01.04.2025 – கொழும்பு
இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரிகள் மீது பிரித்தானியா விதித்துள்ள தடைகளை கண்டித்து கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சவேந்திர சில்வா, வசந்த கரன்னாகொட மற்றும் ஜகத் ஜயசூரிய ஆகியோருக்கு விதிக்கப்பட்ட பயணத் தடைகள் மற்றும் சொத்து முடக்கங்களை நிராகரித்து, பிரித்தானிய வெளிவிவகாரச் செயலர் டேவிட் லாம்மிக்கு கடிதம் ஒன்றை அவர்கள் கையளித்தனர்.








