
20.04.2025 – ஜெய்ப்பூர்
பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 36- வது லீக் போட்டி ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்றது இதில் ராஜஸ்தான், லக்னோ அணிகள் மோதின .முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு செய்தது. கடந்த போட்டியில் காயமடைந்த ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், இந்த ஆட்டத்தில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ரியான் பராக் கேப்டனாக செயல்படுகிறார். 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி ராஜஸ்தானின் இம்பேக்ட் வீரராக களமிறங்கியுள்ளார்.
பேட்டிங் செய்ய களமிறங்கிய லக்னோ அணிக்கு எதிர்பார்த்தபடி தொடக்கம் அமையவில்லை. மார்ஷ் (4), நிகோலஷ் பூரன் (11), பன்ட் (3) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். மறுமுனையில் மார்க்ரம் மட்டும் சீராக ரன் குவித்து வந்தார்.
அவருடன் ஜோடி சேர்ந்த இம்பேக்ட் வீரர் பதோனி நிதானமாக ஆடி ரன்களை விளாசினார். 31 பந்துகளில் அரைசதம் அடித்த மார்க்ரம், 66 ரன்களில் அவுட்டானர். அவரைத் தொடர்ந்து, இளம் வீரர் பதோனியும் அரைசதம் அடித்த அடுத்த பந்திலேயே விக்கெட்டை இழந்தார்.
இறுதியில் சந்தீப் ஷர்மா வீசிய கடைசி ஓவரில் லக்னோ வீரர் அப்துல் சமாத் 4 சிக்ஸர்களுடன் 27 ரன்களை குவித்தார். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தானை பொறுத்தவரையில் ஹசரங்கா 2 விக்கெட்டுகளும், சந்தீப் ஷர்மா, தேஷ்பாண்டே, ஆர்ச்சர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
181 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணியில் வைபவ் சூரியவன்ஸி 26 ரன்களில் அவுட்டானார். 17 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் என இருந் நிலையில் 3-வது விக்கெட்டாக யாஷ்வி ஜெய்ஸ்வால் 74 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்., 39 ரன்கள் எடுத்திருந்த ரியான் பரோக்கும், 12 ரன்கள் எடுத்த ஹெட்மயரும் அவுட்டாகினர். இறுதியில் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு ராஜஸ்தான் அணி 178 ரன்கள் எடுத்தது. ஜூரேல் 6 ரன்களிலும், துபே 2 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.
பகிரவும்: