01.04.2025 – நாயாற்று கடற்பகுதி
கடலில் குளித்துக்கொண்டிருந்த 15 பெண்களில் மூவர் அலையில் சிக்கினர். அதில் இருவர் உயிரிழந்துள்ளனர் மற்றுமொரு பெண் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம், திங்கட்கிழமை (31) இடம்பெற்றுள்ளது.
உடையார்கட்டு பகுதியில் தையல் கற்கும் யுவதிகளும்,தையல் பயிற்சியாளர்களுமாக 15 பெண்கள் கெப்ரக வாகனத்தில் நாயாற்று கடற்பகுதிக்கு, திங்கட்கிழமை (31) வந்துள்ளனர்.
குறித்த பெண்கள் நாயாற்றுகடலில் குளித்து கொண்டிருந்த போது திடீரென மூன்று பெண்கள் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
நீரில் அடித்துச்செல்லப்பட்ட மூவரில் (47), (21) வயதுடைய இரு பெண்கள் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (20) வயதுடைய மற்றைய யுவதியொருவரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த யுவதி சடலமாக மீட்கபட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கபட்டவர் இருட்டுமடு உடையார்கட்டு பகுதியை சேர்ந்த சிவகுமார் வினுஷிகா என தெரியவந்துள்ளது.
நாயாறு கடலில் உயிரிழந்த யுவதியின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில், பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.