
23.04.2025 – வெல்லம்பிட்டி
இதேவேளை, டொன் பிரியசாத் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கொலையை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலைச் சேர்ந்த காஞ்சிபான இம்ரானின் சகாக்கள் செய்திருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
செவ்வாய்க்கிழமை (22.04.2025) டொன் பிரியசாத், வெல்லம்பிட்டியிலுள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பகிரவும்: