19.03.2025 – சென்னை
அந்த மையத்தின் அறிக்கை:
தமிழகத்தில் நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் சாம்ராஜ் எஸ்டேட் பகுதியில், 5 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, கோவை மாவட்டம் சின்கோனா, நீலகிரி மாவட்டம் பந்தலுாரில், 4 செ.மீ., மழை பெய்துள்ளது.
தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் மேல் பகுதியில், வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும், கிழக்கு – மேற்கு காற்று சந்திப்பும் நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்று(மார்ச் 19) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும், 24 வரை இதே நிலை தொடர வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் பகல் நேரத்தில் வெப்ப நிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்க வாய்ப்புஉள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். பகல் நேர அதிகபட்ச வெப்ப நிலை, 35 டிகிரி செல்ஷியஸ் ஒட்டி பதிவாகக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.