
08.04.2025 – ரியாத்
2024ம் ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் அதிக வெப்பம் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து பதிவு செய்யப்படாத யாத்ரீகர்கள் ஹஜ்ஜில் பங்கேற்பதை தடுக்க கடும் விதிகளை நடைமுறைப்படுத்த சவுதி அரேபியா முடிவு செய்தது.
அதன் ஒரு கட்டமாக இம்முறை இந்தியா உள்பட 14 நாடுகளின் விசாக்களுக்கு அனுமதி வழங்கும் பணியை நிறுத்த சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஏப்.13க்கு பின்னர் இந்நடவடிக்கை அமலாக இருக்கிறது. அதன் பின்னர் ஹஜ் யாத்திரை முடியும் வரை, பட்டியலிடப்பட்ட 14 நாடுகளுக்கு விசா தரப்படாது.
இந்தியாவுடன் இடம்பெற்றுள்ள மற்ற நாடுகளின் விவரம் வருமாறு;
எகிப்து
பாகிஸ்தான்
ஏமன்
துனிஷியா
மொராக்கோ
ஜோர்டான்
நைஜீரியா
அல்ஜீரியா
இந்தோனேசியா
ஈராக்
சூடான்
வங்கதேசம்
லிபியா
பகிரவும்: