01.04.2025 – சென்னை
திருவண்ணாமலை, செய்யாறு அருகே போதை ஊசி போட்டுக்கொள்ள மறுத்த இளைஞர், கொலை செய்யப்பட்டு உள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து போதைப்பொருள் புழக்கம் குறித்து எச்சரித்து வருகிறேன். தி.மு.க., அரசு போதைப்பொருளை ஒழிக்க ஆபரேஷன் 2ஓ, 3ஓ, 4ஓ என ‘ஓ’ போட்டதை தவிர ஆக்கப்பூர்வமாக ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை.
முதல்வர் ஸ்டாலின், விளம்பர ஷூட்டில் தோன்றி, ‘போதையின் பாதையில் யாரும் செல்ல வேண்டாம்’ என்று வசனம் பேசினால் மட்டும் போதாது. போதைப்பொருள் புழக்கத்தை ஒழிக்க வேண்டும். அதுவே சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்துவதற்கான முதல்படி என்பதை ஸ்டாலின் உணர வேண்டும். இவ்வாறு இ. பி. எஸ்., கூறியுள்ளார்.