02.04.2025 – புதுடில்லி
சந்தேகத்திற்குரிய கப்பல்கள் கடற்பகுதியில் சுற்றித் திரிவதாக கடந்த மார்ச் 31ம் தேதி இந்திய கடற்படையினருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் கடலில் சந்தேகத்திற்கிடமான வகையில் சென்று கொண்டிருந்த கப்பல்களை, ஐ.என்.எஸ்., தர்காஷில் சென்ற கடற்படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மேலும், கடற்படையினருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மற்றும் மும்பையில் உள்ள கடற்படையினரின் செயல்பாட்டு மையத்தின் உதவியால், ஒரு பாய் மரக்கப்பலில் போதைப்பொருள் கடத்துவது தெரிய வந்தது.
இதையடுத்து, அதனை கப்பலை சிறைபிடித்த கடற்படையினர், அதில் இருந்த 2,386 கிலோ கஞ்சா மற்றும் 121 கிலோ ஹெராயின் உள்பட மொத்த்ம் 2,500 கிலோ போதைப்பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றினர். தொடர்ந்து, கப்பலை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்ட அதிகாரிகள் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.