
21.04.2025 – கடலூர்
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது:
ஒரு தலைவன் என்பவன் இந்த மண்ணையும், இந்த மக்களையும் முழுமையாக நேசிக்க வேண்டும். நம்ப வேண்டும். நாங்கள் மக்களை முழுமையாக நம்புகிறோம். நேசிக்கிறோம். மக்களுக்காக மக்களோடு சேர்ந்து நிற்கிறோம்.
ஆட்டத்தை பார்ப்பீர்கள்!
கூட்டணி தேவையில்லை உயர்ந்த கொள்கையும், உயர்ந்த நோக்கமும் தான் தேவை. சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீர்கள், பொறுத்திருந்து பாருங்க. என் ஆட்டம் எப்படி இருக்குன்னு, வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எனது ஆட்டத்தை பார்ப்பீர்கள். 5வது முறையாக தனித்துப் போட்டியிடுவோம். அரசியல் வியாபாரம் செய்ய வந்தவர்கள் நாங்கள் அல்ல.நா.த.க.,வினர் வேறு கட்சிக்குப் போவதற்கு பதில் என் தம்பி (விஜய்) கட்சிக்குப் போகட்டும்; அவர் சேர்த்துக்கொள்ள மாட்டார் என்ற தைரியத்தில் சொல்கிறேன்.
தத்துவம், நோக்கம்
அண்ணனையே இந்த பாடு படுத்திவிட்டார்கள் என்று நினைத்து அவரும் உங்களைச் சேர்த்துக்கொள்ள மாட்டார். பா.ம.க., மாநாட்டிற்கு என்னை அழைத்தால் மேடையில் ஏறிப் பேசுவதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை.எனக்கு ஒரு தலைவன்; எனக்கு ஒரு தத்துவம்; எனக்கு ஒரு நோக்கம்; எனக்கு ஒரு கொள்கை; மொழி- இனத்தை முன்னிறுத்தும் அரசியல்; வேளாண்மையை முன்னிறுத்தும் தற்சார்பு பசுமை பொருளாதாரம் என இருக்கிறது. இந்த கோட்பாடுகள் சரியானவை என நினைத்து எங்களுடன் இணைந்து நிற்க வந்தால் யோசிப்போம்.
சீட்டு,நோட்டு
அதுவும் இந்திய- திராவிட கட்சிகளைத் தவிர்த்து யாராவது கூட்டணிக்கு வந்தால் யோசிக்கலாம். ஆனால் யாரும் வரமாட்டார்கள். கூட்டணி என்றால் சீட்டு, நோட்டு (பணம்) வேண்டும் என்பர். என்னிடம் இந்த இரண்டுமே இல்லை. ஆகையால் கூட்டணி குறித்து கேள்விகளை கேட்காமல் விட்டுவிடுங்கள். இவ்வாறு சீமான் கூறினார்.
பகிரவும்: