சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி காலமனார்.
மூத்த ஊடகவியலாளர் ஊடகக் குழுமத்தலைவர் பாரதி தனது 62 ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் சுகயீனம் காரணமாக இன்று காலமனார்.
09.02.2025 நிதர்சனம் குழுமத்தைச்சார்ந்த பரதன் அவர்களின் சகோதரரும் தமிழ் தேசியத்தின்பால் மிகுந்தமிகுந்த பற்று உறுதியோடு பயணித்து பத்திரிகை துறையில் மிகவும் பொறுப்புணர்வோடு பணியாற்றி வந்த ஆழ்ந்த அனுதாபங்கள்.
40க்கும் மேற்பட்ட வருட ஊடகத்துறை அனுபவத்தை கொண்ட இராஜநாயகம் பாரதி தினக்குரல் பத்திரிகையின் வாரமலர் மற்றும் இணையத்தளத்தின் முன்னாள் ஆசிரியரும் ஆவார்.
உயிரிழக்கும் போது இராஜநாயகம் பாரதி வீரகேசரியின் யாழ். பிராந்திய கிளையின் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். ஊடகப் பரப்பில் தமிழ் தேசியத்தின் வழி நின்று பாரதி ஆற்றி வந்த பணிகள் நிச்சயம் வரலாற்றினூடாக அடுத்த தலைமுறைக்கும் காவிச் செல்லும்.
கண்ணீர்வணக்கம்