தமிழீழமே நிரந்தரத்தீர்வு என்பதை வலியுறுத்தி பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கியமிதியுந்துப்பயணம் .
மனித உரிமைகள் ஆணையகத்தின் 58 ஆவது கூட்டத் தொடரினை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணைநடாத்த வேண்டியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதை வலியுறுத்தியும் பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கிய மிதியுந்துப்பயணம்!
பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கிய மிதியுந்துப்பயணத்திற்கு வலுசேர்க்கஅனைத்து உறவுகளையும் 13/02/2025 வியாழன் காலை 10.00 மணிக்கு பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக வருமாறு உரிமையுடன் வேண்டுகின்றோம்.
” காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம்
ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை “
– தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்.
