18.03.2025 – புதுடில்லி
இந்திய பிரதமர் மோடியை டில்லியில் சந்தித்தது மறக்கமுடியாதது என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.
சமீபத்தில் லண்டனில் மேற்கத்திய சிம்பொனி இசை அரங்கேற்றம் நடந்தது. இதை செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை இளையராஜா பெற்றிருந்தார். இந்நிலையில் டில்லியில் பிரதமர் மோடியை இளையராஜா சந்தித்தார். அவரிடம், சிம்பொனி இசைத்தது பற்றி பிரதமர் மோடி ஆர்வத்துடன் விசாரித்தார்.
இது குறித்து இளையராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதமர் மோடி உடனான சந்திப்பு மறக்க முடியாதது. அவருடன் பேசியபோது, சிம்பொனி வேலியண்ட் உள்ளிட்ட பல கருத்துக்கள் குறித்து பேசினோம். அவருடைய அன்பும், ஆதரவுக்கும் நான் தலை வணங்குகிறேன். இவ்வாறு இளையராஜா கூறி உள்ளார்.