10.09.2015 – போலி அறிக்கைகளை இனங்காண்போம்.

அன்பார்ந்த தமிழீழ மக்களே!
அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப்புலிகள் என்னும் எமது கடிதத் தலைப்பைப் பயன்படுத்தித், தமிழின விரோதிகளினால் போலியான, உண்மைக்குப் புறம்பான சில அறிக்கைகள் கடந்த நாட்களில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இவ்வாறான போலியான அறிக்கைகளிற்கும் அனைத்துலகத் தொடர்பகத்திற்கும், எதுவித தொடர்பும் இல்லையென்பதை உறுதிப்படுத்திக்கொள்கிறோம்.
அத்துடன் அனைத்துலகத் தொடர்பகத்தின் உத்தியோகபூர்வமான அறிக்கைகள், எமது தமிழ்த்தேசிய ஊடகங்களான
தாரகம் இணையத்தளம்
தமிழ்த் தேசியத் தொலைக்காட்சி (ttn.tv)
போன்றவற்றினூடாகவே வெளிவரும் என்பதையும் தங்களின் கவனத்திற்குத் தருகிறோம்.
விழிப்பே விடுதலைக்கான முதற்படி