22.03.2025 – சிறிலங்கா
கணேமுல்ல சஞ்ஜீவவின் படுகொலை சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் 23 வயதுடைய ஜூலியன் மாதவன் என்ற மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாதம்பிட்டிய பொலிஸ் பிரிவில் வைத்து, கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் இந்த சந்தேக நபர் நேற்று (21) கைது செய்யப்பட்டார்.
நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்ற அறைகளை காட்டி, மனித படுகொலைக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, இதுவரை இந்த குற்றச் சம்பவம் தொடர்பாக 14 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.