24.03.2025 – வாஷிங்டன்
அமெரிக்காவில் புதிதாக குடியேறுபவர்களுக்கு அதிபர் டிரம்ப் புதிய கோல்டு கார்டு திட்டம் ஒன்றை அறிவிதத்தையடுத்து ஒரே நாளில் ஆயிரம் கோல்டு கார்டு திட்டத்தின் கீழ் விசா வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். தினமும் அவர் வெளியிடும் புது புது அறிவிப்புகள் பரபரப்பை கிளப்பி வருகிறது. அமெரிக்கா மீது அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு அதிக வரி விதிப்பேன் என்று டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதற்கிடையே, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி உள்ளவர்களை கண்டறிந்து நாடு கடத்தும் பணியும் முடுக்கி விடப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவில் புதிதாக குடியேறுபவர்களுக்கு புதிய கோல்டு கார்டு திட்டம் ஒன்றை கடந்த பிப்ரவரிமாதம் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்
இதன்படி புதிதாக குடியேறுபவர்களுக்கு 5 மில்லியன் டாலர்களுக்கு (இந்திய மதிப்பு படி ரூ.43 கோடி) கோல்டு கார்டு விற்கப்படும். இந்த அட்டை கிரீன் கார்டின் பிரீமியமாக இருக்கும் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் மாளிகையான ஓவல் அலுவலகத்தின் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் கூறியதாவது:
டிரம்ப் அறிவித்த கோல்டுகார்டு திட்டத்தின் கீழ் ஒரே நாளில் ஆயிரம் கோல்கார்டு திட்டத்தில் விசா விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் கோல் கார்டு வாங்குவதற்காக வரிசை கட்டி நிற்கின்றனர். இதன் மூலம் கிரீன் கார்டு வைத்திருப்பது போன்று கோல்டு கார்டும் பயனுள்ளதாக இருக்கும். அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றதற்கு சமம். இத்திட்டம் மிகப்பரெிய வெற்றி பெற்றுள்ளது என்றார்.