்
கரும்புலி
கப்டன் கதிர்நிலவன்
வட தமிழீழம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு தேராவில் பகுதியில் 09.03.2009 அன்று சிறிலங்காப் படையினரின் பாரிய தற்காலிக ஆட்லெறி பீரங்கி தளத்தில் ஊடுருவி கைப்பற்றி தாக்கியழித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி லெப். கேணல் மாறன், கரும்புலி மேஜர் தமிழ்மாறன், கரும்புலி கப்டன் கதிர்நிலவன் ஆகிய கரும்புலி மாவீரர்களின் உட்பட ஏனைய மாவீரர்களின் நினைவில்..
முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு பகுதியில் உள்ள தேராவில் பகுதியில் சிறிலங்கா படையினர் அண்மையில் அமைத்திருந்த ஆட்லெறி பீரங்கித் தளத்தை 09.03.2009 அன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் படையணியினரும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணியினரும் இணைந்து தாக்கியழித்துள்ளனர்.
ஆறு ஆட்லெறி பீரங்கிகளை கைப்பற்றிய விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் படையணியினரும் கேணல் கிட்டு பீரங்கி படையணியினரும் அவற்றினை அங்கிருந்து இயக்கி சிறிலங்கா படையினர் மீது செறிவான பீரங்கித் தாக்குதல்களை நடத்திய பின்னர் அத்தளத்தினை அழித்துவிட்டு தளம் திரும்பினர்.
இதில் அப்பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான எறிகணைகளும் வெடிமருந்துகளும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. சிறிலங்கா படையினர் தரப்பில் 50க்கும் அதிமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர்.
இத்தாக்குதலில் 3 கரும்புலிகள் உட்பட 7 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.
இவர்களுடன் கிட்டு பீரங்கிப் படையணி மாவீரர்களான: மேஜர் மலர்ச்செம்மல் | கப்டன் ஈழவிழியன் | கப்டன் காலைக்கதிரவன் | கப்டன் கலையினியவன்.