13.04.2025 – திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருகே நேற்று இரவு காரும், அரசுப் பஸ்சும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து சோமாசிபாடி அடுத்த காட்டுக்குளம் பகுதி அருகே நள்ளிரவு 3:30 மணிக்கு நடந்துள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த புதுச்சேரியை சேர்ந்த, சைலேஷ், சதீஷ் குமார், ஸ்டாலின், சாருஷ் ஆகிய 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.