01.04.2025 – இலங்கை
போர் என்ற ரீதியில் தமிழினத்தை திட்டமிட்டு இன அழிப்பு செய்துள்ள பேரினவாத சிங்கள இராணுவத்தினருக்கு எதிராக பிரித்தானியா அரசு தடைகளை விதித்துள்ளமை தொடர்பில் முழு சிங்கள பேரினவாதிகளும் அவர்களின் அடிவருடிகளாக செயல்படும் நபர்களும் பிரித்தனியா அரசு கூறிய படி இங்கு அப்படி ஒரு சம்பவம் ஏதும் நடைபெற வில்லை தமிழர்கள் மீது சிங்கள அரசு இன அழிப்பு ஒன்றும் செய்யவில்லை என்று முதலை கண்ணீர் வடித்து வருகின்றனர் .
இந்நிலையில் பேரினவாத சிங்கள அரசு நடத்திய திட்டமிட்ட தமிழின அழிப்பிற்கு எதிராக பிரித்தானியா அரசு தடை விதித்துள்ளமை தொடர்பில் சிங்களபேரினவாதி விமல் வீரவங்ச பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் அருகில் தனது பரிவாரங்களுடன் (31.03.2025) போராட்டம் என்கின்ற பெயரில் கதறிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது
முக்கிய குறிப்பு
தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு நடத்தியது இன அழிப்பு இல்லையெனில் அப்போது எது இன அழிப்பு.?
சிங்கள பேரினவாத அரசு நடத்தியன் தமிழின அழிப்பில் மே மாதம் 2009 இல் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் 146,679 தமிழர்கள் வன்னி பிரதேசத்திலிருந்து வலிந்து கானாமல் ஆக்கப்பட்டார்கள்.
இவர்களை கண்டுபிடித்து தரும்படி உறவினர்கள் தமிழர் தாயக மாவட்டங்களில் போராட்டங்கள் நடாத்திவருகின்றார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.