28.03.2025 – இலங்கை
2025’ம் ஆண்டிற்கான டெங்கு ஒழிப்பு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
கம்பஹா, களுத்துறை, மாத்தறை, மாத்தளை, மட்டக்களப்பு, இரத்தினபுரி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களை மையமாகக் கொண்டு இந்த திட்டம் செயற்படுத்தப்படுகிறது.
இந்த மாவட்டங்களில் 37 உயர் ஆபத்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.