28.04.2025 – சென்னை
பா.ம.க., செயல் தலைவர் அன்புமணி அறிக்கை:
தமிழகத்தில் காவல் துறை சரிபார்ப்பு அறிக்கை தயாரித்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கும் நடைமுறை, ஆட்கள் மூலமாகவே செய்யப்படுகிறது. இதனால் தேவையற்ற காலதாமதம் ஏற்படுகிறது. காவல் துறை சரிபார்ப்பு அறிக்கை வழங்குவது, மிக முக்கியமான பணி.
அதில் செய்யப்படும் தாமதத்தால், பணியாளர்கள் துவங்கி நிறுவனங்கள் வரை, அனைத்து தரப்பினருக்கும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதை களைய வேண்டும். தமிழகத்தில் காவல் துறை சரிபார்ப்பு அறிக்கை தாக்கல் செய்யும் நடைமுறையை டிஜிட்டல்மயமாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.