
21.04.2025 – கோல்கட்டா
பிரீமியர் லீக் தொடரின் 39 வது போட்டி இன்று மேற்கு வங்கம் மாநிலம் கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டனில் நடைபெற்றது. இதில் குஜராத் அணியும், கோல்கட்டா அணியும் மோதுகிறது.
டாஸ் வென்ற கோல்கட்டா அணி, பீல்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து, பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் நிதானமாக ஆடத்துவங்கினர்.
சாய் சுதர்சன், சுப்மன் கில் அரை சதம்: கோல்கட்டா கேப்டன் கில் சிறப்பாக விளையாடி 3 சிக்சர் மற்றும் 10 பவுண்டர்கள் அடித்து, 55 பந்துகளில் 90 ரன்களுக்கு அரோரா பந்தில் ஆட்டமிழந்தார்.
சுப்மன் கில்லைத் தொடர்ந்து சாய் சுதர்சன் 33 பந்துகளில் 50 ரன்கள் விளாசினார். இறுதியில் ரசல் பந்தில் 52 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த ராகுல் டிவட்டியா ரன் ஏதும் எடுக்காமல் ஹர்சித் ராணா பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ஜோஸ் பட்லரும் ஷாருக்கானும் ஆட்டமிழக்காமல் முறையே 41, 11 ரன்கள் சேர்த்தனர். இறுதியில் 20 ஓவர் முடிவில், குஜராத் அணி, 3 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது.கோல்கட்டா அணியின் அரோரா, ஹர்சித் ராணா மற்றும் ரசல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
199 ரன்களைவெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய கோல்கட்டா அணியில் ரஹமானுல்லா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். சுனில் நரைன் 17 ரன்களிலும், ரகானே 50 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வெங்கடேஷ் ஐய்யர் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தார். அப்போது கோல்கட்டா அணி 13 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்களை எடுத்திருந்தது. 42 பந்துகளில் 98 ரன்கள் தேவை என்ற நிலையில் ரிங்கு சிங்கும், ஆன்ட்ரி ரஸ்ஸலும் விளையாடினர்.
இதில் ஆன்ட்ரி ரஸ்சல் 21 ரன்களிலும், ராமன்தீப்சிங் ஒரு ரன்னிலும், மெயின் அலி ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்ததால், கோல்கட்டா அணி 18 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து தடுமாறியது. தொடர்ந்த ரகுவன்ஷி 8 -வது விக்கெட்டை பறிகொடுத்தார்.
குஜராத் அணி சார்பில் கிருஷ்ணா, ரஷீத்கான் தலா இரு விக்கெட்டுகளை எடுத்தனர்.
இறுதியில் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது கோல்கட்டா அணி. இதையடுத்து 39 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.
பகிரவும்: