23.05.2025 – திருச்சி
திருச்சி விமான நிலையத்தில் இருந்து, நேற்று, திருச்சி – சென்னை விமான போக்குவரத்தை துவக்கி வைத்த அவர், கூறியதாவது:
பிப்., 14ல், டில்லியில் உள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அலுவலகத்துக்கு நேரில் சென்று, உயர் அதிகாரிகளைச் சந்தித்து, திருச்சியில் இருந்து உள்நாட்டு விமான சேவைக்கான அவசியம் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தேன். அதை ஏற்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், சென்னைக்கு விமான சேவையை தொடங்கி உள்ளது.
இதுவரை, 37 பன்னாட்டு விமான சேவைகளை, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் திருச்சியில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. கூடுதலாக உள்நாட்டு போக்குவரத்தை தொடங்கியதால், திருச்சி மற்றும் 11 சுற்று வட்டார மாவட்ட மக்களின் தொழில் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.
போக்குவரத்து தொடர்புகளை மேம்படுத்துவது மிக முக்கியம் என்பதால், விமானம், ரயில், சாலை போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக விமான போக்குவரத்து துறை, ரயில்வே துறை, தேசிய நெடுஞ்சாலைத் துறையினருடன் இடைவிடாது பணியாற்றி வருகிறேன். மார்ச் 30ல் திருச்சி – மும்பை விமான சேவை தொடங்கப்பட உள்ளது.
இன்னும் பல உள்நாட்டு விமான சேவைகள், திருச்சியில் இருந்து விரைவில் தொடங்குவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. திருச்சியில் இருந்து பெங்களூரு, ஐதராபாத், கொச்சி, கோவா மற்றும் – டில்லிக்கு நேரடி விமான போக்குவரத்து தொடங்க உள்ளது.
கடந்த 15 ஆண்டுகளாக முடிவுக்கு வராமல் இருந்த திருச்சி விமான நிலைய ஓடுதளம் விரிவாக்கப் பணி 99 சதவீதம் முடிவடைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.