
செளத்தென்ட் அருள்மிகு கோணேச்சுரர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா (புதுக்கோவில் கடவுள் மங்கலம்) 09 மே 2025 - 11 மே 2025.
25.04.2025 – செளத்தென்ட்

சிவனடியார்களுக்கு வணக்கம்,
திருச்சிற்றம்பலம்
“உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நிர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்”
திருச்சிற்றம்பலம்
செளத்தென்ட் அருள்மிகு கோணேச்சுரர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா (புதுக்கோவில் கடவுள் மங்கலம்)
காலம்: 09 மே 2025 – 11 மே 2025
இடம்: 2 Church Walk, Rochford, Southend-On-Sea, Essex, SS4 1NL.
முற்றுமுழுதாக நம் தாய்மொழி தமிழில் நம் இறையை வழிபட உருவாக்கம் பெற்றதுதான் “செளத்தென்ட் சிவன் திருக்கோவில்” ஆகும்.
இங்கிலாந்து நாட்டின் தென் முனையான செளத்தென்ட் மாநகரில் புதிதாக அமைக்கப்பட்ட திருக்கோவிலில் எழுந்தருளி, மெய்யடியார்களுக்கு அருள்பாலிக்க அமர்ந்தருள்கிறார், அருள்மிகு கோணேச்சுரர் பெருமான்.
எதிர்வரும் மே மாதம் 09ம் தேதி, மூத்த பிள்ளையார் முதல் வேள்வியுடன் ஆரம்பிக்கும் நிகழ்வுகள், தொடர்ந்து திருவெண்ணெய்க் காப்புடன் மூன்றாம் நாள் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா காண இறையருள் கைகூடியுள்ளது.
இவ் மூன்று நாட்களும் நம்மொழியில் நம் இறையைப் போற்றித் தொழுவதற்கு என்ன தவம் செய்தோமோ.. “ஓம் சிவாய நம”
இந்நாட்களில் இறையை மெய்யுருகி வழிபடுவதற்கு உங்களால் முடிந்த வெண்ணெய், பால், பூமாலை, மலர்கள் போன்ற திரவியங்களை வழங்கி எம்பெருமான் சிவனின் திருவடியைப் போற்றி வணங்கிட அனைவரும் வாருங்கள் என அன்புடன் அழைக்கின்றோம்.
இங்ஙனம்,
அருள்மிகு கோணேச்சுரர் திருக்கோவில் நிர்வாக சபை,
சைவநெறிக்கூடம்,
செளத்தென்ட்.
பகிரவும்: