வாஷிங்டன்: அமெரிக்காவில் நாடு கடத்தப்படும் விமானத்தில் ஏறுவதற்கு தயாராகும் இருக்கும் சட்டவிரோத குடியேறிகள் வீடியோவை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. சட்டவிரோதமாக குடியேற நினைத்தால் இதுதான் நிலை என வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க அதிபராக, ஜன.20ல் டிரம்ப் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக, மும்முரமாக சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து நாடு கடத்தும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று (பிப்., 19) சட்டவிரோதமாக குடியேற நினைத்தால் இதுதான் நிலை, என்று நாடு கடத்தப்படும் விமானத்தில் ஏறுவதற்கு தயாராகும் இருக்கும் சட்டவிரோத குடியேறிகள் வீடியோவை அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.41 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், ஒரு அதிகாரி, கட்டப்பட்ட ஒரு மனிதனை நாடு கடத்தல் விமானத்தில் ஏற தயார்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
ஒரு அதிகாரி ஒரு கூடையிலிருந்து சங்கிலிகள் மற்றும் கைவிலங்குகளை வெளியே எடுக்கிறார். இந்த வீடியோவிற்கு, தொழில் அதிபர் எலான் மஸ்க் ‘ஹாஹா வாவ்’ என கருத்து தெரிவித்துள்ளார்.