
23.04.2025 – யாழ்.
மாமனிதர் கி.சிவநேசன் அவர்களது 17’ம் ஆண்டு நினைவுப் பேருரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் (20.04.2025) யாழ். இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது.
ஈகைச்சுடரினை அவரின் மகன் திருக்குமார் ஏற்றி மாமனிதரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து தமிழ்த்தேசிய அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் மாமனிதரின் உறவினர்கள் மலர்மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந் நினைவுரை நிகழ்வில் சிறப்புரையை தமிழ்தேசியமக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நிகழ்தினார்.
நினைவுப் பகிர்வுகளை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சிறீகாந்தா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஊடகப் பேச்சாளர் கனகரட்ணம் சுகாஸ், மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாண அமைப்பாளர் பொன் மாஸ்டரும் நிகழ்தினார்கள்.
இறுதியாக ஏற்புரையினை மாமனிதரின் மகன் திருக்குமார் நிகழ்தினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களான உதயன் பத்திரிகை நிறுவுனரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணபவன் மற்றும் தமிழ்தேச பசுமைக்கட்சி தலைவர் ஐங்கரநேசனும் கலந்துகொண்டார்கள்.
அத்தோடு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் , ஆதரவாளர்கள், தமிழ்த்தேசிய சிந்தனையாளர்கள் பொதுமக்களோடு குறிப்பாக மாமனிதரின் ஊரான கரவட்டி கிழக்கிலிருந்தும் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு மாமனிதரின் நினைவேந்தலை சிறப்பித்தனர்.

































பகிரவும்: