25.04.2025 – புது டெல்லி
இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதிப்படையின் தளபதி ஓய்;வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அமர் ஜித் சிங் கல்கட் கடந்த செவ்வாய்கிழமை காலமானார் என இந்தியாவின் த பிரிண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து பிரிண்ட் மேலும் தெரிவித்துள்ளதாவது.கடந்த செவ்வாய்கிழமை காலமான கல்கட்டின் உடல் அன்றைய தினமே முழுமையான இராணுவமரியாதையுடன் புதுடில்லியில் தகனம் செய்யப்பட்டது.
அவரது இறுதி நிகழ்வில் அவரது குடும்பத்தினர் சிரேஸ்ட அதிகாரிகள் அவருடன் இணைந்து இராணுவத்தில் சேவை புரிவதன் எழுச்சியையும் வீழ்ச்சியையும் அனுபவித்த சகாக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கூர்க்கா ரைபிள்ஸ் படைப்பிரிவில் இராணுவவீரராக தனது பணியை ஆரம்பித்த ஜெனரல் கல்கட்டின் புகழ்பெற்ற வாழ்க்கை இந்திய இராணுவத்தின் வரலாற்றின் பல புகழ்பெற்ற நிகழ்வுகளை உள்ளடக்கியது.
1971ம் ஆண்டு இந்திய பாக்கிஸ்தான் போரின் போது அவர் கூர்க்கா ரைபிள்ஸ் படைப்பிரிவிற்கு தலைமை தாங்கினார்.
மிகவும் கடுமையான சம்ப் மோதலின் போது வெளிப்படுத்திய மூலோபாய நுண்ணறிவு மற்றும் தலைமைத்துவ பண்புகளிற்காக பாராட்டை பெற்றார்.
எனினும் 1987 முதல் 1990 வரை இந்திய அமைதிப்படையின் தளபதியாக செயற்பட்டமைக்காக அவர் அதிகளவு நினைவுகூரப்படுகின்றார். ஒப்பரேசன் பவானிற்கு அவரே தலைமை தாங்கினார்.
இந்த முக்கியமான நடவடிக்கையின் போது அவரது முன்மாதிரியான தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் விதத்தில் போர்க்கால சேவைக்கான இந்தியாவின் முதன்மை விருதான சர்வோத்தம் யுத்தசேவா பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது.
மிகவும் சிக்கலான காலகட்டத்தில் அவர் இலங்கையில் இந்திய அமைதிப்படையை வழிநடத்தினார் என தெரிவித்துள்ள முன்னாள் இராணுவ அதிகாரி ஓய்வுபெற்ற லெப் ஜெனெரல் ஹர்தேவ் சிங் லிடெர்இஒப்பரேசன் பவானின் போது நான் அவரது தலைமையின் கீழ் பட்டாலியனின் தளபதியாக பணியாற்றினேன்இஅவர் எங்களுடைய பட்டாலியனை மிகச்சிறந்த பட்டாலியனாக கருதுவார்இஅவர் அரசியல் இராணுவமூலோபவாதிக்கான சிறந்த எடுத்துக்காட்டு என குறிப்பிட்டுள்ளார்.